கணிப்பொறி அகராதி/L

விக்கிமூலம் இலிருந்து

L

label - குறியம் : இது எண்ணெழுத்து அடிப்படையில் அமைந்தது. புலப் பெயர்களைத் தெரிவிப்பது.

lace - துளையிடு : அட்டை வரிசை.

language - A set of symbols,words and rules used to write a programme of instructions for a computer, Eg. BASIC.மொழி:குறியீடுகள் சொற்கள் விதிகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுதி.கணிப்பொறிக்குரிய கட்டளை நிகழ் நிரலை எழுதப் பயன்படுவது. எ-டு.பேசிக்.

large scale integrated circuit,LSI Circuit-பேரளவுத் தொகையாக்கு ஒருங்கினை சுற்று,பேதொஒசு:எதில் 30000 பகுதிகள் உண்டு.4ஆம் தலைமுறைக் கணிப்பொறியில் பயன்படுவது.

large scale integration, LSI - A process of making integrated circuits with between 100 and 5000 logic gates in the chip. பேரளவுத் தொகையாக்கல், பேஅதொ:நறுவலில் 100 -5000 முறைமை வாயில்கள் உள்ள ஒருங்கிணை சுற்றுகளை அமைக்கும் முறை. இது நுண்முறையாக்கியில் உள்ளது.

laser - லேசர் : ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். கதிர்வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப்பெருக்கம் Laser, Light Amplification by.stimulated Emission of Radiation. ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்கவல்ல கருவி, கணிப்பொறிக்கு மூத்தது. பல துறைகளிலும் அருஞ் செயல்களைச் செய்து வருவது, எ-டு கண்ணறுவை, ஒளியச்சு.

laser memory - லேசர் நினைவகம் :ஒருவகை கூர்மையான நினைவகம். லேசர் ஒளியால் உண்டாவது. Laser printer : லேசர் அச்சியற்றி : இதில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படும் லேசர் ஒளிக்கற்றை அச்சிடவேண்டிய உருவின் மேல்விழும். ஒளிகடத்தும் உருளையில் அச்சியற்றல் நடைபெறுவது. குறைவிரைவு லேசர் அச்சியற்றி ஒரு நிமிக்கு 4-16 பக்கங்கள் அச்சிடும். உயர் விரைவு அச்சியற்றி ஒரு நிமிக்கு 10,000 வரிகள் அச்சிடும். லேசர் அச்சியற்றியில் அச்சுத் தலை இல்லை. ஆகவே, இது தாக்கா அச்சியற்றி எனப்படும். இதில் கிடைக்கும் வெளிப்பலன் மிக நேர்த்தியாக இருக்கும் ஒ.inkjet printer.

laser printing -லேசர் ஒளியச்சு :லேசர் ஒளியால் நடைபெறுவது; கணிப்பொறிவழி நடைபெறுவது. அச்சுத்துறையில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது பா. Deskto printing.

last in first out, LIFO -கடைசியில் வந்தது முதலில் வருதல், கவமுவ : ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் மீட்கும் முறை. இதில் கடைசியில் சேமிக்கப்பட்ட தகவல் முதலில் மீட்கப்படும்

ஒ. first in first out.

latency : The time delay required for an even to be initiated from the moment when the event is called.

உள்ளுறை காலம் : ஒரு நிகழ்வு கோரப்படும் பொழுது, அது தொடங்கத் தேவைப்படும் தாமத நேரம்.

lattice file : தட்டிக் கோப்பு : ஓர் இயங்கு தொகுதியிலுள்ளது. இதில் தனி ஆவணங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட உரிமையாளரைக் கொண்டிருக்கும்.

layout : வடிவரை : ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு.

leader : முன் செல்லகம் : 1) துளையிடப்படாத நீள்தாள். தாள் நாடாச் சுருளில் பதிவு செய்யப்பட்ட தகவலுக்கு முன் செல்வது. இதில் ஊட்டத் துளைகள் மட்டுமே இருக்கும். 2) ஆவணத் தொகுதிக்கு முன் செல்லும் ஆவணம். தொகுதிக்குப் பொதுவான தகவலைத் தருவது. leap frog tesi -தாவுதவளை ஆய்வு : நினைவகத்திலுள்ள நிகழ்நிரலால் நிறைவேற்றப் படும் ஆய்வு. வேறுபட்ட இடங்களில் இது மேலும் ஆய்வுகளை நடத்தும். பின் தான் மற்றொரு நினைவுப் பகுதிக்குச் செல்லும், ஏனைய இடங்களில் மேலும் ஆய்வுகளைத் தொடரச் செய்யும்.

leg - கால் : நடைமுறைச் செயலிலுள்ள ஒட்டு.

