கம்பர் தனிப்பாடல்கள்
Appearance
அவ் அவ் அமையங்களில்
கூறிய
தனிப்பாடல்
திரட்டு
மொத்தம் பாடல்கள் 69
பக்கம் 45 முதல் 54
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
பாடல் 1-5
[தொகு]- கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
- குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
- ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
- சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)
- வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்
- தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
- ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
- பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)
- வடக்கு திசைபழனி வான்கீழ் தென்காசி
- குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்
- ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
- சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)
- மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்காம்
- ஆர்க்கும் உவரியணி கிழக்கு – பார்க்குளுயர்
- தெற்குப் பினாகினி திகழிருபதின் காதம்
- நற்றொண்டை நாடெனவே நாட்டு. (4)
- ஆழியான் பள்ளி யணையே யவன் கடைந்த
- ஆழிவரையின் மணித் தாம்பே – பூழியான்
- பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
- நாணே யகல நட. (5)
பாடல் 6-10
[தொகு]- மங்கை யொருபங்கர் மணிமார்பில் ஆரமே
- பொங்குங் கடல்கடைந்த பொற்கயிறே – திங்களையும்
- சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
- ஏறிய பண்பே யிறங்கு. (6)
- பாரைச் சுமந்த படவரவே பங்கயக்கண்
- வீரன் கிடந்துறங்கு மெல்லணையே – ஈரமதிச்
- செஞ்சடை யான்பூணுந் திருவா பரணமே
- நஞ்சுடை யாய்தூர நட.(7)
- சிரம் பார்த்தா னீசனயன் தேவிதனைப் பார்த்தான்
- கரம் பார்த்தான் செங்கமலக் கண்ணன் – உரஞ்சேர்
- மலைவெளுத்த திண்புயத்து வண்ணான் சீராமன்
- கலைவெளுத்த நேர்த்துதனைக் கண்டு. (8)
- ஆரார்தலை வணங்கார் ஆரார்தான் கையெடார்
- ஆரார்தான் சத்திரத்தில்ஆராதார் – சீராருந்
- தென்புலியூர் மேவுஞ்சிவன் அருள்சேர் அம்பட்டத்
- தம்பிபுகான் வாசலிலே தான். (9)
- கொங்கையான் மாறன் குலசேகரப் பெருமான்
- பொற்கையான் ஆனகதை போதாதோ –நற்கமல
- மற்றலே வாரி மணிவாசலை யசைக்கத்
- தென்றலே ஏன்வந்தாய் செப்பு. (10)
பாடல் 11-15
[தொகு]- பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்
- மார்பகலங் கண்டு மகிழ்வரே – போர்புரிய
- வல்லான களங்கன் வாணன் றிருநாமம்
- எல்லாம் எழுதலா மென்று.(11)
- எலைக்குரிய பண்ட முவந்திரக்கச் சென்றால்
- கொலைக்குரிய வேழங் கொடுத்தான் – தலைக்குரிய
- வாணர் கோனாறை மகதேவனுக் கிந்தப்
- பாணனோ டென்ன பகை. (12)
- வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோன்
- வாணன் புகழுரையா வாயுண்டோ – வாணன்
- கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ
- அடிதாங்கி நில்லா வரசு.13)
- உமையவளு நீயுமொருங் கொப்பே யொப்பே
- உமையவளுக் குண்டங் கோரூனம் – உமையவடன்
- பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின்
