கவிபாடிய காவலர்/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
8. சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளிவளவன்
“வளவனாயினும் அளவு அறிந்து உண்” என்பது தமிழ் நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. இதன் பொருள் பெருஞ் செல்வத்தைப் பெற்ற சோழனானாலும் வீணிலே ஒன்றையும் பாழாக்காமல், உண்ணுதல் வேண்டும் என்பதாம். இதனால் சோழர்கள் பொருள் வளம் படைத்தவர்கள் என்பதும் தெரிகிறது அல்லவா? அத்தகைய சோழர் குடிப் பொதுச் சொல்லாகிய வளவன் என்பதைத் தம் சிறப்புப் பெயருடன் இணைத்துப் பேசப்படும் பெருமை சான்றவர் கிள்ளிவளவன் என்பவர். இவர் அரசராக இருந்ததோடு அல்லாமல், அருங் கவிகளைப் புனையும் அறிஞராகவும் இருந்திருக்கிறார்.
இம் மன்னர் பிரான் உறையூரைத் தமது தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவர். இவர் கொடையும் வீரமும் உடையவர். இவர் கருவூரை முற்றுகை இட்டுச் சேரனை வென்றவர். இவரது வரலாற்றுக் குறிப்புக்கள் இவரைப் புகழ்ந்து ஆலத்தூர் கிழார், மாறோக் கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர் கிழார், நல் இறையனார், எருக்காட்டுத்தாயம் கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார் ஆகிய புலவர் பெரு மக்கள் பாடிய பாடல்களில் இருந்தும் அறியலாம். இங்ஙனம் அறியப்பட்ட குறிப்புக்கள் யாவை என இனிக் காண்போமாக.
ஆலத்தூர்க்கிழார் இக் கிள்ளிவளவனைப் பற்றி அறிந்து கூறியவை பின்வருவன : அவையே, “இம் மன்னர் பாணர்க்கு நீங்காத செல்வம் ஈந்தவர். பெருமை பொருந்திய வன்மையான தாள் உடையவர். (அரசர்கட்குக் காவல் மரம் மிக்க உரிமையுடையது ; பெருமை தருவது.) அதனை வெட்டி வீழ்த்த முன்வருபவர். அது வெட்டப்படும்போது, அதனைக் கண்டு அம்மரத்திற்கு உரிய மன்னன் வாளா இராமல் அதனை வெட்டும் பகைவனோடு வீறிட்டு எழுந்து போரிடத் தொடங்குகையில் தாமும் போரில் எழுச்சி கொண்டு அதில் வெற்றிகொள்ளும் பொருட்டு வேலைத் தாங்கி அப்பகைவர் உள்ள இடத்திற்குப் போதல் உரியவர், தம் வாயிலில் எவரேனும் இரவலர் வருவராயின், அவர்கள் நீட்டித்து இவரது வாயிலில் நின்று காலம் பார்த்துக் கேட்பன கேட்கவேண்டும் என்பது இன்றி, உடனே அவர்கட்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டி அனுப்புவார். பரிசிலர்க்குத் தேரும் வழங்கும் இயல்பினர்” என்பன.
மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளிவளவனைப்பற்றிக் கூறுகையில், இவ்வரசருக்குப் போரின்கண் உள்ள விருப்பினால் பகைவரது அரணைத் தகர்க்க வலிய ஆற்றலுடையவர் என்று கூறுகிறார். இவரால் அழிக்கப்படும் அரண்கள் முதலைகள் உலாவுவதும் குழிந்த இடத்தையுடைய அகழியையும் செம்பு போன்று திண்மை மிக்க மதிலையும் உடையவை. இவ்வரண்களை யுடையனவாயினும் அவை நல்லன என்று கூடப் பாராமல் அழிக்கும் ஆற்றல் உடையவர். இம் மன்னரது ஈகைப் பண்பு இயற்கையில் அமைந்த பண்பு. அதற்குக் காரணம் இவரது முன்னோர் புறவுக்காகத் தம் தசையினையும் ஈந்தவர் என்பதை இப்புலவர் இம்மன்னரைக் குறிப்பிடுகையில் பெரும்பாலும் குறிப்பிட்டே செல்கின்றனர். அங்ஙனம் கொடுக்கும் மரபில் இவர் தோன்றியுள்ளமையால் இவர் கொடைக்குணம் இயற்கையாதலின், அஃது இவர்க்குப் புகழ் ஆகாது என்றும், இவரது முன்னோர் ஆகாயத்தில் இருந்த தூங்கெயில் என்னும் கோட்டையினை அழித்த கொற்ற முடையவர் ஆதலின், இவர் பகைவர்களை வெல்லுதலும் இவர்பால் அமைந்த இயற்கை வன்மையினைக் காட்டுமே அன்றிப் புகழாகாது என்றும், உறந்தையம் பதியில் அறமும், நீதியும் எப்போதும் நிலை பெற்று இருத்தலின், இவரது அரசமுறைமை புகழ் உடையது என்று கூறுதற்கும் இல்லை என்றும், இம்மன்னர் சேரனது கருவூரை முற்றுகை இட்டபோது வஞ்சப் புகழ்ச்சியாக இம்மன்னரது ஈகைவன்மை, செங்கோன்மை முதலியவற்றை வலக்காரம் தோன்றப் பாடியுள்ளார்.
