கணிப்பொறி அகராதி/T

விக்கிமூலம் இலிருந்து

T

tab - தத்தி : உரையாடல் பெட்டியில் வேறுபட்ட தெரிவுகளைக்காட்டப் பயன்படுவது.

table - அட்டவணை: நினை வகத்தில் அமையும் தகவல் வரிசைக் குறிப்பிட்ட திறவைப் பயன்படுத்தித் தனித் தகவல் இனங்களை மீட்கலாம். அட்டவணையாக இருக்கும் பொழுது, தகவல்களை எளிதாகப் படிக்கலாம். இதற்கு <TABLE> மற்றும் <TABLE> ஒட்டுகளைப் பயன் படுத்த வேண்டும். இந்த ஒட்டு, அகலம், நுண்ணறை இடைவெளி, நுண்ணறை உள்வெளி, கரை இயல்புகளைப் பயன்படுத்தும். அட்டவணையில் <TR> மற்றும் <TR> ஒட்டுகள் வரிசைகளை வரையறை செய்யும். <TH> மற்றும் <TD> ஒட்டுகள் நுண்ணறைகளின் உள்ளடக்கங்களைக் குறிக்கப் பயன்படும். <TH> ஐப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நுண்ணறைகளின் உள்ளடக்கங்கள் மையமாகவும் தடிப்பாகவும் இருக்கும். இவ்விரு முடிவு ஒட்டுகளுக்குரிய ஒத்த முடிவு ஒட்டுகள் </TH> மற்றும் </TD> ஆகும்.

table attributes - அட்டவனை இயல்புகள் : இவை பின்வரு மாறு. 1) அகலம், 2) நுண்ணறை இடைவெளிவிடல் 3)நுண்ணறை உள் வெளி 4)கரை.

table formatting - அட்டவனைப் படிவமாக்கல் : இதை உருவாக்கக் கருவிப்பட்டை உதவும். இதில் பல நுண்படங்கள் இருக்கும். இவை அட்டவணைத் தொடர்பான பல வேலைகளுக்குப் பயன்படுபவை. ஒ. page formatting.

tabular language - அட்Lவணை மொழி : முடிவு அட்டவணைகள் தொடர்பாக நிகழ்நிரல் தேவைகைளக் குறிப்பிடப் பயன்படுவது. இங்கு அட்டவணை, சிக்கல் வழி நிகழ்நிரல் மொழியின் பணியை நிறைவேற்றுவது.

tags - ஒட்டுகள் : கோண அடைப்புகளில் (< >). இவை திறவுச்சொல்லைக் கொண்டிருக்கும். இச்சொல் ஒட்டின் வேலையைக் குறிக்கும். எ-டு. <HEAD>, <TITLE>, <HTML> ஒட்டுகள் பொருள் உணர்வு இல்லாதவை. பெரும்பாலானவை இணையாக இருக்கும். முதல் ஒட்டு தொடங்கு ஒட்டு எனப்படும். இது ஒரு விளைவு தொடங்குவதைச் சுட்டும். இரண்டாம் ஒட்டு முடிவு ஒட்டு எனப்படும். ஒரு விளைவின் முடிவைக் குறிப்பது.

tags, kinds of - ஒட்டுகளின் வகைகள் : இவை பின்வரு மாறு. 1) கூடுடை ஒட்டுகள் : இவை ஒட்டுக்குள் ஒட்டாகும். இவற்றில் உடல் ஒட்டு. எச்டிஎம்எல் ஒட்டினுள் அமையும்.

2) கரை, சாய்வெழுத்து. கீழ்க் கோடு மற்றும் மைய ஒட்டுகள் : இவை பாடத்தைக் கொட்டை எழுத்திலும், சாய்வெழுத்திலும் அமைத்துக் கீழ்கோட்டுப் பக்கத்தின் மையத்தில் வைக்க உதவுபவை.

3) BR ஒட்டு : இது கரை ஒட்டு. இது வரிமுறிவை உண்டாக்குவது.

