உள்ளடக்கத்துக்குச் செல்

கணிப்பொறி அகராதி/P

விக்கிமூலம் இலிருந்து

P

package - A generalized programme written for a major application

அடைப்பம் : ஒரு பொருள் பயன்பாட்டுக்காக எழுதப் படும் பொது நிகழ்நிரல்.

packet - A collection of common punched cards : data расk.

அடைப்பு : துளையிட்ட பொதுவான அட்டைகள் திரட்டு : தகவல் அடைப்பு.

packet - A short fixed block of data used for transmission.

சிப்பம் : செலுத்துகைக்காகப் பயன்படும் குறுகியதும் நிலைத் ததுமான தகவல் தொகுதி.

pad-திண்டு : தனி எழுதியினால் ஒரு தட்டையான பரப்பில் உட்பலனை எழுதி உருவாக்கப் பயன்படும் கருவியமைப்பு. தகவல் உட்பலன் பாடமாக அல்லது வரைகலையாக இருக் கலாம்.

padding - தளமாக்கல் : ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம்.

paddle - A cursor control device used in computer games. துடுப்பு : கணிப்பொறி விளை யாட்டுகளில் பயன்படும் குறிப்பிக்கட்டுப்பாட்டுக் கருவி யமைப்பு.

page - பக்கம் : குறிப்பிட்ட அளவு நீளமுள்ள நிலையான தகவல் தொகுதி அல்லது ஒரு நிகழ்நிரலின் உட்பிரிவு. சேமிப்பில் இது ஒரு முழுமையாகக் கருதப்படுகிறது.

page fault - பக்கக் குறை : பக்கத்தை நினைவகத்தில் படிக்கும் பொழுது தோன்றும் குறுக்கீடு.

page formatting - பக்கம் படிவமைப்பு : ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்குரிய படங்களைக் காட்டுபவை. இந்நுண் படங்களைப் பயன்படுவதற்குரிய முன்படிவமைப்பைச் page

175

para

செய்யப் பாடத்தை ஒளிர் வாக்க வேண்டும். இதில் ஒரம், பக்கப் பாணி, ஒரங்களை மாற்றல் ஆகியவை அடங்கும்.

page orientation - பக்கம் அமைப்பு : அகலத்தை விட நீளம் ஆவணத்தில் அதிகமிருக் கும். இந்த அமைப்பு ஓவியம் எனப்படும். ஆனால், சில ஆவணங்களில் அகலம் நீளத் தைவிட அதிகமிருக்கும். இந்த அமைப்பு பருமக் காட்சி எனப்படும். மற்றொரு வகைப் படக் காட்சியமைப்பு. அடிக் குறிப்பும் தலைக்குறிப்பும் ஒவ் வொரு பக்கத்திலும் சேர்க்கப் படும்

page printer - பக்கம் அச்சியற்றி: இதில் ஒரு முழுப் பக்கத்திற் குரிய உருக்கோலம் அச்சியற்று வதற்கு முன் அறுதியிடப்படும்.

page reader - பக்கப் படிப்பி

இரு உருப்படிப்பி,

page style dialog box - பக்கப் பாணி உரையாடல் பெட்டி : இது ஓரங்களில் வேண்டிய மாற்றங்களைச் செய்ய உதவும்.

paging - பக்கமிடல் : இது மாயச் சேமிப்பில் ஒருமுறை. இதனால் பக்கங்களுக்கு கருவிச் சேமிப்பு ஒதுக்கப்படு கிறது. இப்பக்கங்களில் தகவல் கள் இருக்கும்.

paint - வண்ணமிடல் : இது பயன்பர்டு. இதில் படம் வரைந்து பின் அது வண்ண மிடப்படும்.

pan - தகட்டுப்படம் : படமுறை யாக்கலில் ஒரு நுணுக்கம். இதில் படம் திரையின் குறுக்கே செல்லும். பெரிய படத்திலிருந்து சில விவரங் களைக் காட்ட இது பயன்படுவது.