ஆவூர் மூலங்கிழார் இவரைப்பற்றி யாது கூறியுள்ளார் என்பதையும் காண்போமாக :
கிள்ளிவளவன் நல்ல படை பலம் உடையவர். இவர் கோபங்கொண்டு பார்க்கும் இடங்கள் தீ பரவும் இடங்களாக ஆகிவிடும். அதாவது வெற்றி கொள்ளும் பொருட்டுச் சுட்டு எரிக்கப்பட்டுப் போகும் என்பதாம். இவரே நயந்து நோக்கும் இடங்கள் யாவும் பொன்னும் பொருளும் பொலியும் இடங்களாகும். அதாவது இவரது அருட்பார்வை பெற்றவர் நல்ல பரிசிலைப்பெறுவர் என்பதாம். மேலும் இவர் தமது ஆற்றல் காரணமாகச் சூரியனிடத்தில் தண்மையைப் பெற விரும்பினாலும், சந்திரனிடத்தில் வெம்மையைப் பெற விரும்பினாலும் வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் உடையவர். பரிசில் மாக்கள் தேவ நாட்டை அடைந்து அங்குவாழவும் எண்ணம் கொள்ளா ராம். இதற்குக் காரணம் அங்குச் செல்வம் உடையவர் ஈதலும், அஃது இல்லாதார் ஏற்றலும் இன்றி ஒரே நிலை இருத்தலே என்க. இதனைப் புலவர், “உடையோர் ஈதலும் இல்லார் இரத்தலும் கடவது அன்மையின் கையறவுடைத்து” என்பர். இம் மன்னரது நாட்டில் உடையவர் ஏற்பவருக்கு தலைச் செய்யும் பண்பு நிலைத்து இருப்பதால், இவரது நாட்டின்கண் வாழவே இரவலர் உளங் கொள்வர். இதனால் மன்னரது கொடைப் பண்பும், மக்களது ஈகைப் பண்பும் அறியவருகின்றன அல்லவா? “மன்னன் எவ்வழி அவ்வழி குடிகள்” என்பது நம் நாட்டுப் பழமொழிதானே? இவரது வீரத்தின் மேம்பாட்டை ஆவூர் மூலங்கிழார் வெகு சமத்காரமாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது “பகைவரது மகுடங்களாகச் செய்யப்பட்ட பொன்னை இவர் தமது பாதங்கட்கு வீரக்கழ லாகச் செய்து புனைந்துகொள்வார். இவரை யார் இழித்து உரைக்கின்றனரோ, அவர்கள் கழுத்து இறைஞ்சுமாறு செய்ய வல்லவர். புகழ்ந்துரைப்போர் பொலிவுற விளங்கச் செய்வார்.”