4) P ஒட்டு : இது பத்தி ஒட்டு. ஒரு புதிய பத்தியைக் குறிப்பது.

5) தலைப்பு ஒட்டுகள் : இவை கொட்டை எழுத்து ஒட்டுகள்.

6) கிடைமட்டக் கோட்டு ஒட்டு : கிடைமட்டக் கோடுவரைய இது உதவும். 7) சிறிய ஒட்டு : சிறிய எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. 8) எழுத்து வகை ஒட்டு : எழுத்துவகை, அளவு, நிறம் ஆகியவற்றைக் குறிக்க இது பயன்படும். 9) மார்குயூஸ் ஒட்டு : பாடத்தை உருளச் செய்வது இது. 10) உருவ ஒட்டு : பாடத்தில் உருவத்தைச் சேர்ப்பது. 11) ஒலிஒட்டுகள் : இவை ஒலிக் கோப்புகளில் பயன்படுபவை.

tag format - ஒட்டுப் படிவமைப்பு : ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைத்தல்; அவற்றை ஒட்டுகளாகப் பயன்படுத்தல்.

takedown time - எடுக்கும் நேரம் : எடுக்கும் செயலை முடிக்கத் தேவைப்படும் நேரம்.

tally reader - உடன்படு படிப்பி: உடன்படு பட்டியலிலிருந்த தகவல்களை அச்சிட்ட எழுத்துகளாகப் படிக்கும் எந்திரம். எ-டு ஒளியுரு அறிதலைப் பயன்படுத்தல்.

Tamil and Internet - தமிழும் இணையமும் : இந்திய மொழிகளில் முதன்முதலில் இணையத்தில் அறிமுகமாகியது தமிழாகும். தமிழ்ச் சொல் முறையாக்க மென்பொருள் 1978 வாக்கில் தொடங்கியது. எல்லாத் தமிழ் எழுத்துகளையும் விசைப் பலகையில் அடக்கலாம். மின்னஞ்சலிலும் பயன்படுவது. தமிழ்ப் பேரகராதி, சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருக்குறள் முதலியவை இணையத்தில் உள்ளன.

Tamil Internet 2000 - தமிழ் இணையம் 2000 : இது மூன்றாம் அனைத்துலக மாநாடு. தமிழ் அடிப்படையில் அமைந்த இணையத்தைத் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்தல். 22-24 ஜூலை, 2000 சிங்கப்பூரில் நடந்தது. தமிழ் இணையம் 1998 சிங்கப் பூரிலும் தமிழ் இணையம் 1999 சென்னையிலும் நடந்தன. சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழ் விசைப்பலகை அளவை செய்யப்பட்டது.

Tamil Internet keyboard - தமிழ் இணைய விசைப்பலகை 1999: 15-06-99 அன்று முதலமைச்சர் அவர்களால் முறைப்படி இது துவக்கி வைக்கப்பட்டது. தமிழ் இணையம் 1999 இல் திட்டப்படுத்தப்பட்டு அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

Tamil Satyam - தமிழ் சத்தியம் : இது மிக விரிவான தமிழ் வலையத்தளம். உலகம் முழுவதும் உள்ளது. உலகத்தை இதன் வழி காணலாம். சிங்கப் 
தமிழ் இணையம்-99 விசைப்பலகையைச் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு கலைஞர் அவர்கள் முறையாகத் தொடங்கிவைத்தல் (படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து வலம்) திரு. ஜானகிராமன், புதுவை முதலமைச்சர், முனைவர் அனந்தகிருஷ்ணன், முதலமைச்சரின் தகவல் தொழில்நுட்பவியல் அறிவுரையாளர், முதல்வர் கலைஞர் மைய அமைச்சர் முரசொலி மாறன்.

பூரில் அமைந்து அனைத்துச் செய்திகளையுந் தருவது.