Leibniz wheel - லிப்ளிஸ் ஆழி : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு அடிப்படைச் செயல்களைத் திருத்தமாகச் செய்ய வல்லது. அமைத்தவர் லிப்னிஸ் (1646 - 1716) ஜெர்மன் மெய்யறிவாளர், கணித அறிஞர். பா. computer, history of .

length-நீளம் : உருக்களின் எண்ணிக்கை சொல்லையோ ஆவணத்தையோ உருவாக்குவது.

letter quality printer -எழுத்துத்தர அச்சியற்றி : இதில் உருக்கள் தொடருக்குரிய வரிகளில் குறிக்கப்படும். ஆகவே, வெளிப்பயன் நன்றாக இருக்கும். எ-டு மைப்பீச்சு அச்சி யற்றி.

librarian -திரட்டகர் :திரட்டகத்தைக் கட்டுப்படுத்துபவர். இதில் எல்லாக் காந்தக் கோப்புகளும் நிகழ்நிரல்களும் வைக்கப்பட்டிருக்கும்.

librarian programme -திரட்டகர் நிகழ்நிரல் : ஒரு குறிப்பிட்ட கணிப்பொறியின் இயங்கு தொகுதியின் பகுதியாக அமையும் நிகழ்நிரல்.

library - திரட்டகம் : நிகழ்நிரல் தொகுப்பு, பயன்பாட்டு நிகழ் நிரலால் பயன்படுத்தப்படுவது.

library functions -திரட்டகச்சார்பலன்கள் : சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், சார்பலன் இம்மதிப்பைச் செயற்படுத்தவேண்டியுள்ளது. இம்மதிப்பு சார்பின் மாறி எனப்படும். ஒவ்வொரு சார்பலனுக்கும் ஒவ்வொரு வகைச் சார்பின்மாறி உண்டு. ஒவ்வொரு சார்பலனும் குறிப்பிட்ட வகை முடிவை உண்டாக்குவது. எ-டு சைன், காஸ், டேன். சி நிகழ்நிரலிலிருந்து இச்சார்பலன்களில் எந்த ஒன்றையும் பெறலாம். இதற்குக் குறிப்பிட்ட தலைக்குறிப்புக் கோப்பைச் சேர்க்கவேண்டும். சரக்கையாளலுக்கும் கணிதக் கணக்கீடுகளுக்குமுள்ள சார் பலன் களை இக்கோப்பு கொண்டிருக்கும். இச்சார்பலன்கள் மொத்தம் 41.

library functions, kinds of -திரட்டகச் சார்பலன்களின் வகைகள்: இவை பின்வருமாறு. 1. நன்கறிந்தவை: சைன், காஸ், டேன். 2 முக்கோணவியல் சார்ப்லன்கள்: டோசை, டோலோவர், டோப்பா, 3) தலைக்குறிப்புச் சார்ந்தவை. (i) ஸ்ட்டியோ எச் கெட்ஸ், புட்ஸ். (ii) ஸ்ட்ரிப் எச்- ரேண்ட். ஸ்ரேண்ட் (iii) சரம் எச் - ஸ்டர்கேட், ஸ்டர்செட்

library programme - திரட்டக நிகழ்நிரல்: நிகழ்நிரல் திரட்டகத்தில் உள்ள நிகழ்நிரல்

light emitter diode, LED - ஒளியுமிழ் இருமின்வாய், ஒஉஇவா : காட்சிக்கருவி மின்னணுக் கருவிகளில் சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங் களைக் காட்டப் பயன்படுவது.

light pen -ஒளி எழுதி:ஒளிதூவல் தூவல் போன்ற கருவியமைப்பு. இதன் நிலையைச் கணிப்பொறி திரையில் அறிய வல்லது. |

line - கம்பி : வழி. இருமுனைகளுக்கிடையே செய்தி கொண்டு செல்லும் கம்பி இணைப்பு. தொலை பேசிக் கம்பி.

linear programme -ஒருபடி நிகழ்நிரல் : ஒரு படிச்சமன் பாடுகளால் தெரிவிக்கப்படும் சிக்கலுக்குத் தகுந்த தீர்வு காணப் பயன்படுவது.

line control-வரிக்கட்டுப்பாடு:பா.Control, classification of.

line editor -வரிப்பதிப்பிப்பி: பாடப் பதிப்பிப்புமுறை. அச் சிடப்படவேண்டிய தனித்த பாட வரிகளை இது கோப்பில் சேமித்து வைக்கும். பதிப்பியற்றி என்றுங் கூறலாம்.

lineprinter -வரி அச்சியற்றி:ஒரு சமயம் ஒரு வரியை மட்டும் அச்சிடுவது. ஒரு நிமிக்கு அச்சியற்றும் விரைவு 150 - 2500 வரிகள், 15 அங்குல வரியில் 96-160 உருக்கள் இருக்கும். இது உருளை அச்சியற்றி, தொடர் அச்சியற்றி என இரு வகை.

link - இணைப்பு : 1) செய்தித் தொடர்பு வழி, எ-டு செயற்கை நிலா. 2) ஓர் ஆவணப்பகுதி அடுத்த ஆவணத்திற்குச் செல்ல உதவுவது, இது எச்டிஎம்எல் லின் ஒரு திறன்.

liquid crystal display, LCD - நீர்மப்படிகக் காட்சி, நீபகா : இலக்கக் கருவியமைப்புகளில் அதிகம் பயன்படுவது. எ-டு. கணிப்பான்கள், கடிகாரங்கள்.

