கலிங்கத்துப் பரணி
Appearance
மீதரவு
[தொகு]- ஆசிரியர்: செயங்கொண்டார்]
- காலம்: 12 ம் நூற்றாண்டு
- மூலப்பதிப்பு: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
- விக்கி கட்டுரை: கலிங்கத்துப் பரணி
அறிமுகம்
[தொகு]- "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
- மாணவனுக்கு வகுப்பது பரணி"
என்பது பரணியின் இலக்கணம் பற்றிய கூற்று. பரணி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். செயங்கொண்டார் பாடிய "கலிங்கத்துப் பரணி", பரணிகளுள் சிறந்து விளங்குகிறது.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள்.