கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/O

விக்கிமூலம் இலிருந்து

O


object attribute: பொருளின் பண்புக்கூறு.
object base : இலக்கு தளம்; பொருள் தளம்.
object designator : இலக்கு நியமிப்பாளர்; பொருள் வடிவமைப்பாளர்.
object database management group: பொருள்நோக்கு தரவுத்தள மேலாண்மைக் குழு; : பொருள்சார் தரவுத் தளங்களுக்கான தர வரையறைகளை வளர்த்தெடுக்கவும் பொருள்நோக்கு தரவுத் தளங்களுக்கான இடைமுகங்களை வரையறுக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு.
objective-C : அப்ஜெக்டிவ்-சி : சி-மொழியின் பொருள்நோக்கு அடிப்படையிலான பதிப்பு. 1984இல் உருவாக்கப்பட்டது. பிராட் காக்ஸ் (Brad Cox) என்பவர் உருவாக்கினார். நெக்ஸ்ட் (NeXT) இயக்க முறைமையோடு இயைந்த நிரலாக்க மொழியாக பரவலாக அறியப்படுகிறது.
object management group : ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்; பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளுக்கான பொது தர வரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு. 1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பொருள் மேலாண்மைக் கட்டு மானம் (Object Management Architecture - OMA) என்கிற தரக் கோட்பாட்டையும் இது வரையறுத்துள்ளது. பகிர்ந்தமை சூழல்களுக்குரிய தரப்படுத்தப்பட்ட (object model) ஆகும் இது.
object model : பொருள் மாதிரியம் : சி++ போன்ற ஒரு பொருள்நோக்கு மொழிக்கான கட்டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது. கருத்தியல் (abstraction), உடன்நிகழ்வு (concurrency), உறைபொதியாக்கம் (encapsulation), மரபுரிமம் (inheritance), தொடர்நீடிப்பு (persistence), பல்லுரு வாக்கம் (polymorphism), வகைப்பாடு (typing) போன்ற கோட்பாடுகளைக் கொண்டது.
object-oriented computer : பொருள் நோக்குக் கணினி.
object-oriented operating system : பொருள்நோக்கு இயக்க முறைமை : பொருள் அடிப்படையிலான இயக்க முறைமை. பொருள்நோக்கு வடிவாக்க முறையில் அயலர்கள் மென் பொருள்கள் உருவாக்குவதற்கு உகந்த வகையில் இது வடிவமைக்கப் பட்டிருக்கும்.
object oriented programming languages : பொருள்நோக்கு நிரலாக்க மொழிகள்.
object orientation: இலக்கு நோக்கிய; பொருள்சார்ந்த.
object-oriented development : பொருள்நோக்கு மேம்பாடு.
object reference : பொருள் குறிப்பி; பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒர் ஆப்ஜெக்ட்டின் நினைவக இருப்பிடத்தை குறிக்கும் முகவரி.
object relational server : பொருள் உறவுநிலை வழங்கன் : இது ஒரு தரவுத் தள வழங்கன் கணினி. ஒர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள
சிக்கலான தரவினங்களை பொருள் நோக்கு முறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.

object resource : பொருள் வளம்.

object type : பொருள் வகை.

object type inheritance : பொருள்வகை மரபுரிமம்.

object wrapper: : பொருள் மேலுறை: பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளில் பேசப்படுவது.

oblique : சாய்வு : ஒரு கணினியில் அல்லது அச்சுப் பொறியில் உண்மையான சாய்வு எழுத்துரு (Italic Font) இல்லாதபோது, ஒரு ரோமன் எழுத்துருவைச் சற்றே சாய்த்து சாய்வு எழுத்துருபோல ஆக்கிக் கொள்கின்ற முறையை இவ்வாறு கூறுவர்.

OC3 : ஓசி3 : ஒளிவச் சுமப்பி3 என்று பொருள்படும் Optical Carrier 3 என்பதன் சுருக்கம். சோனட் (SONET) எனப்படும் அதிவேக ஒளியிழை தகவல் பரப்பு அமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒளிச்சமிக்கை மின் சுற்றுகள் பலவற்றில் இதுவும் ஒன்று. ஒசி3 வினாடிக்கு 155.52 மெகா பிட் சமிக்கைகளைச் சுமந்து செல்கிறது. சோனட் மற்றும் ஐரோப்பிய முறையான எஸ்டிஹெச் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வேகம் குறைந்தபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

octal, binary coded : இருமக் குறி முறை எண்மம்.

octal digit : எண்ம இலக்கம்.

octal notation : எண்மக் குறிமானம்.

octal number : எண்ம எண்.