கோவூர் கிழார் இக் கோமகனாரைப் பற்றிக் கூறியிருப்பனவற்றை இனிக் காண்போமாக :
கிள்ளி வளவன் போரில் கொடுமை மிக்கவரே. இயமனாகிலும் உயிர்களைக் கொள்ள விரும்பினால், அவ்வுயிரின் கால அளவு உலந்த போது கொண்டு செல்வன். ஆனால், கிள்ளி வளவனோ எனில், காலமே பாராது பகைவரை வேண்டியபோது கொல்லும் தொழிலர். “வேண்டிடத்து அடூஉம் வெல் போர் வேந்தே” என்று இக்காரணம் பற்றியே கூறப்பட்டது. மேலே கூறிய கொடுமையை மேலும் விளக்க வேண்டினால், கிள்ளி வளவனது நிகழ்ச்சி ஒன்றால் கோவூர் கிழார் குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கிள்ளிவளவனுக்கு மலையமான் திருமுடிக்காரி பகைவன் தான். அதன் காரணமாக அவனது மக்களையும் கொல்லக் கருதி அக் குழந்தைகளை யானைக் காலில் வைத்து மிதித்துக் கொல் லுமாறு செய்திருந்தார். அந்தோ! கள்ளம் கபடு அற்ற குழந்தைகள் கொல்லப்படுதலைப் புலவர் கோவூர் கிழார் அறிந்து சகித்திலர். ஆகவே, உடனே கிள்ளிவளவனை நோக்கி, “புறவுக்காகத் தன்தசையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தியின் மரபில் தோன்றினவனே” என்று விளித்து, இம்மக்கள் புலவரது வறுமை கண்டு சகியாது அவர்கள் வறுமைதீர உதவும் வள்ளல் மரபில் தோன்றியவர்கள். இக் குழந்தைகள் தாம் யானை முன்பு தம்மைக் கொல்லுதற்கு இடப்பட்டுள்ளோம் என்பதை அறியாது, அழுகையையும் மறந்து யானையைக் கண்டு களிக்கின்றன. இந் நிலை யில் நீ விரும்பியதைச் செய்க” என்றதும் கிள்ளிவளவன் குழந்தைகளைக் கொல்லாது விடுத்தனர். இதனால் இவர் புலவர் அறவுரைக் குப்பெரிதும் செவி சாய்ப்பவர் என்பது தெரிகிறது. அல்லவா? இவரது வன்மையையும் கோவூர் கிழார் அழகுபடச் சித்திரித்துள்ளார். இவரது உறந்தையம்பதி “அடுதீ அல்லது சுடுதீ அறியா ”தாம். அதாவது உணவு சமைக்க எரிக்கப்படும் தீயே அன்றிப் பகைவரால் கொளுத்தப்படும் நெருப்பை அறியாதாம். இவரது நாடு இரு மருந்தினை விளைக்கும் நாடு என்கிறார் புலவர். இரு மருந்தாவன, சோறும் நீரும். ஆ என்னே ! இம் மன்னர் புலவர்க்கு அளிக்கும் வண்மையின் மாண்பு! புலவர்கள் வெய்து உண்டதனால் அடையும் வியர்வையே அன்றி வேலை செய்வதனால் அடையும் வியர்வை கொள்ளாது இருக்க, இவர் பொருள்களைக் கொடுத்து உதவுவாராம். இதனை
“வெய்து உண்ட வியர்வு அல்லது
என்ற அடிகளில் காண்க.
இம் மன்னரது ஆதரவில் வாழும் புலவர்கட்கு எதைப்பற்றியும் கவலை இராது, இதற்குக் காரணம் புலவரது கருத்து அறிந்து வேண்டியது உணர்ந்து ஈய வல்லர் என்பதே. இப்புலவர் இதனை எத்துணைக் குதூகலத்துடன் பாடிக் காட்டுகிறார் பாருங்கள் !
“குணதிசை நின்று குடமுதல் செலினும்
குடதிசை நின்று குணமுதல் செலினும்
வடதிசை நின்று தென்வயின் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளி, யாம்
என்பன புலவர் வாக்கில் எழுந்த மொழிகள்.
நல்லிறையனார் மிகுந்த வறுமையால்
வாடிய புலவர். இவர் உண்ணாது பல நாள் வாழ்வு நடத்தியவர் என்பது, இவர் கிள்ளிவள வரைக் குறிப்பிடும்போது தம் போன்ற வறுமையுடைய மக்கள் உண்ணுதற்கு உணவு பெருமையால் கையைக் கழுவுதற்கும் காலம் வாய்க்காமல், அக்கை ஈரமே அறியாத நிலை யில் இருந்தது என்பதை அழகுபட ஈரங்கை மறந்த என் இரும்பேர் ஒக்கல் என்ற அடியினில் சித்திரித்துள்ளார். இதனால், கிள்ளி வளவர் வறுமையாளர் துன்பம் தீரப் பொருள் ஈபவர் என்பது தெரியவருகிறது.