paper feed - தாள்விடல் அச்சியற்றி வழியாகத்தாள் இழுக்கப்படும் முறை.

para alignment - பத்தி வரிசை suflang யாக்கம் : இது நான்கு வகை. 1) இடப் பக்க வரிசையாக்கம் 2) வலப்பக்க வரிசையாக்கம் 3) மையப்படுத்தல் 4) நெருக்கிச் செய்தல்.

parallax - இடமாறு தோற்றப் பிழை ஒரு படத்தைப் பார்க்கும் பொழுது அதில் ஏற்படும் தோற்றத் திரிபு.

parallel access - ஒரு போகு அணுக்கம் : தகவல்களைச் சேமிப்புக்கு உள் மாற்றுதலும். வெளி மாற்றுதலும். இதில் எல்லாக் கூறுகளும் ஒரே சமயம் மாற்றப்படும், வேறு பெயர் ஒருபடித்தான அணுக் கம்.

parallel computer - ஒரு போகு, கணிப்பொறி : ஒரு சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மை அல்லது எண்கணிதச் para

176

pass

செயலைச் செய்யும் கணினி. parallel inter face - ஒரு போகு இடைமுகம் : இதில் ஒருபோகு தகவல் மாற்றம் நடைபெறும்; இம்மாற்றம் வெளிப்புற அலகு களுக்கும் முறையாக்கிக்கும் இடையே நடைபெறும்.

parallel operation - ஒரு போகு செயல் : ஒரே சமயம் பல மாதிரியான செயல்கள் நடை பெறுதல்.

parallel processing - ஒரு போகுமுறையாக்கல் : ஒரு கணிப்பொறியில் ஒரே சமயம் இரு நிகழ்நிரல்கள் ஓடுதல்.

parameter - A variable whose value is set in the main programme and passed along to a sub routine. சுட்டளவு : இது ஒரு மாறி. இதன் மதிப்பு முதன்மை நிகழ்நிரல் அமைக்கப்பட்டுப் பின் துணை நடைமுறைக்குச் செல்லும்.

parity check - சமச் சரி பார்ப்பு

இது ஒரு பிழையறியும் நுணுக்கம். செலுத்தியபின் கணிப்பொறிச் சொற்களின் துல்லியத்தைச் சரிபார்க்கப் பயன்படுவது.

parity check bit - சமச்சரி பார்ப்புப் பிட் : கணிப்பொறி யில் தகவல்களை அளவிடும் பொழுதும் பதியும் பொழுதும் ஒரு தகவலை ஓர் அலகி லிருந்து மற்றொரு அலகுக்குச் செலுத்தும் பொழுதும் பிழை கள் ஏற்படும். ஓர் எண்ணுரு விற்குரிய குறி முறையில் ஏற் படும் ஒரு தனிப் பிழையைக் கூடக் கண்டறியலாம். இதற்குக் குறிமுறையில் கூடுத லான ஒரு பிட்டைச் சேர்க்க வேண்டும். இதுவே இதைச் சரிபார்க்கும் பிட் (இருமி).

parity error - சமப்பிழை சரிபார்ப்பினால் கண்டறியப் படும் தவறான சமத்தினால் ஏற்படும் பிழை.

partition - பிரித்தல் : கணிப்பொறி நினைவகத்தின் ஒதுக்கிய பகுதி. ஒரு தனி

கணிப்பொறி நிகழ்நிரலைச்

செயற்படுத்தப் பயன்படுவது. Pascal - பாஸ்கல் : ஓர் உயர்

நிலைக் கணிப்பொறி மொழி.

கட்டமைப்பு நிகழ்நிரலை உரு வாக்கப் பயன்படுவது. இதைப் புனைந்தவர் ரிக்காலஸ் ஒர்த். ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கணித அறிஞரும் மெய்யறிவாளருமான பிளய்சி பாஸ்கல் பெயரால் அமைந்தது.