OCX : ஓசிஎக்ஸ் : ஒஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம். ஒஎல்இ மற்றும் காம் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப்பயன்பாட்டுக்கு விரும்பு கின்ற சில பண்புக் கூறுகளை அளிக்கும் ஒரு கட்டுப்பாட்டினை இது உருவாக்கித் தருகிறது. ஒசிஎக்ஸ் தொழில்நுட்பம் வேறுபட்ட பணித் தளங்களில் செயல்பட வல்லது. 16-பிட், 32 பிட் இயக்க முறைமைகளிலும், பல்வேறுபட்ட பயன்பாடுகளிலும் பயன்படுத்தவல்லது. விசுவல் பேசிக் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடிந்த விபிஎக்ஸ் (Visual Basic Custom Control) தொழில்நுட்பத்தின் வாரிசாக வந்தது. ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையாக விளங்குவது. ஒசிஎக்ஸ்-கள் விசுவல் சி++ மொழியில் எழுதப்பட்டாலும் வேறு பல மொழிகளிலும் எழுத முடியும். 1996 ஒஎல்இ கன்ட்ரோல் வரன்முறையில் இடம்பெற்றுள்ள ஓசிஎக்ஸ் தொழில்நுட்பத்தை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ODBC : ஓடிபிசி : திறந்த தரவுத்தள இணைப்புநிலை என்று பொருள்படும் Open Database Connectivity என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்திலுள்ள ஒரு தரவுத் தளத்தை விண்டோஸ் பயன்பாடுகள் அணுகுவதற்கு ஒரு பொதுவான வழிமுறையை வழங்கும் இடைமுகம் ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் உருவாக்கியது.

ODBC Data sources : ஒடிபிசி தரவு மூலங்கள்.

office application : அலுவலகப்பயன்பாடுகள்.

office links : அலுவலகத் தொடுப்புகள்.

offline navigator : அகல்நிலை வழிச்செலுத்தித் அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப்பக்கங்கள், செய்திக் குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களிலுள்ள கருத்துரைகள் - இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.

off page connector : தொடர்பிலா பக்க இணைப்பி.

ohm: ஓம் : மின்சாரத் தடையை அளப்பதற்கான அலகு. ஒரு மின் கடத்தியின் இருமுனைகளுக்கிடையே 1 வோல்ட் மின்னழுத்தம் தரப்படும்போது அதன் வழியே பாயும் மின்னோட்டம் 1 ஆம்பியராக இருப்பின் அக்கடத்தி ஏற்படுத்தும் மின்தடை 1 ஓம்.

.oh.us: ஓச்.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ok : சரி.

ok/cancel : சரி/விடு.

.ok.us: ஓகே.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒக்லஹாமா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

OLAP database : ஓஎல்ஏபீ தரவுத் தளம் : நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று Online Analytical Processing Database சுருக்கம். வழக்கமான உறவுநிலைத் தகவல் தளங்களைவிட அதிகச் சிக்கலான வினவல்களைக் கையாளும் திறன்படைத்த ஓர் உறவு நிலைத் தரவுத் தளம். தகவல்களை பல்பரிமாண முறையில் அணுக முடியும். அதாவது தகவல்களை பல்வேறு தேர்வு விதிகளின் அடிப்படையில் பார்வையிட முடியும். மிகவும் தீர்க்கமான கணக்கீட்டுத் திறன் உண்டு. சிறப்புத் தன்மை வாய்ந்த சுட்டுவரிசை (indexing) நுட்பங்கள் உள்ளன.

