உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/உணர்வோர் கண்ணே உலகு

விக்கிமூலம் இலிருந்து

4. உணர்வோர் கண்ணே உலகு


உயிர் ஓர் அறிவுப் பொருள். உயிரின் இயல்பு பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தின் வழிச் செல்வதன்று. வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது உயிரின் கடமை. ஆனால் நடைமுறையில் கோடானுகோடி உயிர்கள் இங்ஙனம் வாழ்வதில்லை.

இவ்வுலகம் ஐம்பெரும் பூதங்களின் கூட்டினால் ஆனது. இப் பருவுலக நடைமுறைக்கும், உயிரியல் வளர்ச்சிக்கும் நிறையத் தொடர்புண்டு.

உயிரின் அனுபவ வாயில்கள், புலன்கள். புலன்களின் அனுபவக் கருவிகள் பொறிகள். அனுபவக்களம் ஐம்பூதங்களாய் உலகமும், பூதங்களின் வழித்தாய உணர்வுகளுமாம். பூதங்கள்—அவைகளாலாய உணர்வுகள் வழியே உயிர்கள் செல்லுமாயின், இம்மையிலும் பயனில்லை. மறுமையிலும் பயனில்லை.

அதற்கு மாறாக அவற்றின் கூறுபாடுகளை அறிந்து, அவைகளைத் தூய்மை செய்து, உணர்ந்து உணர்வு கொண்டு அனுபவிக்கும்பொழுது வாழ்வின் குறிக்கோள் கைகூடுகிறது. அவர்கள் பக்கத்தில் உலகம் நிலைபெற்றிருக்கும். இக் கருத்தினையே திருவள்ளுவர், -

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

என்று பேசுகின்றார்.