உள்ளடக்கத்துக்குச் செல்

குயிற் பாட்டு/குறிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
(குயில் பாட்டு/4. காதலோ காதல்! இலிருந்து வழிமாற்றப்பட்டது)


குறிப்புரை

குயிற் பாட்டு - குயிலது பாட்டு ஆகும் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர். குயிலைப்பற்றிய பாட்டு - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

1. சோலைக்குயில்

(1 - 5) பரிதி - சூரியன், மோகனம் - மயக்கம், திரை - அலை.

(6-10) தென் புதுவை - அழகிய புதுச்சேரி என்னும் ஊர். புதுவை - புதுச்சேரி என்பதன் மரூஉ. நத்தம் - நகரைச் சார்ந்த சிற்றூர். அந்த மாஞ் சோலை-அந்த மாமரங்கள் நிறைந்த சோலை, அந்தம் ஆம் சோலை - அழகிய சோலை.

(11-15) விருந்து - புதுமை, பெட்பு- விருப்பம், புளகம் உற - மயிர்க்கூச்செறிய, உள்ளத்து அளல் - காமத்தீ.

(16-20) வானத்து மோகினியாள் -தேவர் உலகத்துப்பெண், குயில் கூவிய ஓசையின்பம் - குயிலின் இசை வருணிக்கப்படுகிறது.

(21-25) விந்தை - வியக்கத்தக்க செயல், முன்னி - எண்ணி, நெட்டைக் கனவு - நீண்ட சொப்பனம், கன்னிக்குயில் - இளமைப் பருவமுடைய குயில், கா - சோலை,

(26-30) குயில் பேட்டை - பெண் குயிலை, களி - மகிழ்ச்சி- நாதக் கனல் - குயிலின் இசையாகிய நெருப்பு: உருவகம் . (31-36) அமரர் - தேவர், மரித்தல் இல்லாதவர், தொக்க - பொதிந்த, அவனி - உலகம், உலக மக்களைக் குறித்தது: இடவாகு பெயர், மேதினியீர் - உலக மக்களே.

2. குயிலின் பாட்டு

எல்லை காணல் - முடிவைக் காண முயலுதல், நலிவு - குறைவு, சேதம் -அழிவு, கூளம் - குப்பை, பண் - இசை, புரை - குற்றம், உடைவு - தளர்ச்சி, இறுதி - அழிவு, வாடல் - வருந்துதல், விழல் - வீண்.

3. குயிலின் காதற் கதை

(1- 5) மோகனப்பாட்டு - காதல் மயக்கம் தரும் குயிலின் பாட்டு, ஏக மவுனம் - ஒரே அமைதி, இணைந்தனவால் - இணைந்தன - சேர்ந்து காணப்பட்டன. ஆல் : அசை.

(6-10) பேடே - பெண்பறவையே, திரவியம்-செல்வம், பீழை - துயரம்.

(11-15) மாயச் சொல் - அறிவை மயக்கும் வார்த்தை - காதல் என்னும் சொல், தவித்தல் - வாடுதல், புள் - பறவை, மையல் - காம மயக்கம்.

(16-20) எய்துகிலா - அடையப் பெறாத, நாண் - வெட்கம், கானக்குயிலி - சோலைக்குயில், மானக் குலைவு - வெட்கக் கேடு.

(21 - 25) அவனி - உலகம், சினம் - கோபம்.

(26-30) பேறு - திறமையாகிய செல்வம், நெஞ்ச வழக்கு- மன எண்ணம், கலகல - இரட்டைக்கிளவி.

(31-35) ஓலம் - சத்தம், ஊன் உடம்பு : சினையாகு பெயர், தேன் வாரி - தேனாகிய வெள்ளம் - உருவகம், ஏற்ற நீர்ப் பாட்டு- ஏற்றம் இறைப்பவர் பாடும் இசைப் பாட்டு, 'ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை' என்பது பழமொழி.

(36-40} கோல் தொடியார் - திரண்டவளையல்களையணிந்த பெண்கள், குக்குவென - பாடும் ஒலிக்குறிப்பு, சுண்ணம்-வாசனைப் பொடி, பண்ணை மடவார் - வயலில் வேலை செய்யும் பள்ளியர். கொட்டி - கைகளைக் கொட்டி, கும்மியடித்து. அமுதப்பாட்டு- தேவாமுதம் போன்ற இனிய பாடல்: உவமைத் தொகை.

