உள்ளடக்கத்துக்குச் செல்

குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/பாரதிதாசன்

விக்கிமூலம் இலிருந்து



பாரதிதாசன்

நாட்டினில் மூடக் கொள்கை
    நாட்டித்தம் வாழ்வை யின்பத்
தோட்டமாய் அமைத்துக் கொள்ளத்
    தோன்றிய கயவ ரெல்லாம்
ஏட்டினை மூட்டை கட்டி
    எடுத்தனர் ஒட்ட மென்னப்
பாட்டினை முழக்கு கின்றோன்

    பாரதி தாச னன்றோ?


கம்பனும் பாடி வைத்தான்
    கவிநயம் சொட்டச் சொட்ட
என்பவர் தாமும் பொய்யே
    எழுதினா னென்று சொல்வார்!
நம்புதற் கியலாப் பாதை
    நடப்பதில் உள்ள கேட்டை
மன்பதைக் கெடுத்து ரைத்தோன்

    பாரதி தாச னன்றோ?


தமிழெனில் உயிரே யென்பான்
    தரிக்குமென் மூச்சே யென்பான்
அமிழ்தெனு முணவே யென்பான்
    அகத்தெழு முணர்ச்சி யென்பான்
கமழ்ந்திடு மணமே யென்பான்
    கவிதையின் சுவையே யென்பான்
தமிழ்க்கவி பார திக்குத்

    தாசனும் நானே யென்பான்!

(நாச்சியப்பன்பாடல்கள்-தொகுதி. 2)



தமிழாலயம் வெளியீடுகள்
நாரா நாச்சியப்பன் எழுதியவை

1.நாச்சியப்பன் பாடல்கள் I15-00
2.நாச்சியப்பன் பாடல்கள் II15-00
3.மூன்று திங்களில் அச்சுத்தொழில்10-00
4.புதுமுறை பஞ்சதந்திரக் கதைகள்15-00
5.நாயகப் பெருமான்4-00
6ஏழாவது வாசல்5-00
7அசோகர் கதைகள்2-00
8.பறவை தந்த பரிசு4-00
9.மாயத்தை வென்ற மாணவன்5-00
10.அப்பந் தின்ற முயல்5-00
11.தாவிப்பாயும் தங்கக் குதிரை4-00
12.பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்5-00
13.குயில் ஒரு குற்றவாளி5-00
14.பாடு பாப்பா4-00
15.நான்கு பார்வைகளில் பாரதிதாசன்7-00
16.பாசமுள்ள நாய்க்குட்டி5-00

தமிழாலயம்: 137, ஜானிஜான் கான் தெரு,
சென்னை.600 014
.