கணிப்பொறி அகராதி/F
face - The side bearing the printing of a punched card like the card face.
முகம் : பொத்தலிட்ட அட்டையின் அச்சு தாங்கு பக்கம். அட்டை முகத்தைப் போன்றது.
face attribute - முகஇயல்பு : பாடத்தை விளக்கிக் காட்டப் பயன்படும் அச்செழுத்தை இது சுட்டுவது.
facility arrangement - The allocation of core memory and external devices by the executive as required by the programme to be executed.
வசதி ஏற்பாடு : நிறைவேற்றியினால் உள்ளக நினைவகமும் புறக்கருவியமைப்புகளும் ஒதுக்கப்படுதல். நிறைவேற்ற வேண்டிய நிகழ்நிரலுக்கு இவை தேவை.
facsimile - A process involving the electronic transmission of images generally from one system to a remote receiving station. Images are electronically scanned and converted into transmission signals. Later they are sent to the receiving station. The signals are then converted at the receiving station to create a duplicate of the original image.
உருநகலி : தொலைநகல். பொதுவாக, ஓர் அமைப்பிலிருந்து தொலைவிலுள்ள பெறும் நிலையத்திற்கு உருக்களின் மின்னணுக்களை செலுத்துவதை உள்ளடக்கிய முறை. உருக்கள் மின்னணு முறையில் அலகிடப்பட்டுச் செலுத்தும் குறிகைகளாக மாற்றப்படுகின்றன. பின் இவை பெறும் நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன. இங்குக் குறிகைகள் முதல் உருவின் இரட்டிப்பாக மாற்றப்படுகின்றன.
failure logging - The automatic recording of state of various computer systems following the detection of machine fault. தவறு பதிதல்: எந்திரத் தவறைக் கண்டறிந்ததும் பல கணிப்பொறித் தொகுதிகளின் நிலையைத் தானாகப் பதிவு செய்யும் நிலை.
fallback - The manual or electronic system suitable for the computer system in case of breakdown. மீட்பு : பழுது ஏற்படும் பொழுது, கணிப்பொறித் தொகுதிக்காக மாற்றீடு செய்யப்படும் மின்னணு அல்லது கைவழித் தொகுதி.
fast access storage - The section of a computer storage from which data are obtained more rapidly. மீவிரைவுச் சேமிப்பு : கணிப்பொறிச் சேமிப்பின் ஒரு பகுதி. இதிலிருந்து மிக விரைவாகத் தகவல்கள் பெறப்படும்.
fast time scale - In simulation by an analog computer a scale in which the time duration of a simulated event is less than the actual time duration of the event in the physical system under study. விரைவுநேர அளவுகோல் : பகர்ப்பில் ஒப்புமைக் கணிப்பொறி அளவுகோலால் இது நடைபெறுவது. இதில் பகர்ப்பு நிகழ்வின் காலஅளவு, ஆய்விலுள்ள தொகுதியின் உண்மை நேர அளவைவிடக் குறைவாய் இருக்கும்.
fatal error - An error in a computer programme causing running of the programme to be terminated. முடிவுப்பிழை : கணிப்பொறியிலுள்ள பிழை நடைபெறும் நிகழ்நிரலை முடியுமாறு செய்வது.
fault - Any physical condition causing a component of a data processing system to fall in performance. அறுகை : இது ஓர் இயல்நிலை செயல்திறன் வீழ்ச்சியைத் தகவல் முறையாக்கு தொகுதியின் பகுதியில் உண்டாக்குவது.
fault time - Down time அறுகை நேரம் : கீழிறங்கு நேரம்.
feed - Causing data to be entered into a computer for processing. ஊட்டம் : முறையாக்கலுக்கு ஒரு கணிப்பொறியில் தகவலைச் செலுத்தல்.
feedback - 1) The response by the system to an input 2) The use of an output to either the same or another process. பின்னூட்டம் : 1. ஓர் உட்பலனுக்கு ஒரு தொகுதி துலங்கல். 2. ஒரே முறை அல்லது பிற முறைக்கு வெளிப்பலனைப் பயன்படுத்தல்.
feed tape - The mechanism feeding tape for reading. ஊட்டு நாடா : நாடாவிற்கு ஊட்டுதல் அளிக்கும் பொறிநுட்பம்.
femto - One thousand million millionth, 10-16 Eg. femto chemistry. பெம்டோ : ஓராயிரம் மில்லியன் மில்லியனாவது, 10-16 எ-டு பெம்டோ வேதிஇயல்.
fetch - retrieve data. கொணர் : தகவல்களை மீட்பு செய்.
fetch cycle - execute cycle கொணர்சுழற்சி : நிறைவேற்று சுழற்சி.