- ஆகந்தோய்ந் தாண்டா னரசு.(14)
- மோட்டெருமை வாவிபுக முட்டுவராற் கன்றென்று
- வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே –நாட்டில்
- அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
- உடையான் சடையப்ப னூர்.(15)
பாடல் 16-20
[தொகு]- வெற்றிபுனை தாதகிக்கும் வேம்புக்கும் பெண்ணைக்கும்
- சுற்றும் பெருநிழலாய்த் தோன்றுமே- கற்றோர்
- திறந்தாங்குந் தாங்குஞ் செகமுழுதுந் தாங்கும்
- அறந்தாங்குந் தொண்டை யரசு.16)
- கந்தமலர்ப் பிரமன் கன்னிமடவார்க் கெல்லாம்
- அந்தவிள நீரைமுலை யாக்கினான்- சுந்தரஞ்சேர்
- தோற்றமிகு வல்லிக்குத் தோப்பை முலையாக்கினான்
- ஏற்றமிதில் யார்தான் இயம்பு. (17)
- இருந்தவளைப் போனவளை யென்னை யவளைப்
- பொருந்தவளை பறித்துப் போனான்-பெருந்தவளை
- பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டின்
- மாத்தத்தன் வீதியினில் வந்து.(18)
- ஆழியானாழி யயனெழுத் தாணி யென்பார்
- கோழியான் குன்றெறிய வேலென்பான்-பூழியான்
- அங்கை மழுவென்பான் அருள்பெரிய மாமண்டூர்ச்
- சிங்கனுலைக் களத்திற் சென்று.(19)
- குடகர் குணகட லென்பர் குடகுக்
- கிடகர் வடகட லென்பர்-வடகடலோர்
- தென்கட லென்பர் திருந்துதா ரச்சுதநின்
- முன்கட நின்றார்க்கு முரசு.(20)
பாடல் 21-25
[தொகு]- தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்குஞ் செந்நெல்
- தனைவிளைத்தார் முற்றமது தானாங்-கனையு
- முரசுணங்கச் சங்குணங்கு மூரித் தேர்த்தானை
- அரசுணங்கு மச்சுதன் முற்றம். (21)
- குறையுளா ரெங்கிரார் கூர்வேலி ராமன்
- விறையாறு திங்களி ருந்தான்-முறைமையால்
- ஆலிக்குந் தார்மார்பா வச்சுதா வந்நாளில்
- வாலிக் கிளையான் கடை.(22)
- அரசன் அகளங்கன் அச்சுதன் முற்றத்
- தரசர் அவதரித்த வந்நாள்- முரசதிரக்
- கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை
- வெட்டி விடுமோசை மிகும். (23)
- தலையவிழ் நாண்மாலைத் தாயரே யாவி
- களையினு மென்கண் டிறந்து காட்டேன் –வளைகொடுபோம்
- வன்கண்ணன் மாவிசயன் மால்யானை தன்னொடும்வந்
- தென்கண் புகுந்தா னினி. (24)
- பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க் கரசளித்த
- வாண்டகை யென்றுன்னை யறியேனோ- மூண்டெழுந்த
- கார்மாற்றுஞ் செங்கைக் கடகரி வாணாவுனது
- பேர்மாற்றுவ தரிதோ பேசு. (25)
பாடல் 26-30
[தொகு]- வாட்டானைத் தென்னவர்கோன் மாகதற்குத் தோற்செய்தி
- கேட்டானத் தீங்குரலுங் கேட்டதற்பி –னாட்டம்
- பொருந்தாயிர விழியான் பொன்முடியைச் சாய்த்தங்
- கிருந்தானிங் கென்னாகு மென்று.(26)
- பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்
- வாணர் புகழ வருமேகம்ப-வாடன்
- கரும் போதகமே நின்கால் பணிவேன்மீண்டு
- வரும் போதகமே வரின். (27)
- படுபருந்துஞ் சூர்ப்பேயும் பன்மிருகஞ் செந்நாய்
- கொடிகழுகு மித்தனையுங் கூடி –வடிவுடைய
- கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
- போமாறு போமாறு போம். (28)
- என்சிவிகை யென்கவிகை யென்றுவச மென்கவசம்
- என்பரியீ தென்கரியீ தென்பரே- மன்கவன
- மாவேந்தன் வாணன் வரிசை பரிசுபெற்ற
- பாவேந்தரை வேந்தர் பார்த்து. (29)
- சேற்றுக் கமலவயற் றென்னாறை வாணனையான்
- சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் –வேற்றுக்
- களிக்குமாவைத் தந்தான் கற்றவருக்குச் செம்பொன்
- அளிக்குமா றெவ்வா றவன். (30)
பாடல் 31 - 35
[தொகு]- தேருளைப்புரவி வாரணத்தொகுதி திறைகொணர்ந்து வருமன்னநின் தேசமேது னதுநாமமேது புகல் செங்கையாழ் தடவுபாணகேள்
- வாருமொத்த குடிநீரு நாமுமக தேவனாறை நகர்காவலன் வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகுவரிசை பெற்றுவரு புலவன்யான்
- நீருமிப் பரிசுபெற்று மீளவரலாகு மேகுமவன் முன்றில்வாய் நித்திலச் சிகரமாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம்
- ஆருநிற்கு முயர் வேம்புநிற்கும் வளர்பனையு நிற்குமதன் அருகிலே அரசுநிற்கு மரசைச்சுமந்த சிலவத்தி நிற்கும் அடையாளமே. (31)
- அலங்கலணி மார்பன் ஆறையர்கோன் வாணன்
- விலங்கு கொடுவருக வென்றான்- இலங்கிழையீர்
- சேரற்கோ சோழற்கோ தென்பாண்டி நாடாளும்
- வீரற்கோ யார்க்கோ விலங்கு. (32)
- பரப்போத ஞாலமொரு தம்பியாளப் பனிமதியந்
- துரப்போ னொருதம்பி பின்வரத் தானுந் துணைவியுடன்
- வரப்போன மைந்தருக்குத் தாதைபொறா துயிர்மாய்ந்தனனெஞ்
- சுரப்போவெனக் கிங்கினியார் உவமை யரைப்பதற்கே.(33)
- கண்டாயோ பார்வேந்தா கானகத்துக் கள்ளியின்கீழ்
- வெண்டாழை பூத்து விளக்கெரியப்- பெண்டாலி
- பூட்டுதற்கு முன்னமொரு புத்திரனைப் பெற்றெடுத்தாள்
- காட்டிற் கழுகோட்டுங் கை.(34)
- கன்னிக்கலச முலையாடன் காமக்குரோத பஞ்சத்தில்
- என்னுக்கெழுதிக் கொடுத்தேனென் றியம்பக்கேளா யிகல்வேந்தே
- மின்னுக்கெழுதி யிடைக்கெழுதி வேண்டும்பொருட்கு மெழுதியருட்
- பொன்னுக்கெழுதிக் கொடுத்தேன்யான் பொய்யுமுரையேன் புகல்வேந்தே.(35)
பாடல்36-40
[தொகு]பாண்டியன் பாடியது
- போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
- தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை
- மாற்றினு மாற்றுவர் வன்கணாளர்கள்
- கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. (36)
- மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
- உன்னை யறிந்தோ தமிழை யோதினேன்- என்னை
- விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
- குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு. (37)
- அன்றையிலும் வையமகன்றதோ வல்லவென்று
- குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ-என்றும்
- அடைந்தாரைக் காக்கு மகளங்கா துங்கா
- நடந்தாயே நாலா றடி. (38)
- காதமிருபத்து நான்கொழியக் காசினியை
- ஓதக்கடல் கொண் டொளித்ததோ- மேதினியிற்
- கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா நீமுனிந்தால்
- இல்லையோ வெங்கட் கிடம். (39)
- நீரெல்லாஞ் சேற்றுநாற்ற நிலமெலாங் கல்லுமுள்ளும்
- ஊரெலாம் பட்டிதொட்டி யுண்பதோ கம்பஞ்சோறு
- பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும்பேயும்
- காருலாங் கொங்குநாட்டைக் கனவிலு நினைக்கொணாதே. (40)
பாடல் 41-45
[தொகு]- குமிண்டியும் பண்ணையுங் கூடமுளைக்கின்ற கொல்லைக் கம்பை
- நிமிண்டியு மூதியுந் தின்னவல்லோ ரிந்தநீணிலத்திற்
- றுமிண்டியாங் காய்தன்னை மொட்டையம்பா லெய்யுஞ் சூரர்கண்டீர்
- நமண்டியிற் பள்ளிக ளத்தனை பேர்களுநல்லவரே. (41)
- செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
- பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே- முட்டிபுகும்
- பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங்
- காப்பாரே வேளாளர் காண். (42)
- மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை
- ஆழி தரித்தே யருளுங்கை- சூழ்வினையை
- நீக்குங்கை யென்று நிலைக்குங்கை நீடூழி
- காக்குங்கை காராளர் கை. (43)
- மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து
- சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே
- விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
- நெற்கொண்டு பொமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே (44)
விருத்தம்
- தேரையார் செவ்விள நீருண்ணாப் பழிசுமப்பர்
- நாரியார் தாமறிவார் நாமவரை நத்தாமை
- கோரைவாய்ப் பொன்சொரியுங் கொல்லிமலை நன்னாடா
- ஊரை வாய்மூட வுலைமூடி தானிலையே.(45)
பாடல் 46-50
[தொகு]- மட்டுப்படாக் கொங்கை மானார்கலவி மயக்கத்திலே
- கட்டுப்பட்டா யென்ன காதல்பெற்றாய் மதன்கை யம்பினாற்
- பட்டுப்பட்டா யினுந் தேறுவையே யென்றுபார்த் திருந்தேன்
- வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே. (46)
- வில்லம்பு சொல்லம்பு மேதினியி லிரண்டுண்டு
- வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்- வில்லம்பு
- பட்டுதடா வென்மார்பிற் பாண்டியா நின்குலத்தைச்
- சுட்டுதடா வென்வாயிற் சொல்.(47)
- கரைக்கு வடக்கிருக்குங் காளிகா ளம்மைக்
- கரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய்- உரைத்தும்
- மறைக்க வறியாதவன் பேயின் கையைக்
- குறைக்குமாங் கூன்கத்தி கொண்டு.(48)
- காலப்புய நிகனிகர் காராளர் தம்மைக் கடலுடுத்த
- தாலக்குல மங்கை பெற்றதனாற் சதாகாலமுமால்
- கோலத்திரு முகத்தாலே முகந்தனன் கூடலிலே
- சூலக்கரப் படையான் றலைமீது சுமந்தன்னே.(49)
- கல்லங் காடுதனில் விளையாக் கடுகநிலத்திற் றான்முளையா
- அல்லனிருந்த கருங்கூந்த லணங்குக் கணங்கு போலாவாள்
- செல்லென்றேவி மனைகடொறுந் தேடித்தரிந்துந் காணாத
- நெல்லஞ்சொறே கம்பஞ்சோற்றினை நீசுமந்து திரிவாயே. (50)
பாடல் 51-55
[தொகு]கம்பர் கற்றுச்சொல்லி
- மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
- காவுறங்கின வெங்கண் மானிருகண் ணுறங்கில ளையகோ
- கோவுறங்கு கடைத்தலைக் குலதீபவள்ளை குதட்டிவாய்
- ஆவுறங் குபகார சஞ்சலமஞ்ச லென்ன வடுக்குமே.(51)
அம்பிகாபதியும் கம்பரும் பாடியது
- இட்டடி நோவ வெடுத்தடி கொப்புளிக்க
- வட்டில் சுமந்து மருங்கசையக்- கொட்டிக்
- கிழங்கோ கிழங்கென்று கூறுவா ணாவில்
- வழங்கோசை வையம் பெறும்.(52)
அம்பிகாபதி
- சற்றேபருத்த தனமே குலுங்கத் தரளவடந்
- துற்றேயசையக் குழையூசலாடத் துவர்கொள் செவ்வாய்
- நற்றேனொழுக நடனசிங்கார நடையழகின்
- பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.(53
- வெங்கண் சிவந்து வெடிவான் முறுக்கி வெகுண்டெழுந்தென்
- அங்கம் பிளக்க வருங்களிறே யன்றிரணியனைப்
- பங்கம்பட வுரங்கீண்டே யுதிரம் பருகுநர
- சிங்கமிருக்குது காண் கெடுவா யென்றன் சிந்தையிலே. (54)