OLE : ஒஎல்இ; ஒலே : பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு தொழில்நுட்பம். படம் வரையும் மென்பொருள் கொண்டு ஒரு படம் வரையப்பட்டுள்ளது. அது ஒரு படிமக்கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது. சொல்செயலி மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் படிமக்கோப்புக்கான தொடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனில், படமானது ஆவணத்தின் ஒர் அங்கமாகவே தோற்றமளிக்கும். தொடுப்புள்ள படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணத்திலுள்ள படத்திலும் பிரதிபலிக்கும். இதனையே "பொருள் தொடுப்பு" என்கிறோம். படத்தை நகலெடுத்து ஆவணத்தில் ஒட்டிவிடுவதை பொருள் உட்பொதிப்பு என்கிறோம். மூலப் படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணப் படத்தில் பிரதிபலிக்காது. படத்தை மீண்டும் உட்பொதிக்க வேண்டும்.

OLTP : ஒஎல்டீபீ : நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்ட உடனேயே அவை பரீசீலிக்கப்பட்டு முதன்மைக் கோப்புகளின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுவிடும். நிதியக் கணக்கு வைப்புகளுக்கும், சரக்குக் கையிருப்பு மேலாண்மைக்கும் ஒஎல்டீபீ மிகவும் பயனுள்ளது.

.om : ஓம்: ஓர் இணைய தள முகவரி ஒமன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்யெர்.

OMA : ஓஎம்ஏ : பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை. ஓஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.

one address : ஒற்றை முகவரி.

one gate :ஒரு வாயில்.

one-off : ஒன்றுமட்டும் : 1. ஒரு பொருளை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தயாரிக்கும் முறைக்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒன்று என்ற முறையில் தயாரிப்பது. 2. சிடி ரோம் எழுதும் பொறி ஒன்றில் ஒரு நேரத்தில் ஒரு நகல் மட்டுமே உருவாக்கும் முறை.

online analytical processing : நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம்.

online banking : நிகழ்நிலை வங்கி முறை.

online community : சமூகம் : நிகழ்நிலைச் சமூகம்: 1. இணைய மற்றும் வையவிரி வலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2. தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசியல் மன்றங்களில் விவாதத்திற்காக எடுத்துரைக்கின்ற மக்கள் குழு. 3. ஒரு குறிப்பிட்ட செய்திக் குழு, அஞ்சல் பட்டியல், எம்யுடி, பிபிஎஸ் மற்றும் பிற நிகழ்நிலை மன்றத்தை அல்லது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

online fonts : நிகழ்நிலை எழுத்துருக்கள்.

online information service : நிகழ்நிலைத் தகவல் சேவை : தரவுத்தளங்கள், கோப்புக் காப்பகங்கள், கலந்துரையாடல்கள், அரட்டைக் குழுக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புகளிலுள்ள தகவல்களை தொலைபேசி அல்லது தனித்த தகவல் தொடர்பு இணைப்பு அல்லது இணையம் வழியாக அணுகுவதற்கு வசதி செய்துதரும் வணிகமுறை.

பெரும்பாலான நிகழ்நிலை தகவல் சேவை நிறுவனங்கள் தத்தமது சொந்த சேவைகளை மட்டுமின்றி பொதுவான இணையத் தொடர்பையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. அமெரிக்கா ஆன்லைன், காம்புசெர்வ், மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் ஆகியவை அமெரிக்காவில் நுகர்வோருக்கான மிகப்பெரும் நிகழ்நிலைத் தகவல் சேவை நிறுவனங்கள் ஆகும்.

online state : நிகழ்நிலை நிலைமை : ஓர் இணக்கி (மோடம்) இன்னோர் இணக்கியுடன் தகவல் தொடர்பு மேற்கொண்டிருக்கும் நிலை.

online transaction processing : நிகழ்நிலை பரிமாற்றச் செயலாக்கம்.

on/off : நிகழ்/அகல்.

on the fly : ஓட்டத்திலேயே; இயக்கத்திலேயே : இயல்பான செயல்பாட்டுக்கு இடையுறு விளைவிக்காமலே அதன் இயக்கத்தை நிறுத்தாமலேயே தேவையான ஒரு பணியையோ ஒரு செயலாக்கத்தையோ மேற்கொள்வதை இவ்வாறு குறிப்பர். எடுத்துக்காட்டாக, ஒரு ஹெச்டீஎம்எல் கோப்பினை இயக்கத்திலேயே திருத்த முடியும் என்று கூறுவதுண்டு. ஏனெனில் ஓர் வலைத்தளத்தை மூடாமலேயே அத்தளத்திலுள்ள ஒரு வலைப்பக்கத்தின் (ஹெச்டீஎம்எல் ஆவணத்தின்) உள்ளடக்கத்தை மாற்றியமைக்க முடியும்.

on web page : வலைப் பக்கத்தில்,

opcode : செய்பணிக் குறிமுறை.

open an existing database: இருக்கும் தரவுத் தளத்தை திற.

open command : திற ஆணை.

open containing folder : உள்கொண்ட கோப்புறை திற.

open database: தரவுத் தளத்தைத் திற.