f-format - 1) In data management a fixed length logical record format. 2) In FORTRAN a real variable formatted as feed. Here μ is the width of the field and d represents the number of digits to appear after the decimal point. எஃப் படிவமைப்பு : 1. தகவல் மேலாண்மையில் நிலையான நீண்டுள்ள முறைமைப் பதிவகப் படிவமைப்பு. 2. பார்ட்ரானில் ஊட்டி என்னும் படிவமைப்புள்ள உண்மை மாறிலி. இங்கு μ என்பது புல அகலம். d என்பது பதின்மப்புள்ளிக்குப் பின் தோன்றும் இலக்கங்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.
fibre optical transmission - ஒளிஇழைச் செலுத்துகை : தகவல்செல்லும் ஊடகம். இதன் வழியாக அகல் அலை வரிசை விரைவாகச் செல்ல இயலும்.
field - An area within a record storing a particular type of data. புலம் : பதிவகத்திலுள்ள பகுதி. குறிப்பிட்ட வகைத் தகவலைச் சேமிப்பது.
file - The data structure used to facilitate input and output data using devices such as disc. கோப்பு : வட்டு முதலிய கருவி யமைப்புகளைப் பயன்படுத்தி உட்பலன், வெளிப்பலன் வசதி களை உண்டாக்கும் தகவல் அமைப்பு.
files access, types of - கோப்பு அணுக்க வகைகள் : 1. படி 2. எழுது 3. நிறைவேற்று, file, closing - கோப்பை மூடல் : கோப்பு வண்ணப்பியைக் கொண்டு இதைச் செய்யலாம் எ-டு, Close (fd); இங்கு fd என்பது கோப்பு வண்ணப்பியைக் குறிக்கும். இது மூட வேண்டிய கோப்போடு தொடர்புள்ளது.
file conversion - The process of converting data files from one format to another. Eg. Manually kept records to files created on a magnetic medium. கோப்பு மாற்றம் : தகவல் கோப்புகளை ஒருபடிவமைப்பிலிருந்து மற்றொரு படிவமைப்பிற்கு மாற்றுதல். எ-டு: கையால் எழுதி வைத்திருக்கும் ஆவணங்களைக் காந்த ஊடகத்தால் கோப்புகளாக உருவாக்கல்.
file, creating - கோப்பை உருவாக்கல் : உருவாக்கு என்னும் சார்பலனைக் கொண்டு புதிய கோப்புகளை உருவாக்கலாம். பழைய கோப்புகளைத் திரும்ப எழுதலாம். எ-டு: int fdl; fdl - create (file - name)
file identification - This is the code P mode; devised to identify a file. கோப்பு அடையாளமறிதல் : ஒரு கோப்பை அடையாளமறிய வடிவமைக்கப்படும் குறிமுறை.
file, kinds of - கோப்பு வகைகள் : 1. உயர்நிலைக் கோப்பு 2. தாழ்நிலைக் கோப்பு. 3. யூனிக்ஸ் கோப்பு. 4. மூலக் கோப்பு. 5. விபிபி கோப்பு. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க.
file layout - The description of the arrangement of the data in a file. கோப்புத்திட்ட அமைப்பு : ஒரு கோப்பில் தகவல் அமைந்திருக்கும் முறையை விளக்கல்.
file maintenance - The data processing operation in which a master file is updated on the basis of one or more transaction files. கோப்புப் பேணுகை : இது தகவல் முறையாக்கும் நடவடிக்கை, இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைக் கோப்புகளின் அடிப்படையில் முதன்மைக் கோப்பை உருவாக்கல்.
file name - The set of alphanumeric characters used to identify and describe a file in a file label. This is a string. கோப்புப்பெயர் : ஒரு கோப்புக் குறியத்தில் ஒரு கோப்பை அடையாளங் காணவும் வண்ணனை செய்யவும் பயன்படும் எண்ணெழுத்து உருக்களின் தொகுதி. இது ஒரு சரம்.
file organization - The arrangement of files on the storage media. கோப்பு அமைப்பு : சேமிப்பு ஊடகங்களில் கோப்புகள் அமைந்திருத்தல்.
file, opening - கோப்பைத் திறத்தல் : திற என்னும் சார்பலனைக் கொண்டு இதைத் திறக்கலாம். இது கோப்பு வண்ணப்பி என்னும் முழுஎண்ணைத் திருப்பி அனுப்பும். எ-டு int fd;fd= open(file-name' rwmode);
file processing - The file processing involving all operations which are connected with the creation and use of files. The operations include. creation, validation, comparing, collating, sorting and merging. கோப்பு முறையாக்கல் :கோப்புகளைப் பயன்படுத்த உருவாக்கப்படும் செயல்கள்: 1. உருவாக்கல் 2. செல்லுபடியாக்கல் 3. ஒப்பிடல் 4. ஒழுங்கு படுத்தல் 5. வகைப்படுத்தல் 6. இணைத்தல்.
