குறட்செல்வம்/இருவேறு உலகத்து இயற்கை

விக்கிமூலம் இலிருந்து

42. இருவேறு உலகத்து இயற்கை

இந்த உலகில் அறிவுடையவர்கள் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். அறிவில்லாதவர்கள் சிலர் செல்வந்தர் களாக இருக்கிறார்கள். இஃது உலகியலின் நியதி ஆகாது; நீதியும் ஆகாது. முறைகேடான ஓர் அமைப்பை -முறையை நியாயத் தன்மைப்படுத்துவது அநீதியே ஆகும். - - -

வாழும் மனித உலகிற்கு அறம்பேசவந்த வள்ளுவர் மனித உலகத்தின் நலனையே நியாயமெனக் கருதுகிறார்: நீதி என்று கருதுகிறார். வழக்கில் பொய்மையாக இருந்தாலும் மனித உலகம் தீதற்ற நன்மையே பெறுமானால் அதுவே முறையென உரை கண்டவர் வள்ளுவர். வள்ளுவம் மனித குலத்தின் நலனையே மையம் கொண்டு கால்பரவி நிற்கிறது. -

இன்று அறிவுடையோர் ஏழையாக யிருக்கலாம். எத்தனையோ எழுத்தாளர்கள்-புலமை நலம் பெற்ற வர்கள் பதிப்பாளர்களின் உடும்புப் பிடியில் சிக்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர் சம்பாதிப்பது பல ஆயிரங்கள். படித்தவர் சம்பாதிப்பது சில நூறுகள். இந்தக் கொடுமைக்கு இன்னும் விடுதலை வரவில்லை.

ஆனால், அறிவுடையோர் எல்லாரும் இப்படி இருக் கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளரும் பதிப்பாளரும் ஒருவராகவே விளங்கும் புலமைச் சான்றோர், இன்று இல்லையா? டாக்டர் மு.வ. அவர்கள்

இல்லையா?

அறிவு என்றால் ஒரு காலத்தில் இலக்கியப் புலமை மட்டுமே என்ற கருத்து இருந்தது. அதுபோலவே, செல்வம் என்றால் நிலவுடமை என்ற கருத்தேயிருந்தது. நிலவுடைமை பரம்பரையானது. நிலவுடைமைச் செல்வ முடையோர் அறிவாற்றலோ தொழில் நுட்பமோ, தொழில் திறனோ உடையவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லாமலிருந்தது. - *.

முதற்காரணம் பரம்பரை. அடுத்த காரணம் அவர்கள் உழுவோரல்லர். வேளாண்மைக் கல்வியும் திறனும் உடையோரைக்கூட நில உடைமை முறை வற்றச் சிதறடித்திருக்கிறது. அந்த யுகத்திற்கு வேண்டுமானால் பழைய முறை பொருந்தும். *

அறிவு என்றால் ஒருதுறை அறிவு முழு அறிவாக மூடியாது. அதிலும் உடல் தேவைக்குரிய பொருள்களை ஈட்டத்தெரியாத அறிவு முழுத் தன்மை உடையதாக ஆக முடியாது. நம்முடைய மொழியும் நம்முடைய இனமும் மற்ற நாடுகளைப்போல மேலோங்கி வளராததற்கே காரணம் அறிவும் உழைப்பும் இணைந்து செயல்படாததே ஆகும்.

கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. இந்த முறைகெட்ட மரபை-அநீதியை -நெறியல்லாத நெறியை வள்ளுவரும் நியாயப்படுத்தி இருக்கிறாரென்று கூறுவது வள்ளுவத்திற்குப் பெருமை அனறு. - . . . ." -

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. என்ற குறளுக்கு அறிவும் செல்வமும் உலக இயற்கையில் மாறுபாடுடையன. இவ்விரண்டும் உடைவவராக வாழ்வ தரிது என்பது புலால் வேட்கையுடையவன் கடவுள் பெயரால் பலியிட்டதைப்போலவே ஆகும்.

'திரு” என்ற சொல்லுக்குக் கண்டோரால் விரும்பப் படும் தன்மை' என்று பொருள் கொண்டார் பேராசிரியர். இது மிக சிறந்த கருத்து. கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையவராக வாழ்தல் அரிய முயற்சியாகும்.