OpenDoc : ஓப்பன்டாக் : பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface). வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வழிவகுக்கிறது. ஒஎல்இ-யைப் போன்றே படிமங்கள், ஒலி, ஒளிக்காட்சி, பிற ஆவணங்கள், பிற கோப்புகள் ஆகியவற்றை உட்பொதித்து அல்லது தொடுப்பேற்படுத்தி ஆவணம் உருவாக்க ஒப்பன்டாக் அனுமதிக்கிறது. ஆப்பிள், ஐபிஎம், ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப் மற்றும் எக்ஸ் கன்சோர்ட்டியம் ஆகியவை இணைந்த கூட்டணி ஒப்பன்டாக்கை ஆதரிக்கிறது.

Open Financial Connectivity : திறந்தநிலை நிதியியல் இணைப்பு : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வகுத்துள்ள வரன்முறை. மின்னணு வங்கிச் சேவைகளுக்கும் மைக்ரோசாஃப்ட் மணி (Microsoft Money) என்னும் சொந்த நிதிமென்பொருளுக்கும் இடையேயான ஒர் இடைமுகம் ஆகும்.

Open Group : ஓப்பன் குரூப்; திறந்தநிலைக் குழு : கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகியோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு. பல்தரப்பட்ட விற்பனையாளர்களின் தகவல் அமைப்பை வளர்த்தெடுப்பதே இதன் நோக்கம். 1996இல் ஓப்பன் குரூப் நிறுவப்

பட்டது. ஒப்பன் சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் மற்றும் எக்ஸ்/ ஒப்பன் கம்பெனி லிமிடெட் இரண்டும் இணைந்து இக்கூட்டமைப்பு உருவானது.

opening a file : கோப்புத் திறத்தல்.

open message : திறந்த செய்தி; வெளிப்படைச் செய்தி,

OpenMPEG Consortium : ஓப்பன்எம்பெக் கூட்டமைப்பு : எம்பெக் தரவரையறைகளை பயன்பாட்டில் மிகுவிப்பதை நோக்கமாகக்கொண்ட, வன்பொருள், மென்பொருள் தயாரிப்பாளர்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு.

open option : சிறந்த விருப்பத் தேர்வு.

open software foundation : திறந்த நிலை மென்பொருள் கழகம்.

open standard : திறந்தநிலைத் தர வரையறை : ஒரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரலின் பண்புக்கூறுகளை விவரிக்கும் வரன்முறைகள். பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் குறுக்குச் செயலாக்கத்தை அதாவது ஓர் இயக்கமுறைமையில் செயல்படுவது இன்னோர் இயக்கமுறைமையிலும் செய்யப்படுவதை (Interoperability) ஊக்குவித்து, புதிய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுக்க உதவவே, இந்தத் திறந்த நிலைத்தர வரையறைகள் வெளியிடப்பட்டன.

open system interconnection: திறந்தவெளி முறைமை இணைப்பு: திறந்த அமைப்பு இடைத் தொடுப்பி.

operating system disk: இயக்க முறைமை வட்டு.

operation, arithmatical : எண்கணித செயற்பாடு.

operation, binary arthmatic : இருமகணக்கீட்டு செயற்பாடு.

operation, binary boolean : இருமபூலியன் செயற்பாடு.

operation, complementary : நிரப்பல் செயல்பாடு.

operation, computer : கணினிச் செயல்பாடு.

operation, if-then : அவ்வாறெனில் செயல்பாடு.

operation, logical : தருக்கச் செயல்பாடு.

operation, NOR : இல் அல்லது செயல்பாடு.