கிள்ளிவளவரது சார்பில் இருந்த புலவர் கள் சிறிதும் வாட்டம் இன்றி வாழ்ந்தனர். என்பது எருக்காட்டுர்த் தாயங்கண்ணனுர் பாடலாலும் தெரிகிறது. அவர் குதுகலத்துடன், ' நாங்கள் கடலானது ஊழிக் காலத்தில் பொங்குவது போன்று பொங்கினும், சூரியன் கிழக்கே தோன்ருது தெற்கே தோன்றினாலும் அஞ்சமாட்டோம். நாங்கள் கிள்ளி வளவன் தாள் நிழலில் இருப்பவர் ' என்பனவற்றை
"எரிதிரைப் பொருங்கடல் இறுதிக்கண் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே "
என்று குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடும் அளவுக்கு இம் மன்னரும் சூட்டிறைச்சியும், தேறலும், மெல்லிய ஆடையும், பொன் ஆணும் பொருளு நல்கியுள்ளார். இப் புலவர் பெற்ற ஆடை, "பாம்பு உரித்தன்னவாள் பூங்கலிங்கம்" அதாவது அத்துணை மென்மையான ஆடை என்பது பொருள்.
வெள்ளைக்குடி நாகனார் புலவராயினும் குடிப்பிறப்பில் வேளாண் இனத்தவர். இவரால் விளைவுக் குறைவு காரணமாக நிலத்துக்கும் கொடுக்க வேண்டிய வரியினைச் செலுத்த இயலவில்லை. ஆகவே, தம் குறையினைக் கிள்ளிவளவனிடத்தில் கூறிக் கொண்டு தாம் வரியினைச் செலுத்த இயலாமையை அறிவிக் கத்தொடங்கினர். அதுபோது, "மன்னா! அரசு எனப்படுவது நினதே. நாடு எனப்படுவதும் நினதேயாகும். எம் மன்னர், குடிமக்களின் குறைகளைக் கேட்கச் செவிசாய்க்கின்றனரோ, அவர்கள் தம் நாட்டில் வேண்டியபோது மழையைப் பெறுவர். நீ பெற்றுள்ள வெண் கொற்றக்குடை, வெயில் மறைப்பதற்கு மட்டும் அமைந்தது அன்று. குடிகளையும் தன்கீழ் அழைத்துத் தண்ணிழல் செய்வதற்குமாகும். படை வீரரது வெற்றிக்குக் காரணம் உழவர் உழுது நெல் விளைவிப்பதனலே என்பதையும் உணர்க. மழை பெய்யாது போயினும், விளைவு குறைந்துபோயினும், மக்கள் அரச னைத்தான் குறை கூறுவர். ஆகவே, நீ உழவர் குடியினை ஒம்புவாயாக, அப்படி ஒம்பினால் உன் பகைவர் உன்னடி வணங்குவர் ' என்று
அறிவுரை பகர்ந்தனர். உழவர் சிறப்பினைக்
கூறக் கேட்ட மன்னர் புலவர் இறுக்க வேண்டிய வரியினைத் தள்ளிக் கொடுத்தனர். இவ் வாறெல்லாம் புலவர்கள் கூறும் மொழிகளைக் கேட்டு நடப்பவர் கிள்ளிவளவர். இத்தகைய மன்னர் ஈரமும் வீரமும் கொண்டவராக இருந்தும் தாமும் கவிபாடும் வன்மையும் பெற்றிருந்தார்.
