கலித்தொகை/4.முல்லைக்கலி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நான்காவது : முல்லைக் கலி[தொகு]

சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலி முல்லைத்திணைப் பற்றிய கலிப்பாக்களால் ஆன நூல். இதில் 17 பாடல்கள் உள்ளன. கலித்தொகை நூலில் இவை 101 முதல் 117 வரிசை-எணகளில் இடம் பெற்றுள்ளன. வாய்பாட்டுப்பாடல் ஒன்று இதனை இயற்றியவர் சோழன் நல்லுருத்திரன் என்று குறிப்பிடுகிறது. இந்த வாய்பாட்டுப் பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்த சு. வையாபுரிப்பிள்ளை சோழன் நல்லுருத்திரன் வேறு புலவர் எனவும், முல்லைக்கலிப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரனார் வேறு புலவர் எனவும் காட்டிப் பதிப்பித்துள்ளார். 17 பாடலகளில் முதல் 7 பாடல்கள் ஏறு தழுவல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பிற 10-ல் ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, பொருந்தாக் காமமாகிய பெருந்திணை பற்றிய உறவுப்பாடல்கள் வருகின்றன.

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்[தொகு]