பா. structural programming. password - கடவுச்சொல்: செலுத்துசொல் குறிஉருக் களின் தொகுதி, பொருள் இருக்கத் தேவை இல்லை. கணிப்பொறியை அனுக இதைப் பயன்படுத்த வேண்டும்.

password control - கடவுச் patch

சொல் கட்டுப்பாடு : மென் பொருள்களுக்குள் செல்லு வதற்குரிய அனுமதிபெறச் செலுத்து சொல் ஒரு பாடப்பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் அடிக்கும் ஒவ் வொரு எழுத்திற்கும் அந்த எழுத்திற்குப் பதிலாக ஒரு விண்மீன் குறிப்பு வரும். நாம் கொடுக்கும் கடவுச்சொல் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு.

patch - ஒட்டுக்குறி : ஒரு குறி முறையின் பகுதி, ஒரு நிகழ் நிரலைத் திருத்தப் பயன்படுவது.

path - வழி : ஒரு கணிப்பொறி நிகழ்நிரல் கட்டளைகளின் முறைமை வரிசை, pattern recognition - கோலமறிதல் : வடிவம், குறிகை, வரி சை முதியவைகளைக் கணிப் பொறி மூலம் இனங்காண லும் அறிதலும். -

Paulina - பாலினா : தற்காலச் கணிப்பொறி மாயங்களைப் பற்றி நூல் எழுதியவர். இதில் இவர் கணிப்பொறியின் வியப் புகளையும் வேதனைகளையும் குறிக்கின்றார்.

peak load - உச்சிச் சுமை : ஒரு வலையமைவுக்குத் திட்டமிடப் படும் பெருமச் செய்திப் போக்குவரத்து. 

peak volume - உச்சி பருமன் : தன் வேலை நேரத்தில் ஒரு வலையமைவு ஒரே சமயம்

177

per

கையாளும் அழைப்புகளின் எண்ணிக்கை.

pen - தூவல் : கையால் எழுதிய உட்பலனை இயக்கும் கருவி யமைப்பு

performance - செயல்திறன்: ஒரு கணிப்பொறித் தொகுதி யின் திறனளவு. வேறுபட்ட செயல்திற முறைகள் உள்ளன. இத்திறன் மிப் (mip) எனப்படும். ஒரு வினாடிக்கு இத்தனை மில் லியன் கட்டளைகள் என்பதை இது குறிக்கும்.

peripheral devices - வெளிப் புறக் கருவியமைப்புகள் இவை உட்பலன் அலகு, வெளிப்பலன் அலகு. இரண் டாம் நிலைச் சேமிப்புக்குரிய கருவியமைப்புகள் (வட்டு, நாடா) ஆகியவை ஆகும்.

personal computer - தனியாள் கணிப்பொறி : தனிநபர் தன் வீட்டில் பயன்படுத்துவது. இக்கணிப்பொறி வளர்ச்சி இந்தியாவில் 25% அளவே உள்ளது.

personal identification code,

PIC - தனி அடையாளக் குறி. முறை, தஅகு : இது ஆறு உருக்களின் நீளத்தில் உள்ள சிறப்பெண். காந்த நாடாவில் பொருந்தி இருக்கும். இந்நாடா பிளாஸ்டிக் அட்டையில் பதிந்திருக்கும். பயனாளியை இனங்காணப் பயன்படுவது.

pertinency factor - பொருத்து phy

178

ΡLΑΤΟ

திறன் காரணி : மீட்கப்பட்ட உரிய ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையை அவ்வாறு இல்லாத மொத்த ஆவணங் களால் வகுத்து வரும் எண். இது ஒரு வீதம்.

physical file - மெய்க்கோப்பு: ஓர் இயங்கு தொகுதியில் உள்ள சிறப்பு மெய்ச்சேமிப்பு ஊடகம். இதில் அடங்கியுள்ள கோப்பே மெய்க் கோப்பு.