file properties - கோப்புப் பண்புகள் : 1. வட்டு, நாடா முதலியவற்றில் தகவல்களைச் சேமிக்கலாம். 2. இவை எந்திரம் நின்ற பின்னும் நீடித்திருக்கும். 3. வேண்டும் பொழுது கணிப்பொறியில் போட்டுப் பார்க்கலாம்.
file protection - A mechanical device or computer command preventinge rasing of or writing upon a magnetic tape.This procedure allows a programme to read the data from the tape. கோப்புப் பாதுகாப்பு : காந்த நாடாவில் எழுதப்படுவதையோ அழிக்கப்படுவதையோ தடுக்கும் கருவியமைப்பு அல்லது கணிப்பொறிக் கட்டளை. இம்முறை நாடாவிலிருந்து தகவல்களைப் படிக்க நிகழ்நிரலை அனுமதிக்கும்.
file reference - The operation involving looking up and retrieving the information on file for a special item. கோப்புப் பார்வை : இது ஒரு செயல். இதில் ஒரு சிறப்பினத்திற்காகக் கோப்பில் தகவலைப் பார்த்தல் அல்லது மீட்டல்.
file transfer protocol, FTP - கோப்புமாற்ற மரபுச்சீரி, எஃப்டிபி: இரு ஒரு செயல். இதைக் கொண்டு தகவல் இறக்கம் செய்ய இயலும்.
file structure - கோப்பு அமைப்பு : இதில் தகவல் ஒழுங்குமுறை அடங்கும். இம்முறை புலங்கள், பதிவுருக்கள் தொகுதிகள், கோப்புகள் எனப் பல வகைகளைக் கொண்டது.
files, reading and writing - கோப்புகளைப் படித்தலும் எழுதலும் : படி என்னும் சார் பலனைக் கொண்டு ஒரு கோப்பைத் திறக்கலாம். அதே போல எழுது என்னும் சார்பலனைக் கொண்டு அதை எழுதலாம். இவ்விரண்டையும் செய்வதற்கு முன் தொடர்புடைய கோப்புக்குச் செல்லுபடியாகக் கூடிய கோப்பு வண்ணப்பி இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இதற்குத் திற, உருவாக்கு சார்பலனைப் பயன்படுத்தலாம். இவ்விரு சார்பலன்களுக்கும் மூன்று சுட்டளவுகள் தேவை. அவையாவன. 1. கோப்பு வண்ணப்பி 2. தாங்கி (சேமிப்பின் பெயர்) 3. மாற்றவேண்டி எண்மிகளின் எண்ணிக்கை.
files, resources - These are special texts containing references to bit maps, text, or other data the application uses. The unique thing about these files is that they enable to change this data without recompiling the application programme. மூலக்கோப்புகள் : இவை தனிப்பாடங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டிற்குரிய இருமப்படங்கள், பாடம் அல்லது பிற தகவல்களுக்குரிய குறிப்புதவிகள் இருக்கும். இவற்றின் தனிச்சிறப்பு இதுவே. இத்தகவலைப் பயன்பாட்டு நிகழ்நிரலை மீள் தொகுக்காமல் மாற்றலாம்.
filter - A type of query to select and display records to match a certain condition. வடிகட்டி : ஒரு குறிப்பிட்ட நிலைக்கு இணக்கமாக இருக்குமாறு செய்யப் பதிவுருக்களைத் தெரிந்தெடுக்கவும் திரையில் காட்டவும் பயன்படும் ஒருவகை வினா அல்லது கொக்கி.
filter, kinds of- வடிகட்டி வகைகள் : 1. தன்வடிகட்டி இது கருவிப்படையில் உள்ளது. பதிவுருக்களைக் கூட்ட இதைத் தட்ட வேண்டும். இவ்வுருக்கள் மின்னோட்டப் புல மதிப்பிற்கு இணையாக அமையும். 2. தவறுவடிகட்டி தவறுநிலையைச் சரி செய்யப் பயன்படுவது.
filter window - வடிகட்டும் சாளரம் : ஒரு வினாவில் நிலைமைகளைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சாளரத்தைப் போன்ற உறுப்பு.
firmware - கெட்டிப்பொருள் : படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகத்தில் சேமிக்கப்படும் நிகழ்நிரல் அல்லது தகவல். மென்பொருளால் இதை மாற்ற இயலாது. மின்சாரம் நிற்கும் பொழுது இது இழப்புக்கு உள்ளவாதில்லை. பா. ROM.
