குறட்செல்வம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
குறட் செல்வம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கலைவாணி புத்தகாலயம்
நல்ல நூல் வெளியீட்டாளர்கள்
தபால் பெட்டி எண் : 4960
2, சிவஞானம் ரோடு, பாண்டிபஜார்,
தியாகராய நகர், சென்னை-600 017.
தொலைபேசி எண் : 434 03 56
கலைவாணி வெளியீடு K 483
திருத்திய
முதற் பதிப்பு : பிப்ரவரி, 1996
பதிப்புரிமை பெற்றது.
விலை : ரூ. 30-00
திருக்குறள் நெறியில் செயலாற்றும் யாவர்க்கும்
சீனிதிருநாவுக் கரசின் காணிக்கை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. — பாரதியார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். — ஒளவையார்
ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் — போய் ஒருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம். — நத்தத்தனார்
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம்
எல்லாப் புகழும் தரும். — திருவள்ளுவர்
செந்தமிழ்க் குறளோசை திசையெலாம் மேவ
உலக மறை யாகும். — சீனி. திருநாவுக்கரசு
வள்ளுவத் தமிழ் பிறந்து வான்
சிறக்கும் வள நாடு. — சு.செந்தாமரை சிவன்
அச்சிட்டோர்:
அலெக்ஸ் பிரிண்டர்ஸ், சென்னை-94.
மதிப்புரை
வள்ளுவன் குறளை வையகம் முழுதும் அறியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள விளக்கமும் அதிகம். வாழ்க்கையின் அடிமுதல் நுனிவரை அளந்து காட்டக் கூடிய ஒரே நூல் திருக்குறள். மனித வாழ்க்கை மூன்று துறைகளில் போகிறது என்பதைத்தான், 'அறம் பொருள் இன்பம்' என்ற பகுப்பு நமக்குக் காட்டுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு திருக்குறள் எதிரொலிக்கிறது.
தோண்டத் தோண்டச் சுரக்கும் ஊற்றுப்போல், படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைக் காட்டுகிறது திருக்குறள். வேறு எந்த மொழியிலும், இவ்வளவு தெளிவான ஒரு நீதி நூல் இருக்குமா என்பது சந்தேகமே.
பேராசிரியர்களின் வழியில் வள்ளுவரின் கண்ணோட்டத்தை ஆராய்கிறார் தவத் திரு குன்றக்குடி அடிகளார். நடையின் எளிமை, படிப்பதைச் சுலபமாக்குகிறது. அடிகளாரின் திறனாய்வு நடை, பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் அமைந்திருக்கிறது.
ஒரு குறளுக்கு ஒரு தலைப்பு என விளக்கம் தருவது புதிய முறை. பெரும்பாலும், ஒர் அதிகாரத்துக்கு ஒரு தலைப்பு என்ற முறையில்தான், மற்றவர்கள் எழுதி உள்ளனர். எல்லா குறள்களுமே பொருள் உள்ளவை தான் என்றாலும், சாாசரி மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒட்டிவரும் குறள்கள், தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியவை.
ஆயிரத்து முந்துாற்று முப்பது அரும் குறள்களில் நாம் தேடி, சாறு திரட்டிக் கொண்டிருக்கும் வேலையை, கலபமாக்க —தாமே திரட்டித் தந்திருக்கிறார் அடிகளார்.
வாழ நினைப்பவர்களுக்கு வழி காட்டும் நூல் இது. பொருட் செறிவுள்ள நூல்களை வெளியிடும், 'கலைவாணி புத்தகாலயம்' உரிமையாளர் நண்பர் சீனி. திருநாவுக்கரசு அடக்கம் மிக்கவர். ஆழ்ந்த கருத்துகளில் பற்றுள்ளவர். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக நிலையத்திலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.
சென்னை-17
அன்பன்,
11–4–74
கண்ணதாசன்.
அணிந்துரை
குருமகா சந்நிதானம் சீலத்திரு
ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
'குறட் செல்வம்’ எனப் பெயருடைய தமிழுரைச் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுளை ஆராய்ந் தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிமை, ஊழ், மொழியுறவு, மக்கள், அறம், பொருள், இன்பம், வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப்பதாக உள்ளது. இச் செந்தமிழ்ப் பனுவல்.
இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்க விளங்கும் திருவண்ணாமலை ஆதீன குருமகா சந்நிதானம் சீலத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்; நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்: சொற்பொழிவில் வல்ல பொருட்பொழிவாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர், அவர்கள் சீலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம்.117) முடிவுரையை நோக்குதல் இன்றியமையாதது.
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாயது யாது! அதைத் தங்களது கடனாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும் நெறிவழுவாத அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் நீடினிது வாழ்க. இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.
இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கலைவாணி புத்தகாலயத்து முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இச் செல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வத்தையும் எய்தி நன்கு வாழ்க!
சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக
பரமாசாரிய சுவாமிகள்.
மெய்கண்ட தேவர் ஆதீனம்
காஞ்சிபுரம்
முன்னுரை
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள், மறையெனப் போற்றத்தக்கது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரிய ஒப்பற்ற சமயத் தெளிவினைத் தரும் தெள்ளு தமிழ் மறை; உலகப் பொதுமறை.