Tamil Virtual University - தமிழ் இணையப் பல்கலைக் கழகம் : தரமணியில் அமைய உள்ளது. தமிழ் இணையத்தையும் அது தொடர்பான பல துறைகளையும் தொழில்நுட்ப முறையில் வளர்ப்பது.

tamizha-tamizha - தமிழா-தமிழா : உலக அளவில் வரும் மின்னிதழ் இதன் நிறைவேற்று அலுவலர் பிரன் கோஸ் 2000 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அனைத்து இதழியல் சிறப்புகளையுங் கொண்டது. நடத்துவது யூடிவி இண்டர் ஆக்டில்.

TANITEC, Tamil Nadu Institute of Information Technology - டேனிடெக், தமிழ் நாடு தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம், தநாததொநி 11-09-98 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத் துறைகள் பலவற்றையும் வளர்ப்பது.

tape - நாடா : தகவல்களைப் பதிவு செய்யும் நீண்ட நாடா. எ-டு காந்த நாடா.

tape alternation - நாடா மாற்றம் : இம்மாற்றம் நிகழ் நிரல் கட்டுப்பாட்டில் நடை பெறுவது.


tape file - நாடாக்கோப்பு : ஆவணத் தொடர் நாடாவில் வரிசையாக அமைந்திருக்கும்.


target attribute - இலக்கு இயல்பு : ஒவ்வொரு இணைப்போடும் இது பயன்படுவது. இணைந்த ஆவணம் காட்டப்பட வேண்டிய சட்டத்தைக் குறிப்பது.


target computer - இலக்கு கணிப்பொறி : குறிப்பிட்ட பொருளறி நிகழ்நிரலை ஓட விடப் பயன்படுவது.


target language - இலக்கு மொழி : நிகழ்நிரல் மாற்றப்படும் மொழி.


task - பணி : நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளைத் தொகுப்பு.


task descriptor - பணி விளக்கி : பன்மப் பணிமுறையில் ஒரு பணி குறித்த இன்றியமையாத் தகவல், வேறுபெயர் நிலைத்திசைச்சாரி.


task management - பணி மேலாண்மை : ஓர் இயங்கு தொகுதியின் வேலைகளைக் கண்காணித்தல், அட்டவணையாக்கல், தகவல்களை அனுப்புதல் முதலியவை.


TELCOMP - டெல்காம்ப் : கணிப்பொறி மொழி. போல்ட், பெரகை, நியுமன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. நேரப்பகிர்வு மொழி.


telecommunication - தொலைத்தொடர்பு : தொலைபேசிக் கம்பிகள், வடங்கள், ஒளி இழைகள் ஆகியவை மூலம் செய்தித் தொடர்பு கொள்ளுதல்.


teleconferencing - தொலைக்கூட்டம் : தொலைக் காட்சிவழி நடைபெறுவது.


telemedicine - தொலை மருத்துவம் : தொலைவிலிருந்து மருத்துவச் செய்திகளைப் பல நிலைகளிலும் பெறுதல். இது இன்று உலகளவில் நடைபெறுவது.


teleshopping - தொலைபேசி வழிப் பொருள் வாங்குதல் : தொலைபேசியில் தெரிவித்து நமக்கு வேண்டிய பொருள்களை வாங்குதல். இதில் அலுவலகமும் கிடங்கும் தனித்தனியே இருக்கும்.


terminal - முனையம் : தகவல் தொடர்புத் தொகுதியிலிருந்து தகவலைப் பெறவும் அனுப்பவும் பயன்படும் கருவியமைப்பு.


test - ஆய்வு : தகவல் கூறை ஆய்ந்து அது உரிய நிலைக்கு உகந்ததா என்று பார்த்தல்.


test data - ஆய்வுத் தகவல் : மாதிரித் தகவல். நிகழ்நிரலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது.


test programme - ஆய்வு நிகழ்நிரல் : ஒரு கணிப்பொறியின் text 216 text

வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல்.

test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு.

text - பாடம் : உரை. ஒரு செய்தியின் கூறு.

