கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/ஒட்டத்தைக் குறித்த முறைகள்
10. ஒட்டத்தைக் குறித்த முறைகள்
எவ்வளவு வேகமாகப் பந்தை எறிந்தாலும், எத்தனை தான் பந்தை தூரப் போகும்படி அடித்து ஆடினாலும், எத்தனை ஒட்டங்கள் எடுக்கப்பட்டிருந்தன என்பதை இறுதியாக வைத்துத்தானே, ஆட்டத்தின் ஓட்டத்தைக் குறிக்க என்று, பலர் இந்த பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள்.
ஆனால் ஆரம்ப நாட்களில், ஓட்டங்களைக் குறித்திருக்கும் முறையே மிகவும் வேடிக்கையான ஒன்றாக அமைந்திருக்கிறது. பக்கம் 45ல் உள்ள படத்தைப் பாருங்கள். ஒருவர் தனியாக அமர்ந்து, ஓட்டங்களைக் கணக்கிடும் பணியிலே அமர்ந்திருக்கின்றார்.
அவர் ஒரு கையிலே கத்தியும், மற்றொரு கையில் நீண்ட குச்சி (Stick) ஒன்றும் இருக்கின்றது. ஒட்டக்காரர் ஒருவர் ஒரு ஒட்டம் எடுத்தால், அதைக் குறிக்க அந்தக் கம்பில் ஒரு கீறு கீறி (Notch) அடையாளம் செய்வார்.
ஸ்கோள் (Score) என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'அடையாளம் செய்' என்பதுதான் பொருள். இங்கே, ஓட்டத்தின் எண்ணிக்கையைக் குறிக்க, குச்சி ஒன்றில் கீறி அடையாளம் செய்து ஒன்று, இரண்டு என்று எண்ணியிருக்கின்றார்கள்.
ஒரு வட்டம் என்றால் , 'ஒரு கீறு' என்று சாதாரணமாகக் கீறி அடையாளம் செய்வார். அந்தக் கீறலின் எண்ணிக்கை பத்து என்று வந்து விட்டால், அந்தப் பத்து என்பதனை உடனே தெரிந்து கொள்ள, அந்த இடத்தை நீளமாகவும், அகலமாகவும் ஆழமாகவும் குச்சியில் கீறி அடையாளம் செய்தனர். அதன் பிறகு, அதிகமான கீறல்கள் குச்சியில் விழத் தொடங்கியதும், பத்து என்ற நிலையை மாற்றி, இருபதுக்கு ஒரு அழுத்தமான கீறல் என்று குறித்தனர். அதனால்தான் ஸ்கோர் என்றால் இருபது என்று எண்ணிக்கையை, இன்று உலக வழக்காற்றில் குறித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அதன் பிறகு, இவ்வாறு குச்சியில் கத்தி வைத்து கீறி ஓட்டங்களைக் கணக்கிடும் பணியில் இருவர் ஈடுபட்டனர். இதனை, 1706 ம் ஆண்டு, வில்லியம் கோல்டுவின் என்பவர் தனது கவிதையில் மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாணயமாக, ஓட்டங்களின் எண்ணிக்கையை மாற்றி மறைக்காமல் குறிக்கின்றார் என்பதைத்தான் நம்பிக்கையான நண்பர்கள் என்று குறிப்பிட்டார். அதுவுமின்றி, அவர்கள் பார்வையாளர்கள் பத்திரிக்கையாளர்கள் பார்வையிலே தான் இதனை செய்ய வேண்டியிருந்ததும் ஒரு காரணம் என்பதால், இவ்வாறு அழகாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறு வளர்ந்து கொண்டே வந்த ஆட்ட செழுமையினைப் பின்பற்றி, ஆட்டத்தில் ஓட்டங்களைக் குறிக்கும் அமைப்பும் மாறிக்கொண்டே வந்தது. ஓட்டங்களை முறையாகக் குறித்தெடுத்தது, வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற ஆண்டு 1744 ஆகும். இந்த குறிப்பையும், 1744ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ந் தேதி, ஆர்டிலரி மைதானத்தில், கென்ட் மாகாணக் குழுவிற்கும், அகில இங்கிலாந்துக் குழுவிற்கும் இடையே நடந்த போட்டியில் எடுத்த ஓட்டங்களையே, முதன் முதலாகக் குறிக்கப்பெற்றவை என்று வரலாறு கூறுகிறது.
ஆனால், அந்த ஓட்டங்களைக் குறிப்பெடுத்தவர், விலாசம் தெரியாத ஒரு பத்திரிக்கையாளர் என்னும் வரலாறு தொடர்ந்து குறித்திருக்கிறது. அதை அடுத்து, 1772ம் ஆண்டு, முதன் முதலாக, பத்திரிக்கையில் போட்டி ஆட்டத்தின் ஓட்டங்கள் பற்றி விவரம் W. எப்ஸ் என்பவரால் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையிலே, பிரேட் (Pratt) என்பவர். அச்சிட்ட (காகிதத்தில்) அட்டையில் ஓட்டங்களைக் குறிப்பிட்டு கணக்கிட்டார். இவர் செவனோக்ஸ் கிளப்பின் ஒட்டக் குறிப்பாளராக (Scorer) இருந்தார். அவர் 1776ம் ஆண்டு. அச்சிட்ட அட்டையில் ஒட்டக்குறிப்புக்களை முதன் முதலில் குறித்த பெருமையைப் பெற்றார்.
