குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/முதலும் முடிவும்

விக்கிமூலம் இலிருந்து


5

முதலும் முடிவும்

ஒரு செல்வந்தர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்தார். அதற்கு நாள்தோறும் பாலும் சோறும் பரிவுடன் ஊட்டுவார். பஞ்சணையில் படுக்கவைப்பார். இப்படி செல்லமாக வளர்த்தும் அந்த நாய்க்கு அந்த வாழ்க்கையில் விருப்பமில்லை. தெருவெல்லாம் ஒடிச் சுற்றி அலைவதிலும் எச்சில் இலை பொறுக்கித் தின்பதிலுமே நாட்டம் கொண்டிருந்தது. அதுவே இன்ப வாழ்க்கை எனவும் கனவு கண்டுகொண்டிருந்தது. தன்னுடைய இன்ப வாழ்வுக்கு இடையூறாகத் தன்னை வளர்ப்பவர் இருக்கிறாரே என்று எண்ணிக் கவலைப்பட்டது. இதன் காரணமாக வளர்ப்பவரை ஏமாற்றி விட்டு விதிப்புறம் ஓடிவந்துவிட்டது. ஓடிவந்த நாய் அயலில் உள்ள குப்பைமேட்டில் சென்றுபடுத்துப் புரண்டு இன்பத்தை அனுபவித்தது.

நாயின் வளர்ப்பாளர் நாயைக் காணாமல் பாசத்தின் மிகுதியால் தேடி அலைந்தார். கடைசியில் நாய் குப்பை மேட்டில் படுத்திருப்பதைக் கண்டுவிட்டாலும் அருகிற் சென்று ஆசையோடு கூப்பிட்டார். நாய் வருவதாக இல்லை. அதனிடம் "என்னைத் தெரியவில்லையா? நான்தான்ே உன்னைப் பாலும் சோறும் ஊட்டி வளர்த்தேன். என்னிடத்தில் வா" என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கூப்பிட்டுப் பார்த்தார். நாய் வந்தபாடில்லை. வராததோடு மட்டுமின்றிச் செய்ந்நன்றி உணர்ச்சியைக் கூட அந்தநாய் காட்டிக் கொள்ளவில்லை. எனினும் வளர்த்தவருக்குப் பாசம் விட்டதா என்ன? அவர் நாயின் அருகிற் சென்று அந்த மண்ணோடு அந்த நாயை வாரியணைத்துத் துரக்கிக் கொண்டு செல்கிறார். இந்த நிகழ்ச்சியைப்போலவே ஆன் மாக்களின் வாழ்க்கையும் இருக்கிறது. ஆன்மா நாய், வளர்ப்ப வன் இறைவன், குப்பைமேடு வினைச்சேறு என்று தொடர்புபடுத்திச் சிந்தித்தால் தெளிவாக விளங்கும். உயிர்கள் அன்றாடம் கோடிக்கணக்கான வினைகளைச் செய்கின்றன. இல்லை செய்துகொண்டேயிருக்கின்றன. உயிர்களின் வாழ்வு வினைச்சூழலிலேயே சுழல்கின்றது.

இங்ஙனம் வினைவழிப்பட்டு அல்லல் வழிக்குச் செல்லும் ஆருயிரை அருள்வழிப்படுத்தத் தந்தையும், தாயு மாகிய ஈசன் திருவுளங்கொள்கின்றான். இந்தக் கருணை எண்ணத்தோடு இறைவன் வினைவழிப்பட்டுழலும் உயிர்கள் மாட்டு இறங்கி வருகிறான், உயிர்கள் விரும்பாமலேயே,

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
 ஊக்கம் உடையான் உழை” .

என்றே வள்ளுவரும் கூறுகின்றார். புண்ணியம் பண்ணிய பெருமக்களிடம்தான்் பணம் போகும் என்று அறிஞனும்சமயத் தலைவரும் புகன்றதில்லை. இந்தக் கண் மூடிக் கொள்கை நாட்டை விட்டே தொலையவேண்டும்.

"இரப்பவர்க்கு ஈயவைத்தார்; FLafಹಅ அருளும் வைத்தார்" என்றே திருநாவுக்கரசரும் செப்பியருளினார். ஆகவே, -

"செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கொள்கை நாட்டில் பரவவேண்டும் என்று அருள் நெறி முழங்கியது.

செல்வம் படைத்தோரிடமிருந்து செல்வத்தை - வழங்குமாறு உள்ளத்தைப் பண்படுத்தப் பாடுபடுகிறது அருள்நெறி. "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற வள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கருத்தை இன்று வாழ்க்கையில் வைத்துப் பேசுவது, அருள் நெறிதான்். இங்ங்னம் இன்றையச் சமுதாயத்திற்கு அருள்நெறி, பாவத்திற்கும், வறுமைக்கும் தொடர்பு இல்லை என்பதையும், புண்ணியத்திற்குப் பெரும் செல்வத்திற்கும் தொடர்பில்லை என்பதையும் பறைசாற்றியதாகும். உழைத்தால் செல்வம் தான்ேவரும். சோம்பேறியாக இருந்தால் செல்வம் சேராது. சீரழிந்து போவான் என்று அருள்நெறி இன்றைய சமுதாயத்திற்குப் பொருளாதாரத்தின் உண்மைத் தத்து வத்தைக் கூறிப் பரவச் செய்கிறது.