(41)-45) வேயின் குழல் - புல்லாங்குழல், நா - நாக்கு.

(46 - 50) நெடுநோக்கு - நீண்ட பார்வை, மஞ்சரே - 'மைந்தரே' என்பதன் போலி - வீரரே.

(51 - 55) போழ்து - 'பொழுது' என்பதன் மகுஉ, இன்பச் சுரம் - காதல் நோய்: உருவகம்.

(56-60) பல்லவி - இசைப் பாட்டின் முதல் உறுப்பு: அது திரும்பத் திரும்ப இசைப்பது, விள்ளா - பிளக்குமாறு, திகைப்பு தடுமாற்றம்.

(61 - 65) நெடிது உயிர்த்து — பெருமூச்சு விட்டு, சோதித் திருவிழியீர் ! - ஒளியும் அழகும் பொருந்திய கண்களையுடையவரே, நாவாய் - தோணி.

(66 - 70) அளவளாய் - கலந்து பழகி, பறி கொண்டு - பறித்துக் கொண்டு - கவர்ந்து, பறி - முதனிலைத் தொழிற் பெயர்.

(71 - 75) காதலர்க்குப் பிரிவு என்பது ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கும். கொடு - 'கொண்டு' என்பதன் தொகுத்தல் விகாரம். தேறா - தாங்க முடியாது.

4. காதல் வேதனை

(1- 5) கனவு நனவு என்று அறியேன் - கனவோ நனவோ என்பதைத் தெரியேன், கனி - பித்து, காமனார் - மன்மதன், கொம்புக் குயிலி - மரக்கொப்பில் இருந்த குயில்.

(6-10) போந்து - வந்து : 'புகுந்து' என்பதன் மரூஉ. தறி - நெசவுக் கருவி - கட்டுத்தறி.

(11-15) நீளச்சிலை - பெரிய வில், தீம்பாட்டு-இனிய பாடல், சாயை - நிழல். இந்திர மாராலம் - மாய வித்தை.

(18 - 20) உட்கருக்களாகிய மனம், புத்தி,சித்தம், அகங்காரம் - இவை அந்தக் கரணங்கள் எனப்படும்; சூத்திரம் - சூத்திரக் கயிறு - பொம்மையை ஆட்டுபவன் கையிற் பிடித்த கயிறு; கடுகவும் - வேகமாக, நீலி - லெநிறமுடைய குயில்.

(21- 27) செஞ்ஞயிரும் செம்மை + ஞாயிறு )- பண்புத்தொகை சூரியன்; ஈண்டும் - வந்து கூடும், கரை கடந்த - அளவுக்கு மிஞ்சிய, கோணம் - மூலை

5. குயிலும் குரங்கும்

(1-6) சுற்று முற்றும் - பக்கமெல்லாம், தொல் விதி - பழமையான விதி.

(6-10) பித்தர்-காமப்பித்துப் பிடித்தவர், கேண் மின் கேளுங்கள்: ஏவற்பன்மை வினைமுற்று பதைக்கும் - நடுங்கும்.

(11 - 15) விம்மி-பொருமி, இரங்கும் - வருந்தும்.

(16-20) சிந்த - கொன்றுவிட, ஒளிந்து - மறைந்து.

(21-25) வானரரே - குரங்காரே;வால் +நரர் = வானரர்; ஈடு அறியா - ஒப்பில்லாத, ஏந்தலே - தலைவரே, ஏந்தல் - ஆண்பால் சிறப்புப் பெயர்; மையல் - காதல் மயக்கம்.

(26-80) வகுத்தல் அமைத்தல், வாயில்-வழி, விண்டு

உரைக்கும்- வாய் திறந்து பேசும், குரங்கு கூளிக்குத்தியிருக்கும் இயல்புடையது.

(31 - 35) பட்டு மயிர்-பட்டுப்போன்ற மெல்லிய உரோமம்; உவமைத் தொகை; எட்டு உடை - எட்டு வகையான ஆடைகள்.

(86 - 40) நேர்வதற்கு - ஒப்பாவதற்கு எத்தை - எதனை.

(41 - 45) ஈனம் - இழிவு - குற்றம், கச்சை - அரைக்கச்சை: ஆடவர் இடையில் கட்டுவது (Beit), பாகை - தலைப்பாகை, திருவால் - அழகிய வால்.

