குறட்செல்வம்/ஈதலும் இரத்தலும்

விக்கிமூலம் இலிருந்து



28. ஈதலும் இரத்தலும்


மனித குலம் பலவகையாலும் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்க் கூடியதேயாகும். அறம் விளக்கும் அறநூல்களும், ஒழுக்க நூல்களும், சமய நூல்களும் ஒருமுகமாக ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. ... ." .

தமிழ் இலக்கியங்கள்கூட ஈதலின் சிறப்பைப் பேசு கின்றன. காதலின்பத்தைவிட ஈதலால் பெறுகின்ற இன்பம் பெரிது என்பது தமிழர் கருத்து. ஈந்து வாழ முடியாத வாழ்க்கை மரணத்திலும் கொடுமையானது என்பது திருவள்ளுவர் கருத்து. -

நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் க்ருதுவார்கள். அப்படிப் பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப் பார்கள். குறுந்தொகையில் தலைவன் பொருள்வயிற் பிரிகின்றபொழுது, தலைவியிடத்தில் பொருள் திரட்டிக் கொண்டு கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிச் செல்கின்றான். கொடுத்த உறுதிச் சொல்லை. நிறைவேற்றாமல் தவறிவிட்டால், "இரவலர் வாரா வைகல் பலவாகுக, யான் செலவுறுதகவே' என்று குறிப் பிடுகின்றான். கொடுத்து உவந்து வாழாத வாழ்க்கை, கொடிய துன்பமான வாழ்க்கை என்பது தமிழ்க் கருத்து.

சிலர் நாள்தோறும் பலர் தம்முடைய உதவியை நாடு தலைப் பேறாக - சிறப்பாகக் கருதுவர். இரத்தல் எவ்வளவு துன்பமோ அதுபோலவே இரக்கப்படுதலும் சான்றோர்க்குத் துன்பம் தரும். இரத்து கேட்பவர்களு டைய மனம் நிறைவுபெறும் வண்ணம் ஈவதுதான்் ஈதலுக்குச் சிறப்பு. அங்ங்ணம் இன்றி, ஏதோ பெயரளவில் கொடுப்பதும் இரந்தவர்களுடைய வறுமை நோய்க்கு மருந்தாகாவண்ணம் வழங்குதலும் சால்பல்ல.

இரந்தார் பேராசைக்காரராக இருந்தால் இரக்கப் படுதலும் தீது, அதுமட்டுமின்றி தினைத்துணை நன்றி. செய்யினும் அதைப் பனைத்துணையாகக் கொண்டு மனநிறைவு அமையத்தக்க பண்பாடு இல்லாத்வர்களாக இருப்பின் தலில் மகிழ்ச்சி ஏது? - . . .

அதனாலன்றோ, உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்த தல்ல-உதவியைப் பெறுவோரின் தகுதின்யப் பொறுத்தது என்று திருக்குறள்

சான்றோர், நன் மனமுடிையோர் ஒருவேளை உப்பில்லாக் கூழே குடித்திருந்தாலும் அதை என்றைக்கும் எண்ணிப் பார்ப்பர். அக் கூழ் இட்டவர்க்கு நல்லது எண்ணுவர். நல்லது செய்வர். அற்பமணத்தர் கீழ்மக்கள் எவ்வளவு பெற்றாலும் பெற்றதைச் சுருக்கி, பெறாத தையே பெரிதுபடுத்திக் காட்டுவர். பெற்ற உதவிக்கு. நன்றி செலுத்தும் இயல்பின்றி, பெறாது போனவை. களுக்குப் பகை காட்டுவர்.

ஆதலால், ஈதல் இழப்பே எனினும் வறியோர்க்கு ஈதல் வேண்டும். வறியோரினும் இன்றியமையாத் தேவை கிடைத்தவுடன் மனநிறைவு கொண்டு மகிழ்ந்து வாழத் தெரிந்தவர்களே இரப்பவர்களாக வந்தால் ஈதல் இனிது இனிது மீண்டும் மீண்டும் பெறவேண்டும் என்ற பெரு வேட்கை யுடையவர்களாக இரக்கப்படுதல் தீதே யாம், இன்றைய உலகில் தன் தேவைகள் மட்டுமே தெரிந்த வர்கள் பெருகி இருக்கிறார்கள். கொடுப்பவர் சக்தி அறிந்து கேட்பவர்கள் இல்லை. கிடைத்தமட்டும் பார்க்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அதிலும் வறியவர்கள் டிட்டும் இரப்பதில்லை. வாழ முடிந்தவர்களும் கூட இரக்கிறார்கள்.

கொடுப்பதன் மூலம் பெறுகிறவர்களுடைய இனிய மகிழ்ச்சி நிரம்பிய முகத்தை காண்பதென்பது இன்றைக்கு அருமையாகிவிட்டது. அப்படியே ஒரே வழி கண்டாலும் நீரின்மேல் சலனத்தைப் போல சில பொழுதேயாம். வாங்கிக் கொண்டேயிருக்கும்போது மகிழ்ச்சி. ஒருநாள் தடைப்பட்டாலும் மகிழ்ச்சி மறைந்து ஆச்சரியம் தோன்றும். . . . . .

இந்த உலகத்தில் எப்படிப் பலர் கேட்கக் கொடுத்து வாழும் வாழ்க்கையை இன்பம் என்று கருத முடியும்? அதனாலன்றோ திருக்குறள்.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு, -

என்று உலக நடையை அறிந்து ஒதுகிறது.