operations research : செயல்பாட்டு ஆய்வியல்; இயக்க ஆய்வியல்: வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை. இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலங்களில் இது உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் போரின்போது இராணுவச் செயல்பாடுகளை மேம்படுத்துவதெற்கென்றே இவ்வாய்வியல் முறை பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னரே வணிகம் மற்றும் தொழிலகங்களுக்கும் பரவியது. ஓர் அமைப்பை அல்லது செயல் முறையை சிறு பாகங்களாகப் பிரித்து அவற்றுக்கிடையேயான உறவாட்டத்தை நுணுகி ஆய்ந்து ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த இவ்வாய்வுமுறை பயன்படுத்தப்பட்டது. இவ்வாய்வு முறை உயிர்நாடிப்

பாதைமுறை (Critical Path Method), புள்ளியியல் (Statistics), நிகழ் தகவியல் (Probability), தகவல் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

operator associativity: செயற்குறி இணைவு : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமையுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் செயற்குறிகளின் பண்புக் கூறு. இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்கலாம். பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும். சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

operator, machine : பொறிச் செயல்பாட்டாளர்; பொறி இயக்குநர்.

operator overloading : செயற்குறிப் பணிமிகுப்பு: ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம். எடுத்துக்காட்டாக, + என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும். அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning") எனில், இதனைச் செயற்குறி பணிமிகுப்பு என்கிறோம். இங்கே + என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும். அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக்கின்றன. சி, ஜாவா போன்ற மொழிகள் இக்கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை.

operator precedence : செயற்குறி முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் இடம்பெறும்போது அவை எந்த வரிசையில் இயக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை. அதிக முன்னுரிமை உள்ள செயற்குறி முதலில் செயல்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, 5x4+3 என்ற கணக்கீட்டில் முதலில் 5x4 செயல்பட்டு 20 ஆகும். பிறகு 20+3 செயல்பட்டு 23 ஆகும். 5+4x3 என்று இருப்பின் முதலில் 4x3=12 ஆகிப் பின் 5+12=17 ஆகும். பொதுவாக x, / ஆகியவை முதலிலும், +,- ஆகியவை அடுத்தும் செயல்படுத்தப்படும். ஆனால், கணக்கீட்டுத் தொடரில் பிறை அடைப்புக் குறிகள் இருப்பின் அவற்றுள் இருக்கும் கணக்கீடே எல்லாவற்றுக்கும் முன்பாகச் செயல்படும். 5x(4+3) என்று இருப்பின் 4+3=7 ஆகிப் பிறகு 5x7=35 ஆகும்.

optical character recognition: ஒளிவ எழுத்து உணர்வு : தாளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளை அவற்றின் இருள், ஒளித் தோரணிகளை ஆய்வு செய்து அவ்வெழுத்துகளின் வடிவமைப்பைத் தீர்மானிக்கும் ஒரு மின்னணுச் சாதனத்தின் செயல்பாடு. வருடுபொறி அல்லது படிப்பி எழுத்துகளின் வடிவத்தைத் தீர்மானித்த பிறகு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துகளுடன் தோரணியை ஒப்பீடு செய்யும் எழுத்துணர் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அவை கணினி எழுத்துகளாக மாற்றப்படுகின்றன. இதன் பயன் என்னவெனில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட ஆவணங்களை வருடி அவற்றைக் கணினி ஆவணமாக மாற்றுவதுடன், உரைப்பகுதியை

மாற்ற, திருத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. optical data storage device : ஒளிவ தகவல் சேமிப்புச் சாதனம். optical drive : ஒளிவ இயக்ககம்: ஒளிவ (குறு) வட்டுகளில் எழுதவும், படிக்கவும் முடிகிற ஒரு வட்டு இயக்ககம். சிடி ரோம் வட்டியக்ககம், மற்றும் வோர்ம் வட்டியக்ககங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

ஒளிவ இயக்ககம்

optical fiber cable : ஒளியிழை வடம்; இணைப்பு ஒளியிழை வடம்: கண்ணாடி இழை வடம்.

optical imaging technique : ஒளிவக்காட்சி நுட்பம்.

optical mark reader : ஒளிவம குறி படிப்பி.

optical resolution :ஒளிவத் தெளிவு.

optical scanner : ஒளிவ வருடுபொறி; ஒளிவம வருடி.

optical storage : ஒளிவச் சேமிப்பு.