(46 - 50) போசனம் - உணவு, சாதுரியம் - திறமை, நேமத் தவம் - முறையாகச் செய்த தவம், நியமம - நேமம் என்று ஆயிற்று.

(51 - 55) கீர்த்தி - சிறப்பு, ஆரியர் - சிறந்தவர் மைக்குயிலி - கருநிறக் குயில், நீசக்குயில் - இழிந்த குணமுடைய குயில்.

(56 - 60) இசை இன்பம் இத்தகையதென விளக்கும் பகுதி. வற்றல் குரங்கு - உடல் மெலிந்த குரங்கு, வெறி - மயக்கம்.

(66) - 65) பிறாண்டி - காலாலும் கையாலும் தோண்டி வாரி இறைத்தல் - அள்ளி வீசுதல்.

(66 - 70) கதி -நிலை, ஆற்றுகிலேன் - பொறுக்கமாட்டேன், களியுறுவேன் - இன்பம் அடைவேன்.

(71 - 75) புண் செய - வருத்த.

(76 - 80) மாயம் - வஞ்சகம், தொகை தொகையா - கூட்டம் கூட்டமாக, வெள்ளறிவு - அறியாமை.

6. இருளும் ஒளியும்

(1 - 5) ஞாயிறு - சூரியன், மோனம் - மௌனம் - அமைதி, மொய்ம்பு - வலி, உய்யும் வழி - தப்பும் வகை.

(6-10) பீரக்கினை உணர்ச்சி, மூர்ச்சை சிலை - மயக்கம், வெளிறும் முன் - வெளுக்கும் முன்னால், பொழுது விடியும் முன்பு, வைகறை; இரவின் கடைசிப் பகுதி - கடைச் சாமம்

(11-15) நெரித்து விட்டார் - அடுக்கடுக்காகப் பல கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்.

(16 - 20) அகல்வீர் - நீங்குவீர், நைந்து - மனம் வருந்தி

விடாய் - களைப்பு, முழுத்துயில் ஆழ்ந்த உறக்கம்.

(21-25) மண்டு துயர் - மிக்க கவலை - வினைத்தொகை, உடைவன - தடுமாறுகின்றன.

(26-30) விற்பனர் - அறிவுடையோர், வெள்கி - வெட்கப்பட்டு, காலைக் கதிர் - உதய சூரியன்.

(31 . 35) தழல் - நெருப்பு, இங்கிதம் - இன்பம்.

(86 - 40) விண் - ஆகாயம், மூலத்தனிப் பொருள் - இறைவன், மேலவர் - பெரியோர், விரியும் ஒளி - எங்கும் நிறைந்த பேரொளி, குாலம் - உலகம்.

(41 - 47) நகையுறுத்தி - அழகுபடுத்தி, மலர்ச்சி - புதிய அழகு, புவி - உலகம்.

7. குயிலும் மாடும்

(1 - 5 ) துயில் - உறக்கம், கோலம் - அழகு. மோட்டுக்கிளை - உச்சிக் கொப்பு.

(6 - 10) கிழக்காளை - வயது முதிர்ந்த காளை மாடு, ஆழமதி - மிக்க கவனம், வெகுண்டேன் - கோபம் கொண்டேன், குமைந்தேன் - சீறினேன்.

(11 - 15) சூழ்ச்சி - தக்க உபாயம், மோகப் பழங்கதை - காதல் கதை, நந்தி - காளை.

(16 - 20) காமன் - மன்மதன், மூர்த்தி - தெய்வ வடிவுடையான், பொற்பு - அழகு, மேனியுறும் காளை - உடல் கட்டுடைய காளை.

(21 - 25) கனம் மிகுந்திர் - பெருமை மிகவும் உடையீர், பொதி - மூடை, வானத்து இடி - மேகத்தில் தோன்றும் இடி முழக்கம்.

(26 - 80; கடுமோகம் - மிக்க காதல், பார வடிவு - பெரிய தோற்றம், தீர நடை - கம்பீரமான நடை

(31 - 35) சல்லித்துளிப் பறவை - மிகவும் இழிந்த பறவை, அல் - இரவு, எற்றுண்டு - தாக்கப்பெற்று, முடைவயிறு - நாற்றம் பிடித்த வயிறு.

(36 - 40) சீழ் - துர்நாற்றமுடைய இரத்தம், நீசப்பிறப்பு - இழிக்க பிறவி.