picture - படம்: உருக்காட்சி யில் தெரியும் தகவல் தொகுப்பு

picture description instruc tions, PDI - படவிளக்கக் கட்டளை, பவிக : கூடுதல் கூறுகளினால் உண்டாகும் படத்தை விளக்கப் பயன்படும் ஒரு வகைக் குறி முறை. வரிகள், கோடுகள், வில்கள் முதலியவை கூறுகள் ஆகும்.

picture element - படக்கூறு : வரைகலைக் காட்சியில் படத் தின் சிறிய கூறு.

picture frequency - பட நிகழ்வெண் தொலைக் காட்சிப் படத்தை உருவாக்கும் வரி எண்ணிக்கையின் முழுத் தொகுதி. அலகு ஹெர்ட்ஸ் (ஒரு வினாடிக்கு இத்தனை சுற்றுகள்) -

pie chart - வட்ட விளக்கப்படம் : வட்ட வட்டமாகத் தக வல்களைத் தெரிவிக்கும் படம்.

pin - ஊசி : நறுவலில் உள்ள சிறுகால்கள். அச்சிட்ட சுற்று

பலகையில் உள்ள இணை துளைகளுக்கு ஒத்தவாறு இருக்கும்.

pin board - ஊசிப்பலகை : செருகு வடிவப் பலகை. இங்கு ஊசிவடிவிலுள்ள நாணற்ற செருகிகளால் இடை இணைப்புகள் அமையும்.

pin feed - ஊசி வழி ஊட்டல் : ஓர் அச்சியற்றியின் ஊசிப் பொறிநுட்பம். இது அச்சிட வேண்டிய தாளைச் செலுத் தும். 

pipelining - தொடர்செலுத்துகை : முன்னுள்ள கட்டளை முழுமையாக நிறைவேறுவ தற்கு முன் ஒரு கணிப் பொறிக் கட்டளையைத் தொடங்கும்.

pixel-picture element - குறும்படம் : படக்கூறு. பா. icon.

Planet | Q 56 - l (பிளானெட்

ஐகுயு 56 (கோள் நுண்ணறிவு) : கல்கத்தாவில் அமைந்துள்ள தும் சிறப்பு வாய்ந்ததுமான பன்ம ஊடக விளையாட்டுத் திடல். சிறந்த தொடக்கநிலைக் கல்வி அளிப்பதற்காக உரிய மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. 12 வயதுள்ள மாணவ மாணவிகள் பயன் பெறுவர். (1999).

PLATO - பிளேட்டோ : கணிப் பொறி வழியமைந்த கல்விமுறை. 1000க்கு மேற்பட்ட முனையங் களைக் கொண்டது. முழுக்க முழுக்கக் கல்வி நோக்குள்ளது. PLE

179

print

PLEDM, Phase State Low Electron Drive Memory - பிளடம், கட்டநிலை தாழ் மின்னணு இயக்க நினைவகம் : இது மிகச் சிறிய படிகப் பெருக்கி. ஆற்றல்வாய்ந்த நினைவகம். ஜப்பான் கிச்சாசி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள் - PL I M - Programming language for micro processors. பிஎல்/எம் : நுண்முறையாக்கி களுக்குரிய நிகழ்நிரல் மொழி. PL. I 1 - Programming language 1, developed in the mid 60's. It combines features useful for both scientific and data processing applications. பிஎல்/ : நிகழ்நிரல் மொழி 1 நடு 1960களில் உருவானது. அறிவியல் மற்றும் தகவல் முறையாக்கு பயன்பாடுகளுக்கு உதவுவது. plotter - A device for producing hard copy of graphic images by controlling pens. வரைவி : கட்டுப்பாட்டு எழுதி கள் மூலம் வரைகலைப் படங் களின் வன்படியை உண்டாக் கும் கருவியமைப்பு. plug - செருகி : நெகிழ்வுள்ள நாண் கொண்ட கருவியமைப்பு. ஒவ்வொரு முனையிலும் ஒன் றுக்கு மேற்பட்ட ஊசிகள் இருக் கும். ஒரு திருத்தியின் கூடுகளை இணைக்கப் பயன்படுவது.

