கவியகம், வெள்ளியங்காட்டான்/ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து
ஏமாற்றம்

அந்த நல்ல நாளுக்காகவே - கவிஞன்
ஆண்டிரண்டும் காத்தி ருந்தனன்
மந்த மாரு தத்தின் வரவெதிர் - பார்த்து
மனது மாழ்கும் மாங்கு யிலெனவே!

காத்த நாளும் வந்து, ஒர்ந்தது - கவிஞன்
கவலை சற்றுக் கழிய நேர்ந்தது!
பூத்த கொம்பு போன்று புத்தகம் - அழகு
பொலிய நன்கு புதுக்கி யாச்சுது!

மங்கு மந்த மாலை வேளையில் - இனிய
மலர்ம ணங்க மழ்ந்த காற்றினில்
தங்கள் மேனி தளர்ச்சி நீங்கவே - செய்த
தவமு மின்றுதந்த தென்னவே!

நீல வானில் மின்ன லாமென - அருகில்
நேச முள்ள மனைவி நிற்கவே,
மாலை, மஞ்சள், குங்கு மத்தோடும் - கவிஞன்
மனைமுன் காத்து மகிழ்ந்தி ருந்தனன்.

நாளும் போது மாக ஊரினர் - ஒளி
நல்வி ளக்கு நயந்து நல்கவே
ஆறாம் அருமைத் தெய்வம் வந்தது - அன்பொ
டாசி கூறி யவலம் நீக்கவே!

அடியெடுத்து வைக்கு மிடமெலாம் - மலர்கள்
அள்ளி யள்ளிச் சொரியத் தமனியக்
கொடிய சைந்த தென்னத் தெய்வமும் - கவிஞர்
குடிலைத் தேடிக் கொண்டு வந்தது!

இந்த வுபூரில் கவிஞ னில்லமும் - இருக்கும்
இடமெ தென்று தெய்வம் வினவவும்
தந்தி ரத்தில் காசு சேர்ப்பவன் - தோன்றித்
தனது வீட்டுத் தடத்தைக் காட்டினான்!

சிலையைப் போல்பு தைந்து நின்றனன் - கவிஞன்
'சைய்வ தென்ன வென்ற திகைப் பொடும்.
'கவிஞன் வாழ்க வென்னுங் கூக்குரல் அங்கு
காது செவிடு படவொ லித்ததே!