(41 - 45) தராதரம் - உயர்வு தாழ்வு, வாதித்து - வாக்கு வாதம் செய்து, அடியாள் - அடியவளாகிய நான்.

(46 - 50) கூனர் - கூன் விழுந்த கிழவர், மதுர இசை - இனிமையான சங்கீதம்.

(51 - 55) ஒலிடும் - சத்தமிடும் : கத்தும், உண்ணி - இரத்தத்தை உண்ணும் ஒரு வகைப் பூச்சி, மேவாது பற்றாதவாறு, கான் - காடு, கழனி - வயல்.

(56 - 60) தாள் - பாதம், தையல் எனை - பெண்ணாகிய என்னை.

(61 - 65) சாரும் வழி - அடையும் வழி, மேலோர் - பிறப்பு, அறிவு முதலியவற்றால் மேம்பட்டோர்.

(66 - 70) காவலர் - அரசர், ’ஆசை வெட்கம் அறியாது’ என்பது பழமொழி, நேச உரை - அன்பு வார்த்தை, நெடிது உயிர்த்து-பெருமூச்சு விட்டு. பாழ் அடைந்த - பாழாய்ப்போன கேட்டுக்குக் காரணமான, இன்பக்களி - காம மயக்கம்.

(71) - 75) பார் - உலகம், கோட்டுப் பெருமரம் - கொம்புகளையுடைய பெரிய மரம், கா - சோலை, நான்முகன் - பிரமன்.

(76 - 80) காணரிய - அளவு காண முடியாத: காண + அரிய=காணரிய - தொகுத்தல் விகாரம்.

(81 - 85) உருளை - உருண்டை, அண்டம் - உலகம்.

(86 - 90) ஞாலம் - உலகம், அனந்தம் - அளவில்லாதன, சமைத்துவிட்டாய் - படைத்தாய்.

(91 - 95) தாலம் - உலகம், கானாமுதம் - கான + அமுதம் இசையமுது தீர்க்கசந்தி.

(96 - 100) பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்கள், கயம் - இனிமை.

(101 - 105) செத்தை - துன்பம், மீட்டும் - திரும்பவும், வன்னக்குயில் - அழகிய குயிற் பறவை.

(106-110) கானக்குயில் - கானம் + குயில்-காட்டுக் குயில், இசை பாடும் குயில்.

(111 - 115) கரைத்தது - உருகுமாறு செய்தது, மயல் காம மயக்கம், புன் பறவை - அற்பப்பறவை, காமவனல் காமத்தீ - உருவகம்.

(116 - 122) சொற்றை - பயனில்லாதது, வயிரிகள் - பகைவர்கள், வேட்கை - காம விருப்பம், கடுந்துயில் - ஆழ்ந்த உறக்கம்.

8. நான்காம் நாள்

(1-5) நயவஞ்சனை - தந்திரமாக ஏமாற்றுதல், வான்காதல் - மிக்க விருப்பம்: உரிச்சொல் தொடர், சதி - சூழ்ச்சி, போந்திட வருமாறு, சித்தத் திகைப்பு - மனத்தடுமாற்றம்.

(6-10) எத்து குயில் - ஏமாற்றிய குயில், தாழ்ச்சி - அவமானம்.

(11-15) இருந்தொலை - நீண்ட தூரம் : இருமை+தொலை பண்புத்தொகை. துலங்கவில்லை - தெரியவில்லை, உயர்மாடம் - மேல் மாடி மேற்றிசை - மேற்குத்திக்கு.

(16 - 20) கடுகி - விரைந்து சென்று.

(21-25) மேனி - உடல், மேவாது - வராது, குறுகி அடைந்து.

(26-30) ஊறு இணைப் புள் - கவலையில்லாத பறவை, மதியில் அறிவில்லாதவன், கொம்பர் - மரக்கொப்பு : கொப்பு என்பதன் மொழியிறுதிப் போலி. செவ்வனே - நன்றாக, பொன்னம் குழலின் - பொன் போன்ற அழகிய பல்லாங் குழலின் இசை போல.

(31-35) குமைந்தேன் - மனம் கொதித்தேன், புலைப்பாட்டு - இழிவான பாட்டு.

(36-40) குறித்தேன் - நினைத்தேன், இளகி - இரக்கங் கொண்டு.

