கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/16. புரட்சி மேதைகள் மூவருள் கலீலியோவும் ஒருவர்

விக்கிமூலம் இலிருந்து

16. புரட்சி மேதைகள் மூவருள் கலீலியோவும் ஒருவர்

விஞ்ஞான அறிவானது அரிஸ்டாட்டில் போன்ற கடந்த கால அறிஞர்கள் வகுத்த விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. ஆனால் தன்விருப்பப்படி சிந்தித்துப் பார்க்கும் மனப்பான்மை எவருக்கும் இருக்கவில்லை.

புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த பாரம்பரிய பழமை விலங்குகளைத் தகர்த்தேறிய மாமேதைகளின் கூட்டு முயற்சி தேவைப்பட்டது.

உலசின் தனித்தனி மூன்று நாடுகளைச் சேர்ந்த மூன்று மகா மேதைகள் மூலமாக விஞ்ஞானப் புரட்சி தோன்றியது போலந்து நாட்டைச்சேர்ந்த கோப்பர் நிக்கஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலீலியோ, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நியூட்டன் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள்.

இந்த மூன்று விஞ்ஞான மேதைகளும் அறிவாற்றலில் மனத்திறனில் உண்மையான சர்வதேசவாதிகளாகவே திகழ்ந்தார்கள்!