Lisp, list processing -லிஸ்ப், பட்டியல் முறையாக்கல், பமு : 1960 களில் உருவான கணிப் பொறிமொழி. செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகம் பயன்படுவது.

list - பட்டியல் : தகவல் இனங்கள் கொண்ட தொகுதி. முன்னரே ஒழுங்காக வடிவமைக்கப் பட்டது.

list box - பட்டியல் பெட்டி : தெரிவுகளின் தொகுப்பைக் கொண்டது.

list box control -பட்டியல் பெட்டி இணைப்பு : இது படிவத்தில் குறிப்பிட்ட அளவு இடத்தை அடைப்பது. இதில் சுருள்பட்டைகள் தோன்றும்.

list, kinds of - பட்டியல் வகைகள் : இவை மூவகை 1) வரிசைப் பட்டியல், 2) வரிசையிலாப்பட்டியல், 3) வரையறைப் பட்டியல். வரிசைப் பட்டியல்: இது எம்எஸ் சொல்லில் உருவாக்கப்பட்ட எண்ணிட்ட பட்டியல் போன்றது. தகவல் இனத்திற்குமுன் பின்வருவன இருக்கும். 1) அரபு எண்கள் : 1, 2, 3. 2) உரோம எண்கள் சிறியது பெரியது : i, ii, iii; I, II, III, 3) நெடுங்கணக்கு சிறியது பெரியது : a, b, c, А, В, С. எ-டு <Ll> ஆப்பிள்கள். வரிசையிலாப் பட்டியல்: எம்எஸ் சொல்லைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெறிப்புப் புள்ளிகளைப் போன்றது. இது. இதில் பட்டியல் இனத்திற்குமுன் வட்ட அல்லது சதுர அடைப்புக் குறி இருக்கும். எ.டு. :<Ll> உருளைக் கிழங்கு. வரையறைப்பட்டியல் : உறுப்புகளை வரையறை செய்யப் பயன்படுவது. வரையறை இனத்திற்கு முன் வரையறை உறுப்பு இருக்கும் எ-டு, <DT> Dir.

list processing - பட்டியல் முறையாக்கல் : பட்டியலிலுள்ள தகவல்களை முறைப்படுத்தல்.

list structure - பட்டியல் அமைப்பு : இது தகவல் இனத் தொகுதி. இதிலுள்ள இனங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

load - நிரல் ஏற்றல் : கணிப்பொறியில் நிகழ்நிரல் தகவல்களைச் செலுத்தல். விளையாட்டு நிகழ்நிரல்.

load event - நிரல்ஏற்று நிகழ்வு : படிவத்தை நிரல் ஏற்றல்.

loader - நிரல் ஏற்றி : இது ஓர் அமைப்பு நிகழ்நிரல். கணிப்பொறி நினைவகத்தில் எந்திர மொழி நிகழ்நிரலைச் சேமிக்கப்பயன்படுவது.

local area network, LAN - உள்ளூர் பகுதி வலையமைவு, உபவஅ : குறும்பரப்பு வலையமைவு. இரண்டுகல் தொலைவிற்குள் அமைவது. இத்தொலைவில் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவர்.

local scope - உள்ளிட எல்லை: வரையறை எல்லை. ஒரு சார்பலனுள் ஒரு மாறி அறுதியிடப்படும் பொழுது, அச்செயல் முறையின் குறிமுறை இம்மாறியைப் பார்க்க இயலும். இதுவே உள்ளிட எல்லை என்பது. பா. global Scope, module scope.

location - அமைவிடம்: நினைவக நுண்ணறை. இதில் தகவல் கட்டளை சேமிக்கப்பட்டிருக் கும்.

location constant - அமைவிட மாறிலி : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலிலுள்ள கட்டளையை இனமறியும் எண்; உயர்நிலை நிகழ்நிரல் மொழியில் எழுதப்படுவது.

lock - பூட்டு : ஒர் இயங்கு தொகுதியில் மூலத்தின் தனிப்பயனை, ஒரு செயலுக்குக் கொடுக்கும் முறை.

log - குறிப்பகம் : பணிவரிசைகளின் தொகுப்பு. கணிப்பொறி வேலைகளின் குறிப்பகம்.