B.12,

pocket - அடுக்கி : பிரிப்பி தொடர்பாகப் பயன்படுவது. pointer - குறிகாட்டி : தினை வகத்தில் குறிப்பிட்ட இடத்தி லுள்ள தகவலை இடங் காணப்பயன்படும் முகவரி. port: வாயில் : வெளிப்புறப் பகுதிகளையும் கணிப்பொறி களையும் இணைக்கும் உட் பலன் / வெளிப்பலன். post - மேம்படுத்து : தகவ லுள்ள ஆவணத்தை உயர்த்து தல். primary key - gpg, sit aou, ¿ g pal : Lt.relational data base print and web - 2133, th இடையமும் : அச்சு விரைவு, அச்சு எழுத்துவகை, உருவத் தன்மை, பார்க்குமிடத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தவரை இடையத்தை

விட அச்சு மேலானது.

இடையம் வரைகலையைக் குறைத்துச் சிறிதாக்கல், பாடத் தைச் சுருக்கல், குறைந்த வகை வகையான எழுத்துகள், வரை யறையுள்ள திட்டவரைகள். இவை இடையத்தை வருங் காலத்தில் வளப்படுத்தும். printed circuit - 9ļ#3, #5 byl : ஒரு பலகையின் மேற்பரப்பில் மின்சுற்றுப் படத்தைக் கணிக் கும் விளக்கங்களை உண்டாக் கும் நுணுக்கம். printer - அச்சியற்றி : வெளிப் print

180

print

பலன் கருவிக்கு வன்பொரு ளை உண்டாக்கும் கருவி யமைப்பு. printer, kinds of - அச்சியற்றி வகைகள் : இவை பின்வருமாறு

1) வரி அச்சியற்றி ஒரு சமயம் முழு வரியை அச்சியற்றும். அச்சியற்றும் விரைவு 1 நிமிக்கு 150 - 2000 வரிகள், 15 அங்குல வரியில் 96 - 160 உருக்கள் இருக்கும். ஒரு செங்குத்து அங்குலத்திற்கு 6-8 வரிகள் அச்சாகும். இதன் வகை : 1) உருளை அச்சியற்றி ! இதில் உருளை இருக்கும் இதன் மேற்பரப்பில் அச்சிடப்பட வேண்டிய உருக் கள் பதியும். 2 தொடர் அச்சி யற்றிகள் . இதில் ஓர் எஃகுப் பட்டை உண்டு. இதில் உருத் தொகுதிகள் பதிக்கப்படும் 2) தொடர் அச்சியற்றி ! இது ஒரு சமயம் ஒர் உருவையே அச்சியற்றும். இவ்வுருக்கள் தட்டு அச்செழுத்துகளைப் போன்றவை. ஒரு வினாடிக்கு 30-300 உருக்கள் அச்சாகும் யாவரும் நன்கறிந்தது தொடர் அச்சியற்றி. புள்ளி அணி அச்சியற்றி ! இதில் அச்சிடப் படவேண்டிய உருக்கள் நேர்த் தியான புள்ளிகளாக இருக்கும். அச்சுத்தலை, ஊசிகள் வரிசை யைக் கெண்டிருக்கும். இடம் வலமாக வலம் இடமாகவும் அச்சிடும். அச்சு விரைவு ஒரு