first in first out, FIFO - முதலில் வந்தது முதலில் போதல் : ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் மீட்கும் முறை. முதலில் வந்த தகவல் முதலில் மீட்கப்படும். ஒ. last in first out
fixed storage - நிலைச்சேமிப்பு : கணிப்பொறிக் கட்டளை களால் மாற்ற இயலாத தகவல்களுக்குரிய சேமிப்பு. எ-டு காந்த வகைச் சேமிப்பு.
flags - கொடிகள் : நன்கு அமைந்த வடிவம் உண்டு. இவை குறிகாட்டிகளே. எ-டு சி மொழியில் ± வெளிப்பலன்களைப் பெற இவை பயன்படுபவை. குறிப்பாக இட நிரவலுக்கும், நிறைகுறை காட்டல்களுக்கும் பயன்படுபவை.
flag, kinds of - கொடி வகைகள் : 1. மென்பொருள்கொடி: ஒரு தனி நிலைமையின் நிகழ்நிரல் வட்டப் பகுதியினைத் தெரிவிக்கப் பயன்படுவது. 2. வன்பொருள்கொடி: இது குறிப்பிடப்பட்ட நேரங்களில் சிறப்பு நிகழ்வுகள் தோன்றுமாறு செய்வது. பொதுவாகக் கொடிகள் சில நிலைமைகளைச் சரிபார்க்கப் பயன்படுபவை.
flash ROM- A type of read only memory. Here the contents of memory chip can be erased and rewritten thro software changes. It is very easy to update. வீசுரோம் : படிப்பதற்கு மட்டுமுள்ள ஒரு வகை நினைவகம். இங்கு நினைவக நறுவலின் உள்ளடக்கங்கள், பொருள் மாற்றங்கள் மூலம் அழிக்கப்படலாம்; மீண்டும் எழுதப்படலாம். இதை மேம்படுத்துவது எளிது.
flat-file data base - தட்டைக்கோப்புத் தகவல்தளம் : இது ஒரு தனித்தகவல் தளம் உள்ள தகவல் தளக்கோப்பு. இது ஒரு தனிப்பயனாளிக்கோ பயனாளிகளுக்கோ பயன்படுவது. எளிமையும் வரம்பும் கொண்டது.
flip-flop - A bistable circuit eg. a circuit capable of storing a bit of information and of assuming two stable states (0 and 1) as long as power is supplied. Flip-flops may be grouped together to form registers. எழுவிழுசுற்று : இருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழுவிழு சுற்றுகள் சேர்ந்து. பதிவகங்களைத் தோற்றுவிப்பவை.
floating lines - மிதவை வரிகள் : கணிப்பொறியில் இரு போடு நிலைகள் ஒன்றில் இருக்கும் குறிகைகள். எ-டு உயர் மின்னழுத்தம் = +5V, குறை மின்ன ழுத்தம் = +1V.
floating point number - மிதவைப்புள்ளி எண் : மிதவைப்புள்ளி குறியிடலால் தெரிவிக் கப்படும் எண்.
floating point representation - மிதவைப்புள்ளி குறியிடல் : இது ஒரு குறிமான முறை. இதில் தசமப் புள்ளி பொருத்தப்படுவதில்லை. கணிப்பொறி யில் இந்த எண்களைக் குறிப்பிடும் பொழுது, குறி இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். எண்ணின் பின்னப் பகுதியை ஒரு பகுதி கொண்டிருக்கும். அடுத்த பகுதி எண்ணின் அடி அடுக்கைக் குறிக்கும். எ-டு. திட்டக்குறிமானம் 0.0000256, அறிவியல் குறிமானம் 0.256x104, மிதவைப் புள்ளி குறியீடு. 0.256 E-04.
floppy disk - நெகிழ்வட்டு: பிளாஸ்டிக் பொருளாலானது. காந்தப்படலப் பூச்சு பூசப் பட்டிருக்கும். இலக்க வடிவில் கணிப்பொறித் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். விலை மலிவு. ஆனால் நம்புமை குறைவு. தட்டையான வட்ட மான ஊடகம். திறன் வேறுபடுவது - 1KB, 1MB.
floppy disk controller - This is either a hardware or software used to control the orderly transfer of data between a computer and a floppy disk drive. நெகிழ்வட்டுக் கட்டுப்படுத்தி : இது ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். கணிப்பொறிக்கும் நெகிழ்வட்டு இயக்கிக்கும் இடையே ஒழுங்காகத் தகவல் மாறுவதைக் கட்டுப்படுத்துவது.
