குறட்செல்வம்/செய்ந்நன்றி

விக்கிமூலம் இலிருந்து

14. செய்ந்நன்றி


இறைமை என்பது நற்குணங்கள் பலவற்றின் கூட்டு. குணங்கள் பண்பு; இறைவன் பண்பி. நற்குணங்கள் பல வற்றுள்ளும் தலையாயது நன்றியறிதல். சிசிரோ என்ற பேரறிஞன் நற்குணங்களுக்கெல்லாம் தலையாக விளங்கும் நற்குணம் நன்றி காட்டுதல் என்றும் எல்லாக் கடமைகளுக்கும் மூலமுதல் நன்றி காட்டும் குணம் என்றும் கூறிச் சிறப்பிக்கிறார். -

அதாவது, ஒருவர் செய்த நன்மையை - உதவியை பாராட்டி நினைவில் கொண்டு கடிமைகளாற்றுதல், நன்றி காட்டும் ஒழுக்கம் சொல்லி வரக்கூடியதன்று. இயல்பாகவே மனிதன் கொண்டு ஒழுக வேண்டிய ஓர் ஒழுக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் செய்ந் நன்றி அறிதல்' என்றே குறிப்பிட்டார்.

வாதவூரடிகள் தமது தேனமுதத் திருவாசகத்தில் அடிக்கடி நாயினை இழுப்பார். நாயினுங் கடையேன் என்ற சொற்றொடர் பெருகிக் கிடக்கின்றது திருவாசகத் தில், அதாவது, நாய்க்கு நன்றிகாட்டும் உணர்ச்சி உண்டு. பகுத்தறிவு படைத்த மனிதனாகிய எனக்கு அக் கிழான நாய்க்குள்ள குணமும் இல்லாமற் போயிற்றே என்பது குறிப்பு. நாயும்கூட மனிதனை நோக்க நன்றி. காட்டும் உணர்ச்சியில் பாராட்டக்கூடியதேயன்றி, அத னிடத்திலும் முழுமையாக நன்றி காட்டும் பண்பில்லை.

- இறைவனின் திருவருனைப் பெறுதற்குரிய வாயில்கள் கருணை கால்டுதல், நன்றி காட்டுதல் ஆகிவை' களேயாம். இறைவன் மகிழ்வுடன் தங்கியிருக்கும் இடங்கள், ஒன்று சொர்க்கம் அல்லது விண்ணுலகம். மற்றொன்று அமைதியான நன்றி காம்டும் பண்பிற் சிறந்த உள்ளம். ஆதலால் நன்றியறிதல்-நன்றி காம்டுதல் என்பது உலகியல் ஒழுக்கம் மட்டுமன்று. அருளியல் ஒழுக்கமுமாகும்.

உலகில் செய்யக் கூடாத பாவங்கள் பல. அவற்றை யெல்லாமே செய்தாலும், வருந்துதல், நோன்பிருத்தல் முதலியவைகள் மூலம் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்றும் நன்றி மறக்கும் தவறு செய்தால் கழுவாய் இல்லையென்றும் கூறுகிறது தமிழரின் வாழ்வியல் கார்டும் புறநானூறு. -

- 'ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென' என்று கூறி, நிலமே நடுக்குற்றுப் பெயர்ந்தாலும் நன்றி மறக்கக் கூடாதென வலியுறுத்துகிறது. அது.

"கிலம்புடை பெயர்வதாயினு மொருவன்

செய்திகொன் றோர்க்கு உய்தி இல்லென - அறம்பா பிற்றே ஆயிழை கணவ' - என்றும் பேசுகிறது.

கற்றோர் ஏத்தும் கலித்தொகையும், "ஒருவன் தனக்கு இடர் வந்துற்றபோது உதவியவர்க்கு அவர்க்குத் தேவைப் படும் காலத்தே உதவாது போனால், தான்ே தான்ாகத் தேய்வான்’ என்று கூறுகிறது. நன்றி கொன்ற பாவம் இவ்வுடல் ஒழிந்த பிறகும்கூட உயிரைத் தொடர்ந்து நின்று துன்புறுத்தும் என்றும் கலித்தொகை கூறுகிறது. கற்பித்தான்் கெஞ்சழுங்கப் -

பகர்ந்துண்ணான் விச்சைக்கட் டப்பித்தான்் பொருளே போற்

றமியவே தேயுமா ஒற்கத்துள் உதவியார்க்

குதவாதான்் மற்றவன் எச்சத்துள் ஆயினும் அது : சுறியாது விடாதே கான்.' கவியரசன் கம்பன் "உதவி கொன்றோர் உய்தற்கு உபாயமே இல்லை' என்று கூறுகின்றான். திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்துக் காட்டிய அறநெறிகளுள் செய்ந் நன்றி மறவாமை ஒன்று. திருவள்ளுவர்,

எங்ான்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்க்கன்றி கொன்ற மகற்கு. . . என்ற குறட்பாவில் பயன்கள்ை அல்லது விளைவு களை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது உணர்ந்து

இன்புறத் தக்கது.

எந்நன்றி என்பதன் மூலம், நன்றல்லா எல்லா வற்றினையும் உள்ளடக்கினார். கொன்றார்க்கும் என்பதி லுள்ள உண்மை நன்றல்லாதனவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. உய்வுண்டாம் என்ற செர்ல்வழி உய்தல் கூடும் என்று பொருள் கொள்ள முடிகிறதே. யன்றி, உறுதிப் பாடில்லை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்ல்ை என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கக் காண்கிறோம். உய்வில்லை என்ப்த னாலேயே பல பிறப்புக்களிலும் உய்வில்லை என்பதும் பெறப்படுகிறது. . . . . . . . . .

ஆதலால், நாம் அனைவரும் நன்றியறிந்து கடமைப் பாடுடையவர்களாக வாழ வேண்டும். நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடப் பாடாக அவனை வாழ்த்துதல் வேண்டும். வாழ்த்துதல் மட்டும் இறைவனை மகிழ்விக்காது. அவன் உவக்ககூடிய வகையில் அவனுடைய அருமைக் காரியப்பாடாக இருக்கின்ற உயிரினங்களுக்குத் தொண்டு செய்தலும் ஒருவகை வழிபாடேயாகும். பல்வேறு உயிர்வர்க்கத்தின் உழைப்பினாலும், உதவியினாலுமே.நாம் வாழ்கின்றோம். மீண்டும் அந்த உயிர்வர்க்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டாமர் எனன்? அதுவே நன்றி காட்டும் பண்பு. அதுவே சிறந்த இறை வழிபாடு. - *

ஆண்டவன் எண்ணத்தோடு அல்லது திருவரும் சிந்தனையோடு நாம், தொண்டு செய்யவேண்டும். நன்றி காட்டுதலும் ஒருவகை வழிபாடேயாகும். -

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் கட்பு.