optimizer: திறன்மிகுப்பி : ஒரு கணினி,பிணையம் அல்லது பிற சாதனம் அல்லது முறைமையின் செயல் திறனை மிகுக்கச் செய்யும் ஒரு நிரல் அல்லது சாதனம். எடுத்துக்காட்டாக, வட்டுத் திறன்மிகுப்பி நிரல், கோப்பு அணுகல் நேரத்தைக் குறைக்கிறது.

optimizing compiler : திறன்மிகுப்பு மொழிமாற்றி : இந்த மொழிமாற்றி அதன் வெளியீட்டை (சிப்புமொழி அல்லது பொறி மொழி) பகுப்பாய்வு செய்து இன்னும் திறன்மிக்க (குறுகிய, வேகமான) கட்டளைத் தொகுதியாக மாற்றித் தரும்.

option : விருப்பத் தேர்வு; வாய்ப்பு; தேடல்.

optional : விருப்பத் தேர்வு.

OR : அல்லது : இரண்டு பிட்டுகள் (0 அல்லது 1) அல்லது இரண்டு பூலியன் மதிப்புகளை (சரி அல்லது தவறு) இணைப்பதற்கான ஒரு தருக்கமுறைச் செயல்பாடு. இச்செயல்பாட்டின் வெளிப்பாடு கீழ்க்காணும் வகையில் அமையும்.

0 or 0 = 0,
0 or 1 = 1
1 or 0 = 1,
1 or 1 = 1

orange book : ஆரஞ்சுப் புத்தகம் : அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு தொடர்பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஓடி தர வரையறை. 5200.28 எஸ்டீடி, டிசம்பர், 1985 என்ற தலைப்புடையது. A1 (மிகவும் பாதுகாப்பனது) முதல் D (குறைந்த பாதுகாப்புள்ளது) வரை பல்வேறு தரவரிசைகளை வரையறுக்கும் ஒரு

வழிமுறை. உயிர்நாடியான தகவலை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப் பாட்டை இத்தரவரிசை குறிக்கிறது.

ORB : ஓஆர்பி : பொருள் கோரிக்கைத் தரகர் எனப் பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கையை முன்வைக்கும் ஓர் இடைமுகம். ஓஆர்பி, கோரிக்கையை, பொருளை வைத்துள்ள வழங்கனுக்கு அனுப்பிவைக்கும். விடைமதிப்புகளை கிளையனுக்குத் திருப்பியனுப்பும்.

அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை

.org : ஆர்க்; ஓஆர்ஜி : இணையத்தின் களப்பெயர் அமைப்பு முறையில் உயர்நிலை களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாய நோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர். வணிக அமைப்புகள் .காம் (.com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன. கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறுவனமோ அல்ல. எனவே அதன் www.kanithamizh.org அமைந்துள்ளது.

organise favourites : கவர்வுகளை ஒழுங்குபடுத்து.

organiser : அமைப்பாளர்.

organisation file : கோப்பு ஒழுங்கமைப்பு.

orientation : ஆற்றுப்படுத்தல்.

Original Macintosh Keyboard : அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை : தொடக்ககால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப்பகுதி மற்றும் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப்பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத் தேர்வு விசைகள். இடவெளிப் பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key). originate : தொடங்கு.

orphan file : உறவிலிக் கோப்பு; அனாதைக் கோப்பு: கணினிச் சேமிப்பில் பயனற்றுப் போன பின்பும் தங்கிவிட்ட ஒரு கோப்பு. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுவதற்கு உதவியாக உருவாக்கப்பட்ட கோப்பு. அந்தப் பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டபின் அனாதை ஆகிவிடுகிறது.

.or.us : .ஓஆர்.யுஎஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் ஒரிகான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