floppy disk drive, FDD - A device used to handle one or more floppy disks. நெகிழ்விட்டு இயக்கி, நெவஇ : ஒன்றிற்கு மேற்பட்ட நெகிழ் வட்டுகளைக் கையாளப் பயன்படுங் கருவியமைப்பு. அதாவது, இதில் தகவலைப் பதிவு செய்யும் ஊடகம் நெகிழ்வட்டு.
flow - 1) Sequence of data. 2) Succession of events. ஒட்டம் : 1. தகவல் வரிசை 2. நிகழ்வுத் தொடர்வு.
flowchart - A diagram using symbols connected by arrows to show the sequence of actions necessary to solve a particular problem. வழிமுறைப் படம் : அம்புக் குறிகளால் இணைக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தும் படம். ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவையான செயல் வரிசையைக் காட்டுவது.
flowchart, advantages of - வழிமுறைப்பட நன்மைகள் : 1. துல்லியமானது. 2. கருத்துகளை நுட்பமாகக் குறிப்பது. 3. புரிந்து கொள்வது எளிது. 4. சிக்கலைத் தீர்ப்பது.
flowchart symbols - வழிபடக் குறியீடுகள் : செயல்களைக் குறிக்கும் திட்டமான குறியீட்டுத் தொகுதி. பெட்டிகள் வரிசையையும், வயிரவடிவம் ஆய்வையும் முடிவுகளையும் ஏனைய வடிவங்கள் உட்பலன், வெளிப்பலன் இணைப்புப் புள்ளி ஆகியவற்றையும் குறிப்பவை. பா. பக்கம் 50. folder - மடிப்பட்டை, மடிப்பி : இது ஒரு சிறிய மஞ்சள் நிறப்படம்.
folder, kinds of - மடிப்பி வகைகள் : சாளரம் இரு பகுதிகளைக் கொண்டது. அதன் இடப்பக்கத்தில் மடிப்பிகளின் பட்டியல் இருக்கும். இம்மடிப்பிகள் மின்னஞ்சல் செய்திகளைத் தேக்கி வைக்கப் பயன்படுபவை. பின்வருவன திட்டமான மடிப்பிகளும் அவற்றின் நோக்கங்களும். 1. உள்பெட்டி - உள்வரும் செய்திகள் இங்குச் சேமிக்கப்படுதல். 2. புறப்பெட்டி - வெளிச் செல்லும் செய்திகள் தற்காலிகமாக இங்குச் சேமிக்கப்படுதல். 3. அனுப்பப்பட்ட இனங்கள் - அஞ்சல் பணியாளிக்குச் செய்தி அனுப்பப்பட்டபின், புறப்பெட்டியிலிருந்து அது நீக்கப்படும். அதன்படி மட்டும் மடிப்பியில் சேமித்து வைக்கப்படும். 4. நீக்கப்பட்ட இனங்கள் - பிற மடிப்பிகள் எவையேனும் ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட எல்லாச் செய்திகளும் இங்குச் சேமித்து வைக்கப்படுதல். 5. வரைவுகள் - இம்மடிப்பியில் பார்வை விரைவி தானாக எல்லாச் செய்திகளையும் சேமித்து வைத்தல்.
font - A collection of printing characters of a particular size and style. அச்செழுத்துத் தொகுதி : அச்சுருக்களின் தொகுதி, குறிப்பிட்ட அளவும் பாணியும்கொண்டது.
font tag - அச்செழுத்துத் தொகுதி ஒட்டு : ஆற்றல் வாய்ந்தது. இத்தொகுதியின் இனத்தைச் சுட்டியறியலாம்.
footer - அடிக்குறிப்பு : பக்கத்திற்கு அடியில் பயன்படும் குறி. இதை வேண்டியவாறு உருவாக்கலாம். ஆராய்ச்சி நூல்களில் பயன்படுவது. ஒ. header.
force - விசை : ஒரு துணைக் கட்டளையை நிறைவேற்ற ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் இயக்கத்தில் குறுக்கிடுதல். இக்கட்டளை, கட்டுப்பாட்டை நடைமுறைச் செயலின் மற்றொரு பகுதிக்கு மாற்றுவது.