text attribute - பாட இயல்பு : பாடம் காட்டப்பட வேண்டிய நிறத்தை இதன்மூலம் குறிப் பிடலாம்.

text boxes - பாடப்பெட்டிகள் : உரைப்பெட்டிகள். இவை படிவங்களில் அடிக்கடி பயன் படும் கட்டுப்பாடுகள். ஒரு பாடப்பெட்டி என்பது எளிய வகைப்பெட்டி. இதில் பயனாளி தன் உட்பலன் பாடத்தை உள்விடலாம். இதை உருவாக்க உட்பலன் ஒட்டைப் பயன்படுத்த வேண்டும். இதன் இயல்புகளாவன: எழுத்து, பெயர், அளவு, மதிப்பு.

text editing - பாடப் பதிப்பு : புதிய பாடத்தை உட்செலுத்தல் அல்லது ஆவணத்தில் இருக்கும் பாடத்தை மாற்றியமைத்தல்.

text editor - பாட பதிப்பியற்றி: ஒரு கணிப்பொறியிலுள்ள நிகழ்நிரல். மூல நிகழ்நிரலைப் பதிப்பிக்க நிகழ்நிரலருக்கு உதவுவது.

text formatting - பாட படிவமைப்பு : உரைக்குத் தகுந்த வடிவமைப்பு அளித்தல்.

text selection - பாடத்தேர்வு : சொல், வரி, பத்தி, முதலிய வற்றை அறியப் பாட அறிவு தேவை. இதற்கு அதை எவ்வாறு தோந்தெடுப்பது என்பதை நாம் அறியவேண்டும். பாடத்தேர்வுக்குப் பின், பாடத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பாடத்தை நகர்த்திப் படி எடுக்க வேண்டும்; கொட்டை எழுத்துகளில் அமைக்க வேண் டும். பாடத்தின் எழுத்து, நிறம் ஆகியவற்றையும் மாற்றலாம். பாடத்தை மாற்றச் சுட்டெலி அல்லது விசைப் பலகையைப் பயன்படுத்தலாம்.

text selection with keyboard - விசைப் பலகைப் பாடத் தேர்வு : இதிலுள்ள படி நிலைகள் பின்வருமாறு.

1) தேர்ந்தெடுக்க வேண்டிய பாடத் தொடக்கத்திற்குச் செருகு புள்ளியை நகர்த்துக.

2) இடம்பெயர் திறவை கீழ் அழுத்துக. இயக்கத்திறவுகளைத் தேவைப்பட்ட பாடத்தைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்துக.

3) இடம்பெயர் திறவு விடுபடும் பொழுது,பாடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

text selection with mouse - சுட்டெலிப் பாடத்தேர்வு : text

217

tool

இதிலுள்ள படிநிலைகள்.

1) தேர்ந்தெடுக்க வேண்டிய பாடத்தொடக்கத்திற்குச் செருகுபுள்ளியை நகர்த்த வேண்டும்.

2) இடது சுட்டெலிப் பொத்தான் அழுத்தப்பட வேண்டும், கீழ்க்கொண்டு செல்லப்பட்டு, தேர்வுசெய்ய வேண்டிய பாடத்திற்குக் குறுக்கே நகர்த்தப்பட வேண்டும்.

3) தேவைப்படும் பாடம் தேர்வு செய்யப்பட்ட பின், சுட்டெலிப் பொத்தானை விடுவிக்க வேண்டும்.

text selection shortcuts - பாடத் தேர்வுக் குறுக்கு வழிகள்:

1) சொல்லில் இரு தட்டல்கள்: சொல்லைத் தேர்ந்தெடுக்க

2) வரிக்கு அடுத்து ஒரு தடவை தட்டல்: குறிப்பிட்ட வரியைத் தோந்தெடுக்க

3) மைய A ஐ அழுத்துக: முழு ஆவணத்தையும் தேர்ந்தெடுக்க.

thrashing - பிழையுரல் : மாயச் சேமிப்புத் தொகுதிகளில் உண்டாகும் பிழைநிலைமை.