(41-45) பொய்ந்நீர் - பொய்யான கண்ணீர், கடகடென - விரைவாக: 'கடகட' - இரட்டைக் கிளவி, வையம் - உலகம், சித்தமோ - எண்ணமோ.

(46 - 50) அன்றில் - குருவியினத்தைச்சேர்ந்த சிறு பறவை: இவ்வினத்து ஆண் பெண் குருவிகள் ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது. நாண்மலர் - அன்று பூத்த பூ, சரண் புகலிடம், மதலை குழந்தை, சிற்றுயிர் - சிறுமை + உயிர் : பண்புத் தொகை.

(51 - 55) வெந்தழல் - கொடிய நெருப்பு: வெம்மை + தழல் - பண்புத்தொகை, கூறுகிலேன் - தன்மை யொருமை எதிர்மறை வினை முற்று, பொதி மாடு - மூட்டை சுமக்கும் மாடு.

(56-60) உய்வேன் - பிழைப்பேன், சுமை -பாரம்.

(61 - 66) வெவ்விதியே - கொடிய ஊழ்வினையே: வெம்மை+ விதி - பண்புத்தொகை, வேந்தன் - தலைவனாகிய அரசன், புல்லாக - அற்பமாக.

9. முன் பிறப்பின் கதை மொழிதல்

(1-5) புகல்வது - சொல்லுவது, முடிநீள் பொதிய மலை - உயர்ந்த சிகரத்தையுடைய பொதிய மலை.

(6-10) பரவினேன் - துதித்தேன், ஆதரித்து - விரும்பி, மேதினி - உலகம்.

(11-15) பிறிதாகி - வேறுபட்டு, சித்த நிலை - மன உணர்ச்சி. இது முதல் குயிலின் பழம் பிறப்பினை முனிவர் கூற்றாக அக் குயிலே கூறுகிறது.

(16-20) வீறு - பெருமிதம், கம்பீரம்; வெந்தொழிலார் - கொடிய வேட்டையாடும் தொழிலையுடைய வேடர்; முந்தும் அழகு - முதன்மையான அழகு; மூன்று தமிழ் நாடு - சேர சோழ பாண்டிய நாடுகள்.

(21-25) இணை - ஒப்பு: செழுங்கானம் - வளமான காடு: செழுமை+கானம் - பண்புத்தொகை; காமன் கணை - மன்மத பாணம், காமத்தை விளைப்பது.

(26-30) நித்தம் - நாள் தோறும், சித்தம் - மனம், தேமொழியே -தேன் போன்ற இனிய சொல்லையுடையாய், மாலையிட - மணமாலை சூட்ட, மையல் காதல் மயக்கம், சால - மிகவும்- உரிச்சொல், சகிக்காமல் -பொறுக்க முடியாது.

(31-35) தேயம் எங்கும் - நாடு முழுதும், வேடர் கோன் -

வேடர்கட்கு அரசன் - 'மொட்டைப் புலியன்' என்பான்.

(36-40) மொட்டைப் புலியனின் மூத்த மகன் நெட்டைக் குரங்கன். நேரான - பொருத்தமான, தையல் - பெண், கண்ணாலம் - கலியாணம், எண்ணுப் பெருமகிழ்ச்சி - அளவில்லாத இன்பம்.

(41-45) உடம்பட்டான் - சம்மதித்தான், ஆறிரண்டு - பன்னிரண்டு, பாங்கா - அழகாக, பாவை - பாலை போன்ற பெண்: உவமையாகு பெயர், அன்னியன் - அயலான், மனம் புகைந்து - உள்ளம் கொதித்து.

(46-50) நானா மொழி - நான்கு விதமான சொற்கள், பல வார்த்தைகள், காயும் சினம் - வருத்துகின்ற கோபம், பெண்டு - மனைவி கட்டுப்படி - உலக வழக்கப்படி.

(51-55) மருமம் - சூழ்ச்சி, பேதம் - பகை, நாலிரண்டு மாதம் - எட்டு மாதம்.

(56 - 60) குயிலின் முற்பிறப்பில் வேடன் மகளாகப் பிறந்திருந்தபோது 'சின்னக்குயிலி' என்பது அவள் பெயர்.

(61-65) மின்னற் கொடி - மின்னல் போன்ற ஒளியுடைய பூங்கொடி, வெல் வேந்தன் பகைவரை வெல்லும் வல்லமை வாய்ந்த அரசன் : வினைத்தொகை.