Forester research findings - பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் : இவை வலையத்தளம் பற்றியவை. 1. வலையத் தளங்களில் 90% வடிவமைப்பு அமைதி தருவதாக இல்லை. 2. விற்பனை இழப்பு 50% 3. வருகை தருபவர்களில் 40% திரும்புவதில்லை. 4. வணிகப் பெயர் இழப்பு. ஏனெனில் ஒவ்வொரு 10 பேரும் சராசரி அடுத்த 10 பேருக்குத் தரக்குறைவைப் பற்றிச் சொல்லுதல். 5. தவறான மீள்வடிவமைப்புகளால் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வீணாகச் செலவழிதல். form - படிவம் : இது புலங்கள் அல்லது கட்டுப்பாடுகளின் திரட்டு. பள்ளி விண்ணப்பப் படிவம் போன்றது. பயனாளி தன் உட்பலனை அளிக்க உதவுவது. தகவலை அட்டவணையில் பதிவு செய்யவும் பார்க்கவும் பதிப்பிக்கவும் உதவுவது. இதில் பொத்தான்கள், பாடப் பெட்டிகள், செலுத்துசொல் கட்டளைகள் சரிபார்ப்புப் பெட்டிகள் முதலியவை அடங்கும்.
form designing - படிவமைப்பு உருவாக்கல் : தன் வலவன் தெரிவைப் பயன்படுத்தி இதை வடிவமைக்கலாம்.
form module, FM - படிவ அலகு, பஅ : இது ஒரு பயன்பாட்டின் பார்க்கக்கூடிய பகுதி. குறிப்புதவிகளைக் கொண்டது.
form window - This is used to design the different forms an application will contain. படிவச் சாளரம் : ஒரு விண்ணப்பத்திலுள்ள வேறுபட்ட படிவங்களை வடிவமைக்க இது பயன்படுவது.
formal language - An abstract mathematical object used to model the syntax of a programming language. முறைசார்மொழி : கருத்துப் பொருளான கணிதப்பொருள். நிகழ்நிரல் மொழியின் தொடரியலை வடிவமைக்கப் பயன்படுவது.
format - 1) The arrangement of data into a specified layout. 2) The designated placement of text and margins and other elements in hard copy. 3) The programme to set up text arrangements for outputting. படிவமைப்பு : 1. குறிப்பிட்ட திட்ட வரையில் தகவல்களை அமைத்தல். 2. வன்படியில் பாடம், விளிம்பு மற்றும் பிற கூறுகளை உரியவாறு அமைத்தல். 3. வெளிப்பலனிற்காகப் பாடத்தை நிறுவும் நிகழ்நிரல்.
format string - படிவமைப்புச் சரம் : கூற்றுகளின் படிவமைப்பைக் காட்டும் உருக்களைக் கொண்டது இது. ஒவ்வொரு உருவிற்கு முன் % குறி வரவேண்டும். ஒவ்வொரு எண் குறிக்கும் முன்பு உம்குறி & வர வேண்டும்.
formatting - 1) Setting up the order of the information. This is input to a computer. 2) Arranging the layout of the data. This is output from the computer. படிவம் அமைத்தல் : 1. தகவல் வரிசை அமைத்தல். இது கணிப்பொறிக்கு உட்பலன் 2. தகவல் திட்டவரை அமைத்தல். இது கணிப்பொறிக்குப் புறத்தே அமையும் வெளிப்பலன்.
formatting, alternate method of - படிவமைப்பு மாற்றுமுறை : ஒரு குறிப்பிட்ட பாணியில் உருவாக்கி, இதை ஓர் ஆவணத்திற்குப் பயன்படுத்தலாம். வரி இடைவெளிவிடல், பத்தி வரிசையாக்கம், ஒதுக்கிச் செய்தல் ஆகியவை இதில் தேவையற்றவை.
formatting changes - படிவமைப்பு மாற்றங்கள் : இவை பாட நடையை மாற்றுபவை. எழுத்து பெரியதாகவும் சாய்ந்ததாகவும் இருக்கும். அளவு, நிறம் முதலியவை எழுத்துப் பண்புகள். இவற்றை வேண்டியவாறு பயன்படுத்தலாம்.
formatting, kinds of - படிவமைப்பு வகைகள் : 1. பாடப் படிவமைப்பு. 2. பக்கப் படிவமைப்பு. விரிவு அவ்வப்பதிவில் காண்க.
formatting, text - பாடப்படிவம் அமைத்தல் : இது இரு வகை. 1. வன்படிவம் அமைத்தல், 2. மென்படிவம் அமைத்தல்.
FORTH-போர்த் : ஓர் உயர்நிலை நிகழ்நிரல் மொழி. விரைவு மிகுதி. நினைவகத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.
