குறட்செல்வம்/மனிதன் தெய்வமாகலாம்

விக்கிமூலம் இலிருந்து



1. மனிதன் தெய்வமாகலாம்


வாழ்க்கை மிகவும் சுவையுடைய ஒன்று. வாழ்வது என்பதும் ஒரு கலையே. மனிதன் முறையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த முறையான வாழ்க் கையை-வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதே சமயநெறியின் விழுமிய பயன்.

வாழ்க்கைக் கலையில் கைவந்தவர் திருவள்ளுவர். அவர், இந்த வையகத்து மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளமுறவே திருக்குறளைச் செய்தார்.

உலகியலில், மக்களிற் பலர் தெய்வத்தைத் தேடிச் செல்வதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில், தெய்வத் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து தங்கள் வாழ்க்கையில் அவற்றை மேற்கொள்ளாத நிலைமையையும் பார்க் கிறோம். , - o r

இயற்கையில் மானிட யாக்கைகளுக்குள் யாதொரு வேற்றுமையுமில்லை. உயிர்களுக்குள்ளும் பொதுவில் வேற்றுமையில்லை; தகுதிப்பாட்டிலேயே வேற்றுமை உண்டு.

வீணை பொதுவாக இருந்தாலும் மிழற்றுபவனின் திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இசைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்க்கிறோம். மிழற்றத் தெரிந்தவர் வீணையை மிழற்றினால் இன்னிசை பரவும். மிழற்றத் தெரியாதவர் மிழற்றினால் அபசுரமே பிறக்கும்.

வீணை போன்றதே மானிட யாக்கை. அந்த யாக்கையை அறிவின் விளக்கமாகவும் ஆக்கலாம். அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத் தின் செயற்பாடாகவும் ஆக்கலாம். அங்ங்ணமின்றிக் குப்பைத் தொட்டியைவிடக் கேடானதாகவும் ஆக்கலாம். அது, இயக்குவோரின் ஆற்றலையும் தகுதிப்பாட்டையும் பொறுத்தது. இதை உணர்ந்தே,

്കളേt് வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

ുരങ്ങ தாராயோ? -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே! என்று கேட்கிறார் பாரதியார்.

காடுகளைக் கழனிகளாக்கிப் பயன் காண்பது மனித ஆற்றல். கல்லை பேசும் பொற்சிற்பமாக்கிக் கவின் செய்வது மனித ஆற்றல். இவைபோன்றே, குறைமலிந்த மனித வாழ்க்கையை நிறைவுடையதாக்கித் தெய்வத்தின் நலம் பொதுளச் செய்வதும் மனித ஆற்றலேயாகும். 5ಣಿಗೆ? மனிதனே தெய்வமாகலாம், வாழ்வாங்கு வாழ்ந்தால்! ஆம்! தெய்வமாக மதிக்கப் பெறுவான்.

இத்தகு பேராற்றல் அவனுக்குள்ளேயே அடங் கிக் கிடக்கிறது. "தெய்வம் நீ என்றுணர் என்று நமக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார். 'கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்கிறார். -

இந்தப் பேருண்மைகளை உள்ளடக்கியே இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வாலுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். என்றார் திருவள்ளுவர்.