(66-70) தொகுத்து நின்று - கூட்டமாகக் கூடி நின்று, வாழி - அசைச்சொல், கரை கடந்து - எல்லை மீறி, மாமோகம் பெருங் காதல்.

(71-75) 'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள், என்ன பயனும் இல'—
திருக்குறள் கருத்தை ஒப்பு நோக்குக: ஆவி கலந்து வீட்டீர் - ஈருடல் ஓருயிர் ஆகி விட்டீர், சுடர்க் கோலம் - ஒளி வாய்ந்த அழகு, ஆழி அரசன் - ஆணைச் சக்கரம் ஏந்திய அரசன்.

(76-80) வஞ்சித் தலைவன் - சேர நாட்டின் தலைநகராகிய வஞ்சியில் வாழும் அரசனாகிய சேரன், விந்தை அழகு - வியக்கத்தக்க அழகு, இசைக்க - சொல்ல.

(81-85) அரண்மனை - அரசர் மாளிகை, தன்னிகரில்லாதார் - தனக்கு ஒப்பாவார் இல்லாத உயர்ந்த அழகுடையார், வேண்டேன் - விரும்ப மாட்டேன்.

(86-90) அடற் சிங்கம் - வலிமை வாய்ந்த சிங்கம், குழி முயல் - புதரில் வாழும் முயல், திறல் - வலிமை, பத்தினி-கற்புடையவள், பார்வேந்தர் - நாடாளும் அரசர், நத்தி - விரும்பி, விலைமகள் - தாசிப்பெண், பொன்னடி - பொன் போன்ற பாதம் உவமைத் தொகை.

(91 - 95) கலக்கம் - துயரம், மிஞ்சும் - பெருகும், விழி குறிப்பு - கட்பார்வை, பளிச்சென்று - விரைவாக, திடீரென்று

(96-100) காமியர் - காமவெறி கொண்டோர், நெறி ஏது முறை என்ன உண்டு, 'காமத்திற்குக் கண்ணில்லை' என்பது பழமொழி, புத்தமுது - புதிய அமுதம் போன்றவளே : புதுமை + அமுது - அடையடுத்த உவமையாகு பெயர் மனையாட்டி - மனைவி, அரசாணி - அரசி.

(101 - 105) துணை - வாழ்க்கைத் துணைவி, ஐயுறுதல் - சந்தேகப்படுதல்.

(106 - 110) வேதநெறி - வைதீகச் சடங்கு முறை, வலக்கை தட்டிவாக்களித்தல் - வலது கையில் அடித்து சத்தியம் செய்தல், பூரிப்பு - மன மகிழ்ச்சி, வாரிப் பெருந்திரை - கடல்வெள்ளம்.

(111 - 115) திண்டோள் - திண்மை + தோள் - வலியை வாய்ந்த தோள், இதழில் தேன் பருகல் - உதட்டில் ஊறும் எச்சிலாகிய வாயமுதம் உண்ணுதல்.

(116 - 120) ஆரத் தழுவி - இறுக அணைத்து, கோவை இதழ் - கொவ்வைக் கனி போன்று சிவந்த மெல்லிய உதடு, கூத்து - விளையாட்டு, குதூகலம் - மகிழ்ச்சி.

(121 - 125) ஆத்திரம் - ஆசை, மன்ணாக்கி விட்டாள் - கெடுத்துவிட்டாள்.

(126 - 130) நிச்சயதாம்பூலம் - திருமணத்திற்கு முன் உறுதி செய்து கொள்வது; சிறுக்கி - இளம்பெண், பேதகம் - மாறுபாடான செயல், மனதில் எழுகின்ற தீ - கோபம்.

(131 - 135) தோப்பு - மரத்தொகுப்பையுடைய சோலை, ஈரிரண்டு பாய்ச்சல் - நான்கு குதி, நீரோடும் மேனி - வியர்வை சிந்தும் உடம்பு, நெருப்போடுங்கண் - கோபத் தீப் பறக்கும் கண்.

(136 - 140) எட்டி நிற்கும் செய்தி - தூரத்தில் நிற்கும் செயல், ஆர்ந்திருக்கும் செய்தி - கூடியிருக்கும் செயல்.

(141-145) இருவர் - மாடனும் குரங்கனும்,மற்றவன்

குரங்கன், தேவர் சுகம் - தேவர் உலக இன்பம் போன்ற இன்பம்.