திருக்குறள், கடவுள் நம்பிக்கையை ஒத்துக்கொள்கிறது. அந்தக் கடவுளை நிறை குணங்களின் உருவமாகவே படைத்துக் காட்டுகிறது; ஆயினும், உயிர்க்குப் பற்றுக் கோடாகத் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் திருவடியைக் காட்டுகிறது. இறைவன்றன் திருவடியைப் பேசுதல் — பற்றுதல் அருள் முதிர்ந்த நிலையாகும்.
திருக்குறளுக்கு உயிர் உண்டு என்ற கொள்கை உடன்பாடு. இந்த உயிர் ஒன்றல்ல, பலப்பல என்பதைப் பன்மை விகுதியிட்டுக் குறிப்பிட்டதனாலேயே அறிய முடிகிறது. அதோடு உயிர் இயல்பிலேயே அறியாமை உடையது என்பதும், உயிர் முயன்று அறிவினைப் பெற்று உயர முடியும் என்பதும், திருக்குறள் கொள்கை.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் அடையும் வழி காட்டும் அருள் நூல். திருக்குறள் பயிற்சி, தெளிந்த அறிவைத்தரும். பிறப்பின் அருமை காட்டி, பிறப்பின் பயன் கூட்டும் பேரற நூல். திருக்குறள் ஒழுக்கம் உயர்வு நலஞ்சான்ற ஒழுக்கமாகும். வாழ்க்கையில் ஏற்று ஒழுகுதல், இன்ப அன்பினைத் தரும்; இறையருளில் சேர்க்கும். அனைவரும் திருக்குறள் பயில்க! குறள் நெறியை வாழ்க்கையில் பயில்க! வாழ்த்து!
நமது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் கலைவாணி புத்தகாலயத்தாருக்கு நன்றி! கலைவாணி புத்தகாலய உரிமையாளர்_திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நல்ல பதிப்பாசிரியர், கவிஞர், எழுத்தாளர். ஆக்கம் கருதாது பதிப்புத்தொழிலில் மக்கள் நலம் கருதியே ஈடுபட்டிருப்பவர் 'கலைவாணி' சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இன்ப அன்பு.
— குன்றக்குடி அடிகளார்.
பதிப்புரை
வள்ளுவரின் திருக்குறள், வாழ்க்கையின் ஒளிவிளக்கு.
உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு மிகச் சிறந்த மதிப்பைத் தருவது பொதுமறையாகத் திகழும் தனிச் சிறப்புடைய திருக்குறளே.
திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கங்களும் விரிவுரைகளும் வந்திருந்த போதிலும், அனைவரும் எளிதிற் கற்று, தேர்ந்து ஒழுகி வாழ்க்கையில் மேன்மையுற மிகச் சிறந்த மேற்கோள்களுடனும், விரும்பி ஏற்கும் விளக்கங்களுடனும் வாழ்க்கைக்கியைந்த கருத்துக் கருவூலமாக 'கலைவாணி' புத்தகாலயத்தின் மிகச் சிறந்த திறனாய்வு நூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உலக மக்களின் சமுதாயச் சிறப்பினைக் கண்டு மகிழவும், வள்ளுவர் வழி மக்கள் தொண்டே மகேசன் தெர்ன்டு எனவும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனவும் நாளும் சலியாது சிறப்புற பணியாற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயமே மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கைக்கு வளம் தரும் அறநெறிக் கருத்துக்களை மக்களுக்குப் பயன் தரும் முறையில் எளிய இனிய நடையில் ஏற்றம் தரும் வகையில் தந்தருளியுள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு இதய நன்றி.
அரியதோர் அணிந்துரை அளித்து ஆசிவழங்கி அருளும் காஞ்சி மெய்கண்ட தேவர் ஆதீன குரு மகா சந்நிதானம் சீலத்திரு. ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கும் மதிப்புரை தந்த மகிழும் கவியரசுக் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் இதய நன்றி.
மாந்தருலகம் இச்சிறந்த திறனாய்வு நூலை விரும்பி ஏற்றுப் பயன் பெற்று மகிழ எல்லாம் வல்ல கலைவாணியின் திருவருளை வேண்டுகின்றேன். I
கலைவாணி புத்தகாலயம் —சீனி, திருநாவுக்கரசு
தி. நகர், சென்னை-17. பதிப்பாசிரியர்
பொருளடக்கம்
1. | 9 |
2. | 11 |
3. | 13 |
4. | 15 |
5. | 16 |
6. | 18 |
7. | 20 |
8. | 25 |
9. | 29 |
10. | 32 |
11. | 34 |
12. | 36 |
13. | 38 |
14. | 40 |
15. | 44 |
16. | 49 |
17. | 53 |
18. | 56 |
19. | 59 |
20. | 62 |
21. | 64 |
22. | 68 |
23. | 72 |
24. | 76 |
25. | 80 |
26. | 86 |
27. | 89 |
28. | 91 |
29. | 94 |
30. | 97 |
31. | 100 |
32. | 103 |
33. | 108 |
34. | 112 |
35. | 118 |
36. | 122 |
37. | 124 |
38. | 128 |
39. | 131 |
40. | 134 |
41. | 137 |
42. | 140 |
43. | 145 |
44. | 149 |
45. | 152 |
46. | 154 |
47. | 158 |