கதை சொன்னவர் கதை 2/பதிப்புரை
Appearance
பதிப்புரை
குழந்தைகளுக்குக் கதை சொல்லி இன்ப மூட்டுவதிலே பேரின்பம் கண்ட பெரியார் பலர். அவ்வாறு உலகப் புகழ்பெற்ற கதைகளைக் கூறிய கதாசிரியர்கள் பன்னிருவரைப் பற்றிக் குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஒரு தொகுதிக்கு நால்வராக மொத்தம் மூன்று தொகுதிகள் வெளியிட்டோம். அவற்றிற்குக் குழந்தைகள் நல்ல வரவேற்பளித்தனர்; பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் ஆதரவளித்தனர்.
இது இரண்டாம் தொகுதி - இரண்டாவது பதிப்பு. ஒவ்வோர் ஆசிரியரும் கூறிய நல்ல ஒரு கதையை முதலிலே கூறி, அவரது வாழ்க்கையைச் சுவையாகக் குழந்தைக் கவிஞர் எடுத்துக் கூறியிருப்பது நயம் பயக்கும் என நம்புகிறோம்.
தமிழ் நிலையத்தார்
இந்நூலாசிரியரின்
எங்கள் வெளியீடுகள்
- கதை சொன்னவர் கதை-1
- கதை சொன்னவர் கதை-2
- கதை சொன்னவர் கதை-3
- நிமிஷக் கதைகள்
- பாலர் கதைகள்
- மல்லிகை
- பாலர் பாடல்
- சிட்டுக்குருவி