Tidel Software Park - டைடல் மென்பொருள் பூங்கா: தரமணியில் தமிழ்நாடு அரசு பெரும் பொருள் செலவில் அமைத்துள்ளது. 04-07-2000 அன்று தலைமை அமைச்சர் மாண்புமிகு திரு. வாஜ்பாய் அவர்களால் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகம் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவது. இது அமைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு.

timer control - நேரக் கட்டுப்பாடு : விஷ-வல் பேசிக்கில் உள்ள எளிய கட்டுப்பாடு இது. ஓர் பயன்பாட்டில் நேரத் தொடர்பான முறையாக்கலைப் பயன்படுத்த உதவுவது. இதைப் பயன்படுத்தும் பொழுது மூன்று பண்புகளை மாற்றவேண்டும். 1) பெயர்ப் பண்பு 2) இடைவெளிப் பண்பு 3) இயலும் பண்பு.

time series - நேரத் தொடர்: நேரப்பகிர்வில் தகவல்களைத் தனித்தனி கூறுகளாகத் தொடராகச் செலுத்துதல். இத்தொடரில் குறிப்பிட்ட நேரங்களுக்கு அளவறி மதிப்புகள் ஒதுக்கப்படும்.

timing error - நேரப்பிழை: ஒரு நிகழ்நிரலை வடிவமைக்கும் பொழுது உண்டாகுத் தவறு.

tool bar - கருவிப் பட்டை : விஷ-வல் பேசிக்கின் ஒரு பகுதி. இதில் வேறுபட்ட பொத்தான்கள் உள்ளன. நான்கு வகைக் கருவிப் பட்டைகளாவன. Free from select

Eraser

Pick colour

Pencil

Airbrush

Line

Rectangle

Ellipse

Selection

Fill with colour

Magnifier

Brush

Text

Curve

Polygon

Rounded Rectangle


கருவிப்பட்டை

1) திட்டக் கருவிப்பட்டை : இது தவறுதல் கருவிப்பட்டை திரையின் மேலுள்ளது.

2) பதிப்புக் கருவிப்பட்டை : விஷூவல் பேசிக் குறிமையைப் பதிப்பிக்கும் பொழுது அதற்கு உதவப் பல தகவல் இனங்களைக் கொண்டது.

3) பிழை களையும் கருவிப் பட்டை : பிழை நீக்க உதவுவது.

4) படிவப் பதிப்பியற்றி : சரி செய்யும் தகவல் இனங்களைப் படிவங்களில் கொண்டது.


tool box - கருவிப் பெட்டி : படிவத்திற்குரிய பல கட்டுப்பாடுகளையும் இது கொண்டது. கட்டுப்பாடுகள் ஒன்றில் சுட்டெலிக் குறிப்பியை நகர்த்த ஒரு சிறிய மேல் மீட்புக் கருவிக் குறிப்பு தெரியும். இது கட்டுப்பாட்டைச் சுருக்கமாக விளக்கும். ஒரு புதிய திட்டம் தொடங்கும் பொழுது இக்கட்டுப்பாடுகள் முன்கூட்டியே கருவிப் பெட்டியில் சேர்க்கப்படும்.


trace - சுவடு : மென்பொருள் செய்முறையின் பொழுது தோன்றும் எல்லாப்படி நிலைகளின் பட்டியல் முறைமைப் tra

பிழையை அறிதலே இதன் நோக்கம்.

trace programme - சுவடு நிகழ்நிரல் : இது குறையறி நிகழ்நிரல், ஏனைய நிகழ்நிரல்களில் பிழைகளைக் கண்டறிந்து சரிபார்க்க இது பயன் படுவது.

track- தடம் : காந்த நினைவகக் கருவியமைப்பில் உள்ள வழி: தகவல்களைப் பதிவு செய்ய்ப் பயன்படுவது.