வினாடிக்கு 300 உருக்கள். 3) லேசர் அச்சியற்றி ! இதில் ஒளிக் கடத்தும் உருளையில் அச்சிடப்பட வேண்டிய உரு வை லேசர் ஒளிக்கற்றைக் கட்டுப்படுத்தும். உருளை ஒரு மை உருளையை வெளிப் படுத்திய பகுதிகளைக் கவரும். இந்த உரு தாளுக்குச் செல்லும். உருளையோடு தாள் தொடர் புள்ளது. குறைந்த விரைவு லேசர் அச்சியற்றிகள் ஒரு நிமிக்கு 4-16 பக்கங்கள் அச்சி யற்றும். இது இன்று அனை வரும் பயன்படுத்துவது. மிக விரைவு லேசர் அச்சியற்றி ஒரு நிமிக்கு 10,000 வரிகள் அச்சி யற்றும் உருக்கள் மிக நேர்த்தி யாக இருக்கும். 4) எழுத்துத்தர அச்சியற்றி இதில் உருக்கள் கூரியதும் தொடர்ந்த துமான வரிகளால் குறிக்கப் படும். ஆகவே, வெளிப்பலன் நன்றாக இருக்கும் எடு, மை, பீச்சு அச்சியற்றி.

print format - அச்சியற்றும் படிவமைப்பு : ஓர் அச்சியற்றி யில் தகவல்களை அச்சியற்று தலை விளக்கும் அமைப்பு.

printing - அச்சிடல் பயனாளிக்கு வெளிப் பலனை அளிப்பது. இப்பலன் பதிப்பு இயற்றியிலிருந்து வரும் பாட மாக இருக்கும், ஒரு நிகழ்நிரல் நிலையாக இருக்கலாம். தகவல் அறிக்கையாக இருக்கலாம். விஷாவல் பேசிக் அச்சிடலை நன்கு கையாளுகின்றது.

printout - A hard copy produced by a printer: eg. printed page.
அச்சுப்பாடு : அச்சியற்றி உண்டாக்கும் வன்படி எ-டு அச்சிட்ட பக்கம்.

problem - சிக்கல் : தீர்வு காண வேண்டிய ஒன்று.

procedure - செய்முறை : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய படிநிலை வரிசை.

process - செயல்முறை : கணிப்பொறி மூலம் தகவலைக் கையாளல்.

processor-செயல்முறையாக்கி : தகவல்களை முறையாக்கும் கருவியமைப்பு. இது மைய முறையாக்கியையும் குறிக்கும்.

product - பெருக்கற்பலன் : இரு காரணிகளைப் பெருக்கி வரும் பலன் : பெருக்கி, பெருக்கப்படும் எண். 4 x 8.

programme - An algorithm expressed in a programming language.'நிகழ்நிரல் : நிகழ்நிரலாக்கும் மொழியில் தெரிவிக்கப்படும் விதிமுறை.

programme editor - A computer routine used in timesharing systems.நிகழ்நிரல் பதிப்பு இயற்றி : நேரப் பகிர்வுத் தொகுதிகளில் பயன்படும் கணிப்பொறி நடைமுறைச் செயல்.

programmable Read Only. Memory, PROM - படிப்பதற்குரிய நிகழ்நிரலாக்கும் நினைவகம், பஉநிதி : படிப்பதற்குரிய நினைவகத்தைப் போன்றது. பயனாளி தான் இதை திகழ்நிரல் செய்ய வேண்டும்.

programmer - நிகழ்நிரலர் : நிகழ்நிரலைக் கணிப்பொறிக்கு உருவாக்குபவர்.

programming language - நிகழ் நிரலாக்கும் மொழி : ஒரு கணிப்பொறிக்கு நிகழ்நிரலர் ஒரு நிகழ்நிரலை எழுதப் பயன்படுத்தும் மொழி.

project - திட்டம் : இது விஷுவல் பேசிக் திட்டம் ஆகும். இது ஓர் அமைப்புப் பெட்டி ஒரு பயன்பாட்டுக்கு வேண்டிய வேறுபட்ட எல்லாப் பகுதிகளையும் கொண்டிருக்கும். திட்டப் படிவங்கள். குறிமைக் கோப்புகள், மூலக் கோப்புகள், சிறப்புக் கட்டுப்பாடுகள், ஆவணக் கோப்புகள் ஆகியவை திட்டத்தில் உண்டு.