OS/2 : ஓஎஸ்/2 : ஐபிஎம் நிறுவனத்தின் இயக்க முறைமை, தொடக்க காலத்தில் ஐபிஎம், மைக்ரோ சாஃப்ட் இரண்டின் கூட்டுத் திட்டப்பணியாய் இருந்தது. பின்னாளில் மைக்ரோசாஃப்ட் விலகிக் கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் (protected mode) செயல்படும். மெய்நிகர் நினைவகம் கொண்ட பல்பணியாக்க இயக்கமுறைமை. இன்டெல் 80286, 80386, +i486 மற்றும் பென்டியம் பிராசாசர்கள் கொண்ட சொந்தக்கணினிகளில் செயல்படவல்லது. பெரும்பாலான எம்எஸ்-டாஸ் பயன்பாடுகளும் ஓஎஸ்/2-வில் செயல்படும். அனைத்து எம்எஸ்-டாஸ் வட்டுகளையும் படிக்கும். பிரசென்டேஷன் மேனேஜர் என்கிற துணை அமைப்பைக் கொண்டது. இது வரைகலைப் பணிச்சூழலை வழங்குகிறது. பிணைய வசதிகளைப்பெற "லேன் மேனேஜர்" உண்டு. வங்கிகள் நிறுவியுள்ள பெரும்பாலான ஏடீஎம் மையங்களில் ஓஎஸ்/2 முறைமையே பயன்படுத்தப்படுகிறது.

oscillation : ஊசலாட்டம் : குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுகின்ற மாற்றத்துக்கு உள்ளாகும் நிலை. மின்னணுவியலில் ஊசலாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சமிக்கையில் ஏற்படுவது.

oscillator : அலையியற்றி : ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறிக்கொண்டே இருக்கும் வெளியீட்டைத் தருகின்ற மின்னணுச் சுற்று. நிலையான அல்லது மாற்றத்தக்க வெளியீட்டைத் தரக்கூடிய வகையிலும் வடிவமைக்க முடியும். மின்னணுச் சுற்றுகளில் அலை இயற்றிகள் மிகவும் முக்கியமானவை. நிலையான அலைவரிசையை உருவாக்க சில அலை இயற்றிகள் குவார்ட்ஸ் படிகத்தைப் பயன்படுத்துகின்றன. சொந்தக் கணினிகளில் கடிகார அலைவரிசையை வழங்க ஓர் அலை இயற்றி பயன்படுத்தப்படுகிறது. 1 முதல் 200 மெகாஹெர்ட்ஸ் வரை துடிப்பவை. செயலியும் மற்றபிற மின்சுற்றுகளும் இதனடிப்படையில் இயங்குகின்றன.

OSF : ஓஎஸ்எஃப் : திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று Open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லாக் கூட்டமைப்பு. 1988இல் நிறுவப்பட்டது. யூனிக்ஸ் இயக்க முறைமையில் செயல்படும் நிரல்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வரன்முறைகளை வளர்த்தெடுப்பதும், மூல நிரல்வரைவுடன் மென் பொருள்களுக்கான உரிமங்

களை உறுப்பினர்களுக்கு வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கம். பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல் (Distributed Computing Environment), மோட்டிஃப் என்னும் வரைகலைப் பணிச் சூழல் (GUI), ஓஎஸ்எஃப்/1 என்னும் இயக்க முறைமை (யூனிக்ஸின் இன்னொரு வடிவம்) ஆகியவை ஓஎஸ்எஃபின் படைப்புகளில் சில

OSPF : ஓஎஸ்பீஎஃப் : திறந்த மீக்குறுபாதை முதலில் எனப் பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐபீ பிணையங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொரு கணு(node)வையும் செய்தி சென்றடைவதற்கான மிகக்குறுகிய பாதை எது என்பதைக் கணக்கிட்டு திசைவி (Router) வழிப்படுத்தும். திசைவி அதனோடு இணைக்கப்பட்ட கணுக்களிலுள்ள தொடுப்பு - நிலை விளம்பரம் (Link-State Advertisements) என்றழைக்கப்படும் தகவலை, பிணையத்திலுள்ள பிற திசைவிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அங்கே தொடுப்புநிலைத் தகவல் ஒன்று குவிக்கப்பட்டு மீக் குறுபாதை கணக்கிடப்படுகிறது.

