கனியமுது/சூழ்நிலை தேவையா?

விக்கிமூலம் இலிருந்து




வானுங் கடலுமங்கு மோனக் கலவையிடத்,
தானுமக் காட்சியைக் காணும்பே ராவலுடன்,
காலைமுதற் காய்ந்து, ககனம் ஒளி பாய்ச்சி,
மேலைத் திசைமுழுகும் வெங்கதிர் ஞாயிறும்--
ஆர்த்துப் பொங்கியெழுங் தார்ப்பரித்துக் கை நீட்டி,
வேர்த்துத் துளிசிதறி, வேகமாய்த் தாவி,
நிலமகளை முத்தமிட்டு, நில்லாமல் ஓடி,
விலகி இசைபாடும் சங்கீத வெள்ளலையும்--
மாதர் முகமாய் மலர்ந்து,நல் சீதளத்தைத்
தீதறச் சிங்தித் திகழ்ந்து,பின் அந்திவரத்;
தேம்பிப் பிரிவேங்கிச் சீர்மங்கை மேல்முகடாய்க்
கூம்பித் தவிக்கும் குளிர்வாவித் தாமரையும்--
கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணத் தொலையாத
வண்ணப் புதுக்கோலங் தீட்டி வழங்கிவரும்
நீலப் பெருந்திரையின் நீளத்தில் நேர்த்தியாய்க்
காலம் வரும்வரையில் காத்திருந்து, காரிருளில்

விண்வீதி நின்று கண்சிமிட்டுங் தாரகையும்
தண்ணீர்த் தடாகத்தில் தண்டூன்றும் அல்லியும்
சோகங் தவிர்த்துச் சுடராம் அமுதத்தில்
மோகம் மிகுந்திட, மூண்டெழும் ஆவலுற,
இன்ப வெறியூட்டுந் தன் பொற் கிரணத்தால்
மன்பதையை வாழ்விக்க மையல் வளர்ப்பதிலே
எங்குங் தனக்கீடாய் யாதுமில்லை என்றெண்ணிச்
செங்கோலை ஒச்சிவரும் சிங்காரத் தங்கநிலா--


மானும் மயிலினமும் மீனும் விளையாடத்,
தேனும் சுவைக்கரும்பும் தீங்கனியும் ஓங்கிட,
மல்லிகை முல்லை மருக்கொழுந்து சண்பகம்
நல்ல நிறப்பூக்கள் எல்லாம் மலர்ந்திருக்கும்
பூந்தோட்டம்; அங்கெல்லாம் நீந்தித் தவழ்ந்தோடி
மாந்தர் உடல்தீண்டி மாறாச் சுகமளிக்கும்
ஈடற்ற தென்றலெனும் இத்தனை சூழ்நிலையில்...
தேடக் கிடைக்காத தெய்வீகக் காதலர்கள்:

ஆனந்தம் கவிதைகள்

ஆணழகன் மன்மதன் ஆரணங்கின் பேரெழிலைக்
காண, அனுபவிக்கக் கண்கோடி வேண்டுமாம்!
தந்தங் கடைங்தெடுத்த சந்தன மேனியாள்:
சிந்தை கலக்கும் சேல்விழி: பால்மொழி;
கண்டனர் இருவரும்; உண்டனர் பார்வையினை!
விண்டனர் காதலை; விரைவாய் உரையாடி!
பெற்றோர் அறிந்தார், பிரித்தனரே காதலை...!
சற்றுப் பொழுதில் சரிந்ததவர் காதலும்!



இஃதே கவிஞர் எழுதிவரும் வாடிக்கை!
இஃதன்றி நேர்மாறாய் இன்னோ ருலகமும்
உண்டன்றோ? என்கண்ணால் கண்டது கூறுவேன்:-- பண்டொருநாள் என்றாலும் பான்மை மறையவில்லை;
பட்டப் பகல்வேளை; கொட்டும் பெருமழையில்,
வெட்ட வெளியிலொரு குட்டிச் சுவரருகில்,
கண்பார்வை யற்றிடப் பெண்பிறவி பெற்றதால்
புண்ணியங் தேடுவோர் பண்ணிய தர்மத்தில்

சாகாமல் வாழ்ந்த தமிழ்ப்பெண் ஒருத்தியை...
நோகாமல், மேனி நுடங்காமல் ஆபத்தில்
காலொன் றொடிந்த முடமாகி, ஞாலத்தில்
கோலூன்றித் தாவியே கூவி இரங்துண்போன்...
கிட்ட நெருங்கியே ஒட்டி உறவாடப்,
பட்ட மரங்துளிர்த்து விட்டது காதல்இலை!
தொட்டான் சிலபேசி; விட்டுப் பிரியவில்லை!
கெட்டதா வாழ்வு?கொடி கட்டிப் பறந்ததே!.
எம்மை எழுதென் றென்னையவர் கேட்கவில்லை;
உண்மை உணர்க உலகு!