கனியமுது/செங்குருதித்திருமணம்.

விக்கிமூலம் இலிருந்து


ஓய்வுபெற்ற அதிகாரி உலக நாதர்
    உணவருந்தி, வெண்சுருட்டுப் புகைத்த வாறு,
சாய்வுநாற் காலியிலே சரிந்தி ருப்பார்.
    சரிகையிட்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலை
தேய்வுபெறா உரல்போன்ற இடையைச் சுற்றத்
    திரளாகத் தொங்கவிட்ட சாவிக் கொத்து
போய்வரவே கிண்கிண்எனும் ஒலியெ முப்பப்
போராடும் பேருடலாள் வேத வல்லி!


மூத்தமகன் தகப்பனப்போல் மெலிந்த மேனி,
    முற்றிவிட்ட இதயநோயால் தாக்கப் பட்டோன்!
பார்த்துவந்த மருத்துவரோ எச்சரித்தார்:
    படியேறிச் செல்லுவதும் தீமை என்றே!
ஆத்திரத்தால், மருமகளே அடக்கி யாளும்
ஆறாத திமிர்க்கருத்தால், வேத வல்லி,
காத்திருந்தாற் போற்கிடங்த ஏழைப் பெண்ணும்
கமலாவை அடிமையாக்கிக் கொண்டு வந்தாள்!


எளிமையெனும் சுழற்காற்றால் அணைந்தி டாத
எழில்விளக்காய்ச் சுடர்விட்ட மனைவி கண்டு
முழுமையுற்றோம் என்றெண்ணி, மூத்த பிள்ளை
முதலிரவின் இதங்காண முனைந்த போது...
வலிமைமிக்க சாவென்னும் பகைவன் வந்து
வளைத்திட்டான்! கிளைத்தெழுந்து படர்ந்து தாவிச்
செழுமையுற்ற பூங்கொடியும் சீர்கு லைந்து
சிதைந்ததந்தோ : வேதவல்லி செய்த தீமை


பொற்றாலி யோடெவையும் போகு மன்றோ?
பொல்லாத கைம்மையினுங் கொடுமை ஏது?
பெற்றாரின் பாழ்மனமும் பேத லிக்கப்-
பிறந்தகத்தை மறந்திடுமோர் நிலைமை யுற்றால்
குற்றேவல் புரிகின்ற சிற்றா ளாகக்
கூலியின்றிக் கிடைத்தவளை விடவா செய்வர்!
வற்றாத விழியருவி பொழியும் நீரால்-

மாமியாரின் சொல் நெருப்பை அணைத்து வந்தா

18

அடுத்துள்ள இளைய பிள்ளை படித்த வன்தான் ;
        அம்மாவுக் கெதிர்வார்த்தை அறிய மாட்டான்!
கடுத்தமுகம் கனல் தெறிக்கக், கமலா வுக்குக்
        கட்டளையோ, அவனெதிரில் வரக்கூ டாதாம்!
விடுத்த பெரும் ஆணையினால், அடுக்களைக்குள்
        விதவையவள் சதமாக முடங்கிப் போனாள் !
எடுத்தழிக்க வொண்ணாத செல்வர் வீட்டில்
        ஏந்திழையை இளையவற்குத் தேர்ந்து கொண்டார்.

மாப்பிள்ளை பார்ப்பதற்கு வந்த நாளில்
        மங்கலமாய் மேள இசை முழங்கும் போது...
பூப்போன்ற கமலா, தன் துயர்ம றைத்துப்
        புன்னகையும் மின்னலிட முன்னே வந்தாள்.
“கூப்பிட்ட தார் உன்னைக் குடி கெடுத்த
        கோட்டானே? அபசகுனம்! எங்கள் வீட்டுச்
சாப்பாடு தந்திட்ட திமிரோ?” என்று

        தலைமுடியை வளைத்திழுத்துத் தரையில் மோத—

வந்திருந்தோர் பரபரப்பாய் ஒடிச் சென்று,
வசைபாடும் மாமியவள் இசைநிறுத்தி,
வெந்திருக்கும் மூத்தவளின் நெஞ்சில் இன்னும்
வேல்பாய்ச்சி விளையாடும் விந்தை கண்டு
வந்தவழி மீண்டனரே! உலக நாதர்--
வாய்ப்புகையை வெளிவிட்டுப் பேச லானார் :
“இந்தபெருந் தாய்ச்சனியன் இருக்கு மட்டும்,
இனியெந்தப் பெண்வருவாள் நம்வீட் டுக்கே


பொங்கிவரும் செங்குருதி, கண்ணீ ரோடு
போட்டியிட்டுப் பெருகிவரக் கண்ட பிள்ளை,
தங்குதடை மீறி, அவள் தலையைத் தாங்கித்,
தன்மடியில் வைத்து,முதல் உதவி செய்தான்
“சங்கடங்கள் தீர்வதற்கும், அம்மா வுக்குச்
சரியான ஒருபாடம் தருவ தற்கும்,
இங்கிவளை மணந்திடுவேன்!” என்றான். தந்தை,
எதிர்ப்பின்றிச் சுருட்டொன்றைப் பற்ற வைத்த