OTOH : ஒடீஓஹெச் : இன்னொரு வகையில் பார்த்தால் எனப் பொருள் on the other hand என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல், இணையச் செய்திக்குழுக்கள் மற்றும் பிற விவாதக்குழுக்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

Outbox : வெளிச்செல் பெட்டி; செல்மடல் பெட்டி : மின்னஞ்சல் பயன்பாடுகளில் வெளியே அனுப்பப்படும் கடிதங்களைச் சேமித்து வைக்கும் பெட்டி.

outdent : வெளித்தள்ளு.

outer join : வெளி இணைப்பு: புறச்சேர்க்கை : தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப்பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தகவல்கள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்டவணைகளிலிருந்து தேவையான தகவலைப் பிரித்தெடுக்கப் பயன் படுத்தப்படும் பல்வேறு செயல் முறைகளில் இதுவும் ஒன்று. முதல் அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகள் இந்தச் செயல்பாட்டின் வெளிப்பாடாக அமையும். முதல் அட்டவணையிலுள்ள ஏடுகளுக்கு உறவுடைய ஏடுகள் இரண்டாவது அட்டவணையில் இருப்பின் அத்தகவல்கள் வெளியீட்டில் இடம் பெறும். அவ்வாறு இல்லாத ஏடுடன் வெற்று மதிப்புகளுடன் இடம் பெறும்.

outline : வெளிக்கோடு.

out line layout view button : வெளிக்கோடு உருவரை காட்சிப் பொத்தான்.

out-of-band signaling : கற்றைப்புறத்து சமிக்கை முறை : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் குரல் அல்லது தகவலை அனுப்புவதற்கான கற்றை அகலத்துக்கு வெளியிலுள்ள அலைவரிசைகளில், கட்டுப்பாட்டுச் சமிக்கை போன்ற சிலவற்றை அனுப்பும் முறை.

outline utility: வெளிக்கோட்டு பயன் கூறு.

outlook express : அவுட்லுக் எக்‌ஸ்பிரஸ் : ஒரு மின்னஞ்சல் மென் பொருள்.

output channel, input : உள்ளீட்டு வெளியீட்டுத் திட்டம்.

output signal, zero: வெளியீடில்லாக்குறிகை.

oval : நீள்வட்டம்.

oval shape : நீள்வட்ட வடிவம்; முட்டை வடிவம்.

over drive socket: கூடுதல் இயக்ககப் பொருத்துவாய்.

over flow, arthmetic : கணக்கீட்டு வழிவு.

overlay ; மேல்விரி1 : 1. வட்டில் சேமிக்கப்பட்டுள்ள நிரல் மிகப்பெரியதாக இருப்பின் அதனை முழுமையாக நினைவகத்தில் ஏற்ற முடியாது. அத்தகைய நிரல்களுக்கு மேல்விரி கோப்புகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. நிரலை நினைவகத்தில் ஏற்றும்போது மேல்விரி கோப்பிலுள்ள ஒருபகுதி நிரல் மட்டுமே நினைவகத்தில் ஏற்றப்படும். தேவைப்படும்போது அடுத்த பகுதி ஏற்றப்படும். அது நினைவகத்திலுள்ள முதல் பகுதியின் மீதே மேலெழுதப்படும். இந்த ஏற்பாட்டின்படி மிகப்பெரிய நிரலையும் நினைவகத்தில் ஏற்றி இயக்க முடிகிறது என்றபோதிலும் ஒரளவு இயக்க வேகம் குறைய வாய்ப்புள்ளது. 2. குறிப்பிட்ட பண்புக் கூறுகளை அடையாளம் காணும் பொருட்டு திரை, மேசை அல்லது விசைப்பலகை மீது மேல்விரிக்கப்படும் அச்சிட்ட படிவம்.

overlay2 : மேல்விரி2 : 1. கணினி வரை கலையில் ஒரு படிமத்தின் மீது இன்னொரு படிமத்தை மேல் விரித்தல். 2. ஒளிக்காட்சிகளில், நிகழ்நேர அல்லது முன்பதியப்பட்ட ஒளிக்காட்சிச் சமிக்கைகளின் மீது கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு வரை கலைப்படிமத்தை மேல்பொருந்தச் செய்தல்.

overloading constructior : பணிமிகுப்பு ஆக்கி.

overwrite mode : மேலெழுது பாங்கு: ஓர் ஆவணத்தில் உரையைத்தட்டச்சுச் செய்யும்போது புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் எழுத்துகள் அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள எழுத்துகளை நீக்கிவிடும். இப்போது புழக்கத்தில் உள்ள சொல் செயலித் தொகுப்புகளில் பெரும்பாலும் உட்செருகு பாங்கே (Insert Mode) இயல்பானதாய் உள்ளது. தேவையெனில் மேலெழுது பாங்காக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.