அறிவோ, ஆற்றலோ, வளம்பல உடைமையோ கண்டோரால் விரும்பத்தக்க வாழ்க்கையை வழங்கி விடுவதில்லை. தன்னலத் துறவும், பிறர் நலம் பேனும் வேட்கையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப்பார்க்கும் உண்மையும் கொண்டு தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்று கருதிக் கருதி இனிய அன்பால் அருளார் வத்தால் பலரைத் தழுவி வாழும் வாழ்க்கையே பலரால் விரும்பப்பெறும் வாழ்க்கை.

இதனையே, 'திரு” என்றார். தெள்ளிய அறிவு உடையோர் பலர் சமுதாய வாழ்க்கையில் தோற்று இருக்கின்றனர். அறிவின் காரணமாகவே பலரையும் ஆராய்ந்து பகை வளர்த்துக்கொண்டவர் இல்லையா? அறிவுடையோர் என்ற முனைப்பால் அழிந்தவர்கள் இல்லையா? அறிவுடையோரெல்லாம் அன்புடையோராக இருப்பதில்லை என்ற ஐயத்தின் வினாவே. -

அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்கோய் தன்கோய்போல் போற்றாக் கடை.

என்பது குறள். ஆதலால் தெள்ளிய அறிவும் கண்டோரால் விரும்பப்படும் எளிமையும் ஏற்றப் பண்பும் ஒருசேர உடையவராக வாழ்தல் அரிது.

மாணிக்கவாசகர் கடவுளைத் திரு” என்றே அழைக்கிறார். "திருவே, என் செல்வமே' என்பது மணிமொழி. இறைவனை சிந்தித்தலுக்கும் அவன்றன் திருவருளைப் பெறுதலுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.

தெள்ளிய அறிவுடையோர் இறைவனைப் பற்றியே ஆராய்ந்தாலும்கூட இறைவனை ஆராய்கிறார்களே தவிர அனுபவிப்பதில்லை. எந்த ஒன்றையும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டேயிருப்பவர்களுக்கு அவர்கள் ஆராயும் பொருளில் ஒன்றி உடனாகும் வாய்ப்புக் கிடைக்காது. இறைவனும் அவனது இன்பமும் ஆய்வுக் கூடத்திற்கு

தெள்ளிய அறிவுடையோர் ஆராய்கிறார்கள்! ஆராய் கிறார்கள்!! ஆனால், ஐயகோ, அவர்களுக்கு அனுபவம் இல்லை! இதனைத்தான்ே கற்றதனால் ஆயபயனென் கொல்?’ என்று வள்ளுவர் வினவுகிறார். மாணிக்க வாசகரும் கற்றாரையான் வேண்டேன்’ என்று ஒதுக்கு கிறார். திருஞானசம்பந்தரும் தெளிவினுள் சிவமாகி" என்று குறிப்பிட்டுத் தெளிவு சிவமாதலிலேயே பயன் கூட்டுகிறது என்று அருளிச் செய்துள்ளார்.

ஆதலால், 'திரு வேறு தெள்ளியராதலும் வேறு' என்ற குறளுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மை உடையாராதலும், தெள்ளிய அறிவுடையாராதலும் உலகியற்கையில் வேறுபட்டன என்றும், இறைவன் திருவருளைச் சிந்தித்துப் பெற்று அனுபவித்தலும் தெள்ளிய அறிவும் உலகியற்கையில் வேறுபட்டின என்பதுமே சிறந்த கருத்துக்களாகும்.

இந்த இரண்டு உணர்வுகளும் அதாவது கண்டோரால் விரும்பப்படும் தன்மையும், இறைவன் தன் திருவருளைப் பெற்று அனுபவித்தலும் தன் முயற்சியினாலேயே ஆகக் கூடியனவாகும். - . .

செல்வம் உடையராதல் தன் முயற்சியின்றியே பிறர் முயற்சியினாலும் ஆகமுடியும். எப்படி செல்வந்தர்கள் ஆனோம் என்று தெரியாமலே உலகத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஏன்? பரிசுச் சீட்டுகூட, செல்வந்தன் ஆக்கிவிடுகிறதே! தெள்ளிய அறிவினைப் பெற்று அதனைச் சார திருவுடையோராகவும் ஆக முயலுவோமாக.

"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளியர் ஆதலும் வேறு'

始多

●罗文 -

S *న J.4, .سیا

  1. * 次