FORTRAN - பார்ட்ரான் : ஓர் உயர் நிலை மொழி. அனைத்துலக வணிக எந்திரத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. எண் பயன்பாடு, அறிவியல் பயன்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுவது. மிகப் பழையது, மிகப்பரவலான உயர்நிலை மொழிகளில் ஒன்று. வணிகத்துறை, தொழில்துறை ஆகியவற்றிலும் பயன்படுவது. இம்மொழி தொகுக்கப்பட வேண்டிய ஒன்று. Formula translator வாய்பாடு பெயர்ப்பி.
frames - சட்டங்கள் : வேறுபட்ட பகுதிகளாகத் திரை பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளே திரைகள். சட்டத்தொகுதி ஒட்டுகளைக் கொண்டு, இவற்றை உருவாக்கலாம். அளவைக் குறிக்க இத்தொகுதி ஒட்டுடன் இரு பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பத்திகளும் வரிசைகளும் ஆகும். இவற்றின் மதிப்புகள் குறும் படங்களாகவோ விழுக்காடுகளாகவோ கொடுக்கப்படும்.
framing - Units of data marking the boundary of fields or characters for data transmission. வரையறைப்படுத்தல் : தகவல் செலுத்துகைக்காக உருக்கள் அல்லது புல எல்லையைக் குறித்தல்.
Frankston, Bob - பாப் பிராங்ஸ்டன் : காட்சிக் கணிப்பானை ஆப்பிளுக்காக 1979 இல் அமைத்தவர். பா. Bricklin
Freddy Williams Prof - பேரா. பிரடி வில்லியம்ஸ் : பேரா. கில்பர்னின் ஆசான், முதல் கணிப்பொறியை நிறுவியவர்.
free field - A property of information retrieval device permitting recording of information medium without regard to preassigned fixed fields. தடையிலாப் புலம் : மீட்புக் கருவியமைப்பின் தகவல் பண்பு. முன்னரே ஒதுக்கப் பெற்ற நிலையான புலங்களைக் கருத்தில் கொள்ளாமல், தகவல் ஊடகத்தைப் பதிவு செய்ய அனுமதிப்பது.
frequency - The number of times per second that a periodic event repeats itself. The unit is hertz. அதிர்வெண் : ஒரு கால நிகழ்வு தன்னைத் தானாகத் திருப்பிக் கொள்ளுதல். இது ஒரு வினாடிக்கு இத்தனை தடவைகள் என்று அமையும். அலகு ஹெர்ட்ஸ்.
frequency division multiplexing - A method used to transmit several signals along a single data communications circuit. அதிர்வெண் பிரிவைப் பகுதியாக்கல் : ஒரு தனித் தகவல் தொடர்ச் சுற்றுவழியாகப் பல குறிகைகளைச் செலுத்தும் முறை.
friction feed - A method by which paper is moved between the primary roller and the punch roller in a printer as in a standard typewriter. உராய்வூட்டல் : இது ஒரு முறை. அச்சியற்றியில் இதில் முதன்மை உருளைக்கும் துணை உருளைக்கும் இடையே தாள் நகரும். ஒரு திட்டமான தட்டச்சுப் பொறியில் நகர்வதுபோல் இது நகரும்.
FSO, File system object - எஃப்எஸ்ஓ, கோப்புமுறைப் பொருள், கோமுபொ.
FSO object model- எஃப்எஸ்ஒ பொருள் மாதிரி : இது விஷூவல் பேசிக்கின் ஒரு புதிய பண்பு. ஒரு பொருள் அல்லது நோக்க அடிப்படையில் அமைந்த கருவி. மடிப்பிகள், கோப்புகள் ஆகியவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு உதவுவது. மடிப்பிகளை ஆக்குவது, நகர்த்துவது, நீக்குவது. கோப்புகளை முறையாக்குவது.
FUD - Fear, uncertainty and doubt பஃட் : அச்சம், உறுதியின்மை, ஐயம், அஉஐ. கணிப்பொறியை மக்கள் வாங்காததற்குக் காரணங்கள்.
full page display - A terminal displaying at least 80 columns (80 character) across and 55 lines of copy (the average 81/2 x 11 inch page capacity) on the screen. முழுப்பக்கக் காட்சி : 80 பத்திகளையும் (குறுக்கே 80 உருக்கள்) படியின் 55 வரிகளையும் (சராசரி 81/2 x 11 அங்குலப் பக்கத்திறன்) திரையில் காட்டும் முனையம். function - சார்பலன் : இது ஒரு செயல்வகை அல்லது ஒரு வகைத் துணை நடைமுறைச் செயல். இதற்குத் திட்டமான சுட்டளவுகள் உண்டு. மதிப்பு மூலம் சி மொழியில் இச்சுட்டளவுகளைச் செலுத்த இயலும் ஒரு சார்பலன் ஒரு மதிப்பை மட்டுமே திருப்பியனுப்ப இயலும் நிகழ்நிரலில் ஒவ்வொரு சார்பலனும் அறுதியிடப்பட வேண்டும். திரளில் சார்பலனை அடக்கலாம். பா. library functions.
