குறட்செல்வம்/ஆள் முக்கியமல்ல

விக்கிமூலம் இலிருந்து

45. ஆள் முக்கியமல்ல

மனிதர்களுக்குள் பொருளியல் சண்டைகள் வருவது போலவே, கருத்துவழிச் சண்டைகளும் தோன்றுவதுண்டு. ஒருவருடைய கருத்தைவிட இன்னொருவருடைய கருத்து உயர்ந்தது என்கிற எண்ணம் தோன்றுகிறபோதும் தன் கருத்தை மற்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சி தலைகாட்டுகிற். பொழுதும் சண்டைகள் தோன்றுகின்றன.

ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்பதனை அக் கருத்தைச் சொல்லுகின்றவர்களை வைதது மட்டும் முடிவெடுக்க முடியாது.

எந்த ஓர் இனத்திற்கும் தன்னுடைய தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பது மனித இயல்பை ஒட்டியதுதான்்; தனிந் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதும் பிறருடைய கருத்தை ஏற்றுப் போற்ற மறுப்பதும் ஒன்றல்ல.

தனித் தன்மையைக் காப்பாற்றாது போனாலும், ஒரு இனவழிப்பட்ட நாகரிகத்திற்கு - கலாச்சாரத்திற்கு அடிச்சுவடே இல்லாமற் போய்விடும். அது மட்டுமல்ல - நாடுகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவண்ணம் ஒழுக்கம், ஒழுக்கமின்மைகளிற்கூட வேறுபாடுகள் நிலவுவது இயற்கை. - - ; :

மகாபாரத கலாச்சாரத்தில் ஒருத்தி ஐவருக்கு மனைவி யாக இருக்க முடியும். அது சமுதாய ரீதியாக ஏற்றுக் கொள்ளப் பெற்ற ஒழுக்கம். இதை நாம் அநாகரிகம் என்று கூறுவதற்கில்லை. இதற்கு அடிப்படை அந்தக் கால சமுதாயத்தில் உள்ள ஆண் பெண்களின் விகிதாசார எண்ணிக்கையே ஆகும்.

ஆனால் தமிழகத்தின் சூழ்நிலை வேறு. ஆதலால் பிறருடைய கருத்தைக் கேட்டு, சிந்தித்து, அக்கருத்து தன்னுடைய தனித் தன்மைக்கு இடையூறு செய்யாமல்தன்னுடைய நாகரிகத்தை வளர்த்துச் செழுமைப்படுத்த உதவுமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பதே வள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சமய சமுதாயக் கருத்துக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மோதின.

புத்தரின் கருத்துகள் பரவின. மகாவீரர் கருத்துக்கள் பரவின. ஆரிய மதக் கருத்துகளும் பரவின. இக்கருத்து களைச் சார்ந்தோர் அனைவரும் தங்களை பல்லாற்றானும் உயர்த்திக் கொண்டு கூறினர்.

அந்தச் சூழலில்தான்் திருவள்ளுவர், யார் சொல்லு கிறார் என்பது பற்றிக் கவலைப்படாதே! என்ன சொல்லு, கிறார்கள் என்பதைத் தெரிந்து - தெளிந்து - அது உண்மையானதாக -வாழ்க்கைக்கு இயைபுடையதாக இருக்குமானால் ஏற்றுக்கொள் என்று கூறினார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

發 Sደ Joo. 웃 7富 fr

கு-10