transaction - நடவடிக்கை : ஆவணத்தை உருவாக்குவதற் குரிய நிகழ்வு.

transaction data - நடவடிக்கைத் தகவல் : இலக்கங்கள் அல்லது உருக்களின் திரட்டு. முதன்மைக் கோப்பை உருவாக்க உதவுவது.

transfer - மாற்றுகை : நினைவகத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் தகவல் களைப்படி எடுத்தல் நிகழ் நிரல் கட்டளை மூலம் இது நடைபெறுகிறது.

transistor - படிகப் பெருக்கி: மின்னணுக் கருவியமைப்பு. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த அரைகுறைக் கடத்திப் பண்புகளைப் பயன்படுத்து வது. திறப்பிகளை (வால்வுகள்) மாற்றீடு செய்து கருவியின் அளவைக் கணிசமாகக் குறைத் தது. இது செய்த புரட்சியை இப்பொழுது லேசர் செய்கிறது. லேசர் கணிப்பொறியின் ஓர் இன்றியமையாப் பகுதியாக உள்ளது. கணிப்பொறி வழியாகவே ஒளியச்சு நடை பெறுவது.

translation- பெயர்ப்பு: கணிப்பொறி மாதிரி போல் அமைந்த பொருளை இடப்பெயர்ச்சி செய்தல். அதாவது, கணிப்பொறி வரைகலையில் ஆய அச்சுகளின் தொகுதி வழியில் இப்பொருள் நகரும்.

transport - போக்குவரத்து: இலக்கக் கணிப்பொறியில் ஒரு சேமிப்புக் கருவியமைப்பிலிருந்து மற்றொரு கருவிய மைப்பிற்கு ஒன்றை முழுதுமாக மாற்றுதல்.

tree - மரப்போலி : ஒரு பூட்ட விழ்ப்பி. இதில் உட்பலன், வெளிப்பலன் வழிகளின் வரைகலை குறியீடு மரத்தை ஒத்தி ருக்கும்.

treeware - மரப்பொருள் : அச்சிட்ட இதழ்களும் செய்தித் தாள்களும். கணிப்பொறி பேச்சுமொழி.

truncate -ஒடுக்கு : சிறப்பில்லாத இலக்கங்களைக் குறைத்தல்.

trunk - நடுவகம் : வெளிப்புற அலகிற்கும் மைய முறையாக்கிக்கும் இடையே உள்ள இடைமுக வரி. TTML, Tagged Text Markup

Language -டிடிஎமெல் இணைப்பாடக் குறிமொழி : கணிப்பொறி மொழிகளில் ஒருவகை.

turtle-ஆமை : காட்சித் திரையிலுள்ள சிறிய முக்கோணக்குறி காட்டி. லோகோ மொழியுடன் இணைந்து ஆமை வரைகலையை நிறைவேற்றுவது.

turtle graphics -ஆமை வரைகலை : கணிப்பொறித் திரையில் உருவாக்கப்படும் படங்கள். இவை லோகோ கல்வி நிகழ்நிரலைப் பயன்படுத்துவது.

tutorial - தனிப்பயிற்சி : மென் பொருள் அல்லது வன் பொருளை ஓடவிடும் கட்டளைகள். நிகழ்நிரல் வடிவில் இருக்கும்.

type bar - அச்சுப்பட்டை : அச்சிடும் உறுப்பு. உருக்கள் அல்லது குறிகள் புடைப்பாக இதில் அமைந்திருக்கும் எ-டு துளையிடும் அட்டை அட்ட வணையாக்கியின் அச்சலகின் பகுதி.

type drum -அச்சுருலை:பீப்பாய் வடிவ உருளை, வரி அச்சியற்றியில் பயன்படுவது,பல அச்சிடும் நிலைகளைக் கொண்டது.

type face - எழுத்துமுகம் :குறிப்பிட்ட அச்சியற்றி அச்சிடும் உருக்களின் வடிவமைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/T&oldid=1047064" இலிருந்து மீள்விக்கப்பட்டது