பின்னர் 1791 ம் ஆண்டு, சாமுவேல் பிரிட்சர் என்பவர் முக்கிய போட்டி ஆட்டங்களின் மொத்த ஓட்டம் மற்றும் விவரங்களைத் தொடர்ந்து தினசரிப் பத்திரிக்கையில் வெளியிட்டு வந்தார். அது 1805ம் ஆண்டு வரை நீடித்து, தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.
பிரட் லில்லி ஓய்ட் (Fred Lilly White) என்பவர். ஒரு அற்புத காரியத்தைச் செய்தார், 1848ம் ஆண்டு, அதாவது நடமாடும் அச்சகம் ஒன்றை போட்டி நடக்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று, அங்கேயே ஒட்டக் குறிப்புக்கள் பற்றியதை அச்சிட்டுத்தந்தார்.
அத்துடன் நில்லாமல், அமெரிக்காவிலுள்ள கனடாவிற்கு 1859ம் ஆண்டு பயணம் சென்ற குழுவுடன், தனது நடமாடும் அச்சகத்துடன் சென்று, இந்தப் பணியை ஆற்றி பெரும் புகழ் பெற்றார், இத்தகைய ஆர்வம் உள்ளவர்களால்தான், கிரிக்கெட் ஆட்டம் மிகவும் பிரபல்யமடைந்திருக்கிறது என்றால், இது மிகையான கூற்று அல்ல.
ஒட்டக் குறிப்புக்கள் மற்றும் ஆட்டச் செய்திகள், ஆட்டக்காரர்கள் பற்றிய தொகுப்புக்கள் 1862ம் ஆண்டு நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டன.
அட்டையிலும், காகிதத்திலும் குறித்தால் மட்டும் போதுமா! பார்வையாளர்களுக்கும் அடிக்கடி ஆட்டம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால், ஆட்டக்குறிப்புப் பலகை (Score Board) ஒன்று அமைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உருவானது.
19ம் நூற்றாண்டின் மத்தியில், முதன் முதலாக ஆட்டக்குறிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டன. 1846ம் ஆண்டு. முதன் முதலாக லார்டு மைதானத்தில், தந்திமுறை குறிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1848ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் பொருத்தப்பட்டது.
பேகட் (Paget) என்பவள் ஆட்ட நேரத்தில் அவ்வப்போது. எடுக்கப்படுகின்ற ஓட்டங்கள், இரண்டு பந்தடி ஆட்டக்காரர்கள் எடுத்திருக்கின்ற, ஒட்டங்களைத் தனித்தனியே காட்டுகின்ற வகையில், புதிய முறையில் ஆட்டக் குறிப்புப் பலகையை 1884ம் ஆண்டு அமைத்தார்.
அதன்பின், பந்தெறிபவர்களின் எறியும் எண்ணிக்கையைக் கணக்கிடும் தன்மையில், பலகையில் குறிக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு உதவுகின்ற பாங்கிலே பொருத்தப்பட்டது.
1884ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் தைானத்தில், எல்லாவற்றையும் குறிக்கின்ற விரிவான அளவில் மிகப்பெரிய ஆட்டக்குறிப்புப் பலகை மின் உதவியால் இயங்கிடும் வண்ணம்அமைக்கப்பட்டு, உலகச் சிறப்பினைப் பெற்றது.
இதற்கு முன், பார்வையாளர்கள் யார் யார் எவ்வளவு ஓட்டங்கள் எடுத்திருக்கின்றார்கள் என்பதை அறியாமல், தங்களுக்குள்ளே 'கன்னாபின்னா' வென்று கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு குழுக்களும் சம அளவில் ஓட்டங்கள் எடுத்திருக்கும் பொழுது மட்டுமே, இரண்டு ஒட்டக் குறிப்பாளர்களும் (Scorers) எழுந்து நிற்பார்களாம். அப்படி நின்றால், இரண்டு குழுக்களும் சமமான ஓட்டங்கள் எடுத்திருக்கின்றன என்பது பொருளாகும்.
அந்த நிலையை அடியோடு மாற்றி, ஆட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவ்வப்போது பின்னென்ன நிலையில் ஓட்டங்களின் எண்ணிக்கை இருக்கின்றன பின்பதை அறிந்து கொள்ள வழி வகுத்துத்தந்தது. இப்படி அமைக்க்ட் ஆட்டக் குறிப்புப் பலகைகள்.
இந்நாளில் எல்லா விவரங்களையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளத்தக்க வகையில் ஆட்டக்குறிப்பேடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இப்படி அமைந்திருப்பதானது, இவ்வளவு காலம் ஆட்ட நேரத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் சாரமேயாகும்.