கலிங்கத்துப் பரணி/பேய் முறைப்பாடு
Appearance
பேய்களாகப் பிறந்து கெட்டோம்
[தொகு]212
- ஆறுடைய திருமுடியா னருளுடைய பெருந்தேவி யபயன் காக்கும்
- பேறுடைய பூதமாப் பிறவாமற் பேய்களாப் பிறந்து கெட்டேம். 1
எங்களை யார் காப்பார்
[தொகு]213
- ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக் காப்பதல்லா லடையப் பாழாம்
- ஊர்காக்க மதில்வேண்டா வுயிர்காத்த உடம்பினைவிட் டோடிப் போதும். 2
பிழைக்க மாட்டோம்
[தொகு]214
- ஓய்கின்றே மோய்வுக்கு மினியாற்றேம் ஒருநாளைக் கொருநாள் நாங்கள்
- தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேஞ் செற்றாலு முய்ய மாட்டேம். 3
ஆசை போதும்
[தொகு]215
- வேகைக்கு விறகானே மெலியா நின்றே மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகுங் காணேஞ்
- சாகைக்கித் தனையாசை போதும் பாழிற் சாக்காடு மரிதாகத் தந்து வைத்தாய். 4
பசிக்கு ஒன்றும் இல்லேம்
[தொகு]216
- சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் கீழ்நாங்கண் மேனாட் செய்த
- பாவத்தா லெம்வயிற்றிற் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம். 5
மூளி வாய் ஆனோம்
[தொகு]217
- பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற் பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
- உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோடப் பாராய். 6
நெற்றாகி யுள்ளோம்
[தொகு]218
- அகளங்க னமக்கிரங்கா னரசரிடுந் திறைக்கருள்வா னவன்றன் யானை
- நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றா யற்றேம். 7
நற்குறியால் பொறுத்துள்ளோம்
[தொகு]219
- மூக்கருகே வழுநாறி முடைநாறி உதடுகளுந் துடிப்ப வாயை
- ஈக்கதுவுங் குறியாலுய்ந் திருக்கின்றேம் அன்றாகி லின்றே சாதும். 8
முதுபேய் வருகை
[தொகு]220
- என்றுபல கூளிகளி ரைத்துரைசெய் போதத்
- தன்றிமய வெற்பினிடை நின்றுவரு மப்பேய். 9
முதுபேய் வணங்கிக் கூறல்
[தொகு]221
- கைதொழுதி றைஞ்சியடி யேன்வடக லிங்கத்
- தெய்தியவி டத்துளநி மித்தமிவை கேண்மோ. 10
தீய சகுனங்கள்
[தொகு]222
- மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ
- மடப்பிடி மருப்பெழ மதம்பொழியு மாலோ
- கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ
- காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. 11
223
- வார்முரசி ருந்துவறி தேயதிரு மாலோ
- வந்திரவி லிந்திரவில் வானிலிடு மாலோ
- ஊர்மனையி லூமனெழ ஓரியழு மாலோ
- ஓமஎரி ஈமஎரி போல்கமழு மாலோ. 12
224
- பூவிரியு மாலைகள் புலால்கமழு மாலோ
- பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ
- ஓவிய மெலாமுடல் வியர்ப்பவரு மாலோ
- ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ. 13
விளைவு என்ன ஆகும்
[தொகு]225
- எனாவுரைமு டித்ததனை யென்கொல்விளை வென்றே
- வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே. 14
இரு குறிகள் நல்லன
[தொகு]226
- உங்கள் குறியும் வடகலிங்கத் துள்ள குறியு முமக்கழகே
- நங்கள் கணிதப் பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம். 15
பரணிப் போர் உண்டு
[தொகு]227
- நிருபரணி வென்றவக ளங்கன்மத யானைநிக ளங்களொடு நிற்பன வதற்
- கொருபரணி உண்டென வுரைத்தன வுரைப்படி யுமக்கிது கிடைக்கு மெனவே. 16
களிப்பால் நடித்தன
[தொகு]228
- தடித்தன மெனத்தலை தடித்தன மெனப்பல தனிப்பனை குனிப்ப வெனவே
- நடித்தன நடிப்பவலி யற்றன கொடிற்றையு நனைத்தன உதட்டி னுடனே. 17
பசியை மறந்தன
[தொகு]229
- விலக்குக விலக்குக விளைத்தன வெனக்களி விளைத்தன விளைத்தன விலா
- அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே. 18
வயிறு நிரம்பப் போதுமா
[தொகு]230
- ஆடியிரைத் தெழுகணங்க ளணங்கேயிக் கலிங்கக்கூழ்
- கூடியிரைத் துண்டொழியெங் கூடாரப் போதுமோ. 19
ஒட்டிக்கு இரட்டி
[தொகு]231
- போதும்போ தாதெனவே புடைப்படல மிடவேண்டா
- ஓதஞ்சூ ழிலங்கைப்போர்க் கொட்டிரட்டி கலிங்கப் போர். 20