logic circuit- முறைமைச் சுற்று : முறைமைச் சார்பலனை அளிக்கும் கணிப்பொறி மின்சுற்று.

logic clause - முறைமை உட்பிரிவு : உட்பிரிவின் ஒரு வகை பா. clause.

logic design - முறைமை வடிவமைப்பு : முறைமைக் குறிகளால் காட்டப்படும் படம்.

logic diagram - முறைமைப் படம் : ஒரு கருவியமைப்பின் வடிவமைப்பை முறைமைக் கூறுகளாலும் அவற்றின் தொடர்புகளாலும் காட்டுதல்.

logic element - முறைமைக் கூறு : முறைமைச் செயலை நிறைவேற்றும் கருவியமைப்பு.

logic function - முறைமைச் சார்பலன் : ஒர் இலக்கச் சுற்றில் கட்டுதொகுதியின் செயலைத் தெரிவிக்கும் சார்பு. இது ஒர் இரும வெளிப்பலனை உண்டாக்கும் (1, 0). இது தன் உட்பலன்களிலுள்ள இருமக் குறிகைகளால் அறுதியிடப்படும். எ-டு உம்வாயில்.

logic gate - முறைமை வாயில் : முறைமைச் செயலைச் செய்யும் சுற்று. எ-டு உம் வாயில்.

logic instruction -முறைமைக் கட்டளை : அல்லது, இல்லை என்னும் முறைமைச் செயல்களுக்குரிய கட்டளை.

logic operation - முறைமைச் செயல் : கணிப்பொறியின் எண்கணிதம் சாராச் செயல். ஒப்பிடல், தேர்வுசெய்தல், இணைத்தல்.

logic symbol - முறைமைக்குறி : முறைமைப் படங்களில் முறைமைச் சார்பலனைக் குறிக்கும் வடிவம் அல்லது உரு. எ-டு <என்பது AND> என்பதற்குரிய குறி.

logic theory - முறைமைக் கொள்கை : முறைமைச் செயல்களைப் பற்றிய கருத்துகள் கொண்டது. இவை கணிப்பொறிச் செயல்களின் அடிப்படையில் அமைந்தவை.

logic unit - முறைமை அலகு : முறைமைச் செயல்களைச் செய்யும் பகுதி. இவை எண் கணிதத்திற்கு எதிரானவை. logo - லோகோ : உயர்நிலைக் கணிப்பொறி மொழி. சேமர் பேப்பர்ட் என்பவரால் புனையப்பட்டது. குழந்தைகள் எளிதில் கணிதம் கற்க உதவுவது.

log off, out - நிறுத்து (கணிப்பொறி).

log on, in - தொடங்கு (கணிப்பொறி).

loop - கட்டளைச் சுற்று : ஒரு நிகழ்நிரலின் கட்டளைத் தொடர். இதில் இறுதிக் கட்டளை ஒரு தாவல். இதனால் தொடர் தொடரும். இது ஒரு மாறி, முன்னமைந்த மதிப்பை அடையும் வரை நடைபெறும்.

Love Bug I - விரும்புபிழை I : இது இதுவரை ஏற்படாத கணிப்பொறிப் பிழை. 11-05-2000 அன்று பிலிப்போ கணிப்பொறி மாணவர் இது ஏற்படக் காரணமாக இருந்தார். இது தற்செயலாக நடந்தது. இந்நச்சுப்பிழை, கணிப்பொறி மின்னஞ்சல் அமைப்புகளை உலகெங்கும் முடங்கச் செய்தது. இம்மாணவர் பெயர் ஒனல் டி கஸ்மன். இவர் இதை எழுதினாரா என்பது இவருக்கே தெரியாது. இச்செயல் கணிப்பொறி உலகில் ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கிற்று.

Love Bug ll - விரும்புபிழை ll : புதிய மின்னஞ்சல் பிழை வேறுபெயர் ஹெர்பி விரும்புபிழை விட அதிக சேதத்தை உண்டாக்குவது குறிப்பாகக் கோப்புகளை துடைத்து எடுத்ததைப்போல் ஆக்கிவிடும்.

ஓனல் டி கஸ்மன்
(படத்தில் முன்னிருப்பவர்)

low level language - தாழ் நிலை மொழி : நுண்முறையாக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மொழி. இதை நாம் புரிந்து கொள்ள இயலாது. எ-டு. கோவை மொழி, எந்திர மொழி. செயல் விரைவு, பயனுறு நினைவகச் சேமிப்பு ஆகிய இரண்டும் இதன் சிறப்பியல்புகள்,

LPM - ஒரு நிமிக்கு இத்தனை வரிகள். lines per minute.

LPS - ஒரு வினாடிக்கு இத்தனை வரிகள். lines per Second.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/L&oldid=1047051" இலிருந்து மீள்விக்கப்பட்டது