- வீரமுண்டோ மதன்கை யம்பினால் வெந்து வீழுகைக்கு
- நேரமுண்டோ வஞ்சிநேர் பட்டகாலை யிநெஞ்சைவிடப்
- பேரமுண்டோ சொலவொண்ணாத காமப்பெரு நெருப்புக்
- கீரமுண்டோ வையனே யென்னபாவ மினிச்சொல்வதே. (55)
பாடல் 56-60
[தொகு]- உருகியுடல் கருகியுள் ளீரல்பற்றி
- எரிவ தவியா தென்செய்வேன்-வரியரவ
- நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
- நெஞ்சிலே யிட்ட நெருப்பு. (56)
- வாணன்புகழ்க் கெல்லை வாழ்த்துவோர் நாவெல்லை
- வாணன்புகழ்க் கெல்லை மண்ணெல்லை- வாணன்
- படைக்கெல்லை திக்கெல்லை பைந்தமிழ் தேர்வாணன்
- கொடைக்கெல்லை ஏற்பவர் தங்கோள்.(57)
- நில்லாதபல்லும் பறிபட்ட கூந்தலும் நீண்டகரிப்
- பொல்லாவழுக்குப் புடைவையுமாய் வெகுபூச்சியம் போய்ச்
- செல்லாப் பணத்துக்குத் தேட்டூணு மற்றுத்தியங்கி யொன்றும்
- இல்லாதபாவி தனக்கார்துணை பொன்னி நாட்டினமே. (58)
- வாசமலர் மடந்தை போலவார் மருதவனத்
- தீசனடியா ரெழுப தின்மர்- நேசத்
- திரவலர் மேனீட்டுவர் கையீண் டுலகையாளும்
- புரவலர் மேனீட்டுவர் பொற்றாள். (59)
இடைக்காடர் பாடிய ஊசிமுறி
- ஆற்றங்கரையி னருகிருக்கு மாமரத்திற்
- காக்கை யிருந்து கககவெனக்- காக்கைதனை
- எய்யக் கோலில்லாமல் 0 0 0 என்றானே
- வையக் கோனாரின் மகன். (60)
பாடல் 61-65
[தொகு]ஏகம்பவாணன் மனைவி
- சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
- ஆனை மிதித்த வருஞ்சேற்றின்- மானபரன்
- பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டானே கம்பன்
- மூவேந்தர் தங்கண் முடி. (61)
கம்பர்வீட்டு வெள்ளாட்டி
- நெற்படி விளைகழனி புடைசூழ் நென்மலி வாழ்தச்சன்
- கற்படி பனைதோளான் பெயரோ கங் கண கண கணவன்
- விற்படி வாணுதலாண் மனைவிமின் மினிமினி மினிமி
- சொற்படி வேலைசெயும் மவளோதுந் துமி துரி துரிதி. (62)
- வட்டமதி போலிருக்கும் வன்னிக்கொடி தாவுங்
- கொட்டுவார் கையினின்று கூத்தாடும்-சுட்டால்
- அரகரா வென்னுமே யம்பல சோமாசி
- ஒருநாள் விட்டேனீ துரை. (63)
- தென்னவா மீனவா சீவிலி மாறாமதுரை
- மன்னவா பாண்டிவர ராமா- துன்னுஞ்
- சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா
- கரும்புக்கு வேம்பிலே கண். (64)
- மாப்பைந் தார்க்கல்ல முத்துவண்ணத் தார்க்கல்ல வஞ்சி
- வேப்பந்தார்க் காசைகொண்டு விட்டாளே - பூப்பைந்தார்
- சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவிலிமாறா தமிழை
- ஆய்ந்திருக்கும் வீர மாறா. (65)
பாடல் 66-69
[தொகு]- வேம்பாகிலு மினிய சொல்லுக்கு நீபுனைந்த
- வேம்பாகிலு முதவ வேண்டாமோ- மீன்பாயும்
- வேலையிலே வேலைவைத்த மீனவர் நின்புயத்து
- மாலையிலே மாலைவைத்தாண் மான். (66)
- இலகு புகழாறையே கம்ப வாணன்
- அலகை வரும்வரு மென்றஞ்சி. உலகறிய
- வானவர்கோன் சென்னிமிசை வண்கை வளையெறிந்த
- மீனவர்கோன் கைவிடான் வேம்பு. (67)
பாண்டியன் மனைவி
- வேண்டிய போதின்பம் விளைக்கு மடந்தையரைத்
- தீண்டிய கையா லென்னைத் தீண்டாதே- பாண்டியா
- முல்லைக் கதிபா முகம்பார்த் தகலநின்று
- சொல்லக் கடவதெல்லாஞ் சொல்.(68)
- கலையான் முலைமூடிக் கண்வலைக்குள் ளாக்கும்
- விலைமாதர் தாம்வர விட்டாரோ- விலைமாதர்
- கொங்கையிலே தோய்ந்த குறைதீரத் துய்யசிவ
- கங்கையிலே நீராடி வா. (69)