functional requirements - சார்பலன் தேவைகள் : இவை ஆவணமாக்கலைக் குறிக்கும்; நிகழ்நிரலைத் தொடர்ந்து, தொகுதி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகத் தெரிவிக்கும்.
function, body of - சார்பலன் அமைப்பு : இது மாறு அறுதியிடும் பகுதி, முறையாக்கு பகுதி, திருப்பு கூற்று என்னும் முப்பகுதிகளைக் கொண்டது.
function declaration - சார்பலன் அறுதியீடு : ஒரு சார்பலனை முறையாக்கவும் மிதவையைத் திருப்பவும் வேண்டுமானால், அது முதன்மைச் சார்பலனாலேயே அறுதியிடப் படவேண்டும். இதுவே சார்பலன் அறுதியீடு எனப்படும். ஓர் எளிய சார்பலன் அறுதியீட்டிற்குரிய பொதுப்படிவமைப்பு பின்வருமாறு : datatype - தகவல் வகை , function name -சார்பலன் பெயர்.
function, kinds of - சார்பலன் வகைகள் : 1) பயனாளிக்குரிய சார்பலன், 2) திரட்டுகள் பலன், 3) உட்பலன் சார்பலன், 4) வெளிப்பலன் சார்பலன்.
function, library, kinds of - திரட்டுசார்பலன் வகைகள் : சி மொழி சில கணிதச் சார்புகளை அனுமதிக்கிறது. இவையே திரட்டு சார்பலன்கள் எனப்படும். அவற்றில் சில பின்வருமாறு: கெட்ஸ், புட்ஸ், ரேண்டமைஸ், ஸ்டர் செட், அப்ஸ் முதலியவை.
function, naming - சார்பலனைப் பெயரிடல் : பயனாளிக்குரிய சார்பலனுக்குச் செல்லத்தக்க மாறிப்பெயரை அளிக்கலாம் முதன்மை நிகழ்நிரலையே சி மொழியில் ஒரு சார்பலனாகக் கருதலாம். சி மொழி நிறைவேற்றப்படும்பொழுது, நிறைவேற்றல். இம்முதன்மைச் சார்பலனிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே, ஒரே ஒரு முதன்மைச் சார்பலன் மட்டுமே இருக்க இயலும்.
functions frequently used - அடிக்கடிப் பயன்படும் சார்பலன்கள் : சைன், காஸ், டேன், லாக் முதலியவை.
functions, nesting - கூடுகைச் சார்பலன்கள் : நிறைவேற்றலுக்காக ஒரு சார்பலனுக்கு மற்றொரு சார்பலன் தேவைப் படும். இவ்வகைச் சார்பலன் வரையறையே கூடுகை சார் பலன் வரையறை எனப்படும். கொடுக்கப்பட்ட மதிப்பெண்களிலிருந்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணையும் தேறிய மாணவர்களின் விழுக்காட்டையும் இச்சார்பலன் மூலம் கண்டறியலாம்.
function, structure of - சார்பலன் அமைப்பு : சி மொழியில் சார்பலன்களுக்குத் திட்டமான அமைப்பு உண்டு. ஒரு சார்பலனின் பொது அமைப்பு பின்வருமாறு.
function name - சார்பலன் பெயர் (list of parameters - சுட்டளவுகளின் பட்டி)
Parameter - declaration சுட்டளவு அறுதியீடு
... ... ... ... ... ...
... ... ... ... ... ...
... ... ... ... ... ...
சார்பலன் பெயரை அடைப்புக்குறி தொடரும். இது காற் புள்ளியால் பிரிக்கப்பட்ட சுட்டளவுகள் பட்டியலைக் கொண்டிருக்கும். பின் இச்சுட்டளவுகள் அறுதியிடப்படும். அதற்குப் பின் சார்பலன் அமைப்பு கொடுக்கப்படும்.
function switch - A network having a number of inputs and outputs. - சார்பலன்சொடுக்கி : பல உட் பலன்களையும் வெளிப்பலன் களையுங் கொண்டுள்ள வலையமைவு.
function table - A computer device converting multiple inputs into a single output. சார்பலன் அட்டவணை : இது ஒரு கணிப்பொறியமைப்பு. மடங்கு உட்பலன்களை ஒரு தனி வெளிப்பலனாக மாற்றுவது.
fundamental control structures - அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் : இவை கணக்கிடுதலைச் செய்வதற் குரிய நுணுக்கங்கள். இவை திரும்பத் திரும்ப வருபவை. இவை பின்வருமாறு: 1. வரிசையாக்கல் 2. பிரித்தல் 3. தொடர்ந்து செல்லுதல். இவற்றை அவ்வப்பதிவுகளில் காண்க.