கிள்ளிவளவரது பாடல் புறநானூற்றில் காணப்படுவதாகும். அது தம் நாட்டில் ஈகையில் சிறந்து விளங்கிய சிறு குடி கிழான் பண்ணன் என்பானைப் பற்றிய பாடல். பண்ணன் ஒரு குடியானவன். அவனது இல்லத்தில் எப் போதும் இளஞ்சிறார் கூடி இருக்கப் பெற்றுச் சோற்றுத் திரளைக் கையகத்துக் கொண்டு சென்று கொண்டிருப்பதைக் காணலாம். இளஞ் சிறுவர் சோற்றுத் திரளைப் பெற்றுச் செல்லும் தோற்றம் எறும்புகள் முட்டைகளைக் கொண்டு வரிசை வரிசையாகச் செல்வது போல் காணப்படுமாம். வெண் சோற்றுக்கு முட்டையும் இளஞ்சிறார் ஒழுக்கிற்கு எறும்பின் வரிசையும் நல்ல உவமைகள். இக் காட்சியினைக் கிள்ளிவளவர், "முட்டை கொண்டு வன்புலம் சேரும் சிறு நுண் எறும்பின் ஒழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் விறு வீறு இயங்கும் இருங்கிளேச்சிறாஅர் ” என்று குறிப்பிட்டுள்ளார். இங்ஙனம் இப்பண்ணன் இளஞ்சிருர் பசியினால் வாடாதிருக்கும் வண்ணம் அன்னம் அளித்து வந்த காரணத்தால் அவனை இவ்வரசப் புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று பட்டம் ஈந்து அகம் மகிழ்கின்றார். அதாவது, பண்ணன் பசி என்னும் நோயைத் தீர்க்கவல்ல வைத்தியம்மை பண்ணனது இல்லம் இளஞ்சிறார்களால் நிரம்பப் பெறுவதால் இரைச்சல் மிக்கு இருந்தது. என்பதை ஓர் உவமை வாயிலாகக் கூறும்போது, நன்கு பழுத்த பழங்களைக் கொண்ட ஆலமரத்தில் பறவைகள் கூடி ஒசை செய்வது போல் இருந்தது என்று குறிப்பிடுகிறார். இன்னே ரன்ன கொடைப் பண்புடைய பன்னால் பண்ணன் வாழ வேண்டும் என்பது கிள்ளிவளவரது உள்ளக்கிடக்கை. அதனால், தமது வாழ் நாட்களும் பண்ணனுக்கும் சேர்ந்து பன்ள்ை பண்ணன் வாழ வேண்டும் என்று கிள்ளிவளவன் கருதினர். 'யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய ' என்பது கிள்ளிவளவனர் உளமார வாழ்த்திக் களிக்கும் அடி. என்னே இவர் கொடையாளர்பால் கொண்டுள்ள அன்பு ! இத்தகைய சீரிய பண்புடைய கிள்ளிவளவர் தம் வாழ்நாள் உலந்ததல்லை மண்ணுலகிலிருந்து விண்ணுலகு புக்கார். அதுபோது புலவர்கள் வருந்திக் கூறிய பாடல்கள் நம் உள்ளத்தை உருக்க வல்லனவாகும்.
இயமன் சாதாரணமாக உயிர்களைக் கொண்டு செல்லும் முறையில் கிள்ளிவள வனைக் கொண்டு சென்றிருக்க இயலாது.
அதற்குக் காரணம் கிள்ளிவளவன்பால் அமைந்த வீரமாகும். அவ்வீரனை அணுக அஞ்சிய கூற்றுவன், தான் ஒர் இரவலன் போல் இருந்து கிள்ளிவளவனை அணுகி உயிரை இரந்து இருக்கவேண்டும். கிள்ளிவளவன் இல்லையென்னது ஈயும் கடப்பாடு உடையவர். ஆதலின், தம் உயிரை ஈந்திருக்க வேண்டும். இதுவே, கிள்ளிவளவர் உயிர் உடலை விட்டுப் பிரிந்தமைக்குக் காரணம்.” என்று கற் lபனை மலியக் கனிந்து பாடியுள்ளார் மாறோக் கத்து நப்பசலையார். ஆடுதுறை மாசாத்தனார், கிள்ளிவளவனைக் கொண்டு சென்ற இயமனை இழித்துப் பேசுகிறார், ' கூற்றுவ ! உனக்கு அறிவில்லை ; உன் நெஞ்சில் அன்பும் இல்லை. இதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்; எவரேனும் உணவு இல்லை என்ற காரணத்தால் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிடுவார்களா ? அந் நெல் இருந்தால்தானே மேலே விளைவித்து உண்டு வாழ இயலும் ? அது போலக் கிள்ளிவளவன் உயிருடன் இருந்தால் தானே, அவன் பகைவரை வென்று வென்று உனது பசியினைப் போக்குவன். இப்போது உன் பசியினைப் போக்குபவனைக் கொன்று விட்டனையே. இனி உன் பசியினைத் தணிப்பவர் யார்?என்று வினவுகிறார். இப்புலவர் இயமனை நோக்கிக் கூறிய சுடு சொற்கள் நனி பேதையே நயனில் கூற்றம் ! விரகின்மையின் வித்தட்டு உண்டனே" என்பன. இவ்வாறு புலவர்களால் இரக்கத்துடன் பாடப்பட்ட சோழர் கிள்ளிவளவர் குள முற்றம் என்னும் ஊரின்கண் விண்ணுடு புக்கனர். இதனால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப்பட்டார். துஞ்சிய' என் ஆணும் மொழி இறந்த என்னும் பொருளில் ஈண்டு ஆளப்பட்டுள்ளது.