project content - திட்டப் பொருள் : ஒவ்வொரு சமயமும் திட்ட சேமிக்கப்படும். விஷுவல் பேசிக், திட்டக் கோப்பை மேம்படுத்தும். திட்டக் கோப்பிலுள்ளவை பின்வருமாறு : திட்ட எக்ஸ்புளோரர், சாளரத்தில் காணப் படும் கோப்புப் பட்டியல், கட்டுப்பாட்டுக் குறிப்பு உதவிகள். மேலும், இத்திட்டத்தோடு வேறுபட்ட வகைக் கோப்புகளையும் சேர்க்கலாம்.

Project Explorer Window - திட்ட எக்புளோரர் விண்டோ (திட்ட ஆராய்விச் சாளரம்) : ஒரு திட்டத்திலுள்ள கோப்புகளை இனங்கான, திட்ட எக்ஸ்புளோளர் விண்டோ பயன்படுகிறது. திட்டங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் பட்டியலிட மரநோக்கை இது பயன்படுத்துகிறது. எக்ஸ்புளோரரில் படி நிலை வரிசை உச்சியில், திட்டங்கள் இருக்கும். எக்ஸ்புளோரரின் தலைப்புப்பட்டை, சொல் திட்டத்தையும் செயலுறு திட்டத்தின் பெயரையும் கொண்டிருக்கும்.

properties - பண்புகள் : விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை.
பொதுவான பண்புகள் பின்வருமாறு : 1) இடம், 2) உச்சி, 3) உயரம், 4) அகலம், 5) பெயர், 6) பார்க்கக் கூடியது, 7) இயலக் கூடியது.
தவிர, ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் ஒரு பண்பு உண்டு. அதன் வழக்காற்றை ஒட்டி, அது தவறுபண்பு எனப்படும் எ-டு பாடப்பெட்டி பாடப் பண்பையும், குறியம் தலைப்புப்பண்பையும் கொண்டிருக்கும்.

Properties Window - பண்புச் சாளரம் :தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசையில் நோக்கப்படும். எ-டு ஒரு படிவத்தில் முதல் பாடப் பெட்டிக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் பொழுது, அதன் பெயர்ப் பண்பு, தவறினால் பாடம் 1 என அமைக்கப்படும்.

protection - பாதுகாப்பு : மென்பொருள் அலகுகளுக்கிடையே குறுக்கீட்டைத் தவிர்க்கும் நுணுக்கங்கள்.

Protocol - மரபுச்சீரி : இது ஒரு மரபுத் தொகுதி. இரு தொகுதிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது. மையச் செயலகமும் அச்சியற்றியும் இம்மரபு மூலமே பேச இயலும்.

pseudo code - பொய்க் குறிமை

pseudo operation - போலி கைச் செயல் : வன்பொருளைப் பயன்படுத்திச் செய்யாத செயல்.

punch card - துளையிட்ட அட்டை : திட்டமான வினாத்தாள் அட்டை, தகவல் சேமிக்கப்பயன்படுவது.

push down list - கீழிறக்கு பட்டியல் : இது ஒரு பட்டியல் அமைப்பு. இதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட தகவல் இனம் பட்டியலில் முதலாவதாக வரும். முதலாவதாக உள்ளதே மீட்கப்படும். ஏனையவை பின் தள்ளப்படும். பா. last in first out.

push up list - மேல் ஏற்றும் பட்டியல் : இது ஒரு பட்டியல் அமைப்பு. இதில் சேமிக்கப்பட்ட கடைசித் தகவல் இனம் பட்டியல் கடைசியில் இருக்கும். ஏனையவை அப்படியே இருக்கும். பா. first in first out.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/P&oldid=1047059" இலிருந்து மீள்விக்கப்பட்டது