குறட்செல்வம்/பயனில சொல்லாமை

விக்கிமூலம் இலிருந்து

24. பயனில சொல்லாமை


இன்றைய உலகியலில் பேச்சு அதிகம். மனிதர்கள் தம்முள் ஒருசிலர் கூடினாலும் பேசித் தீர்க்கிறார்கள். பலர் கூடினாலும் (கூட்டங்கள் என்ற பெயரில்). பேசித் தீர்க்கிறார்கள். ஆக, கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பேச்சு அதிகம். வீட்டிலும் அதிகம். நாட்டிலும் அதிகம். இங்ங்ணம் வளர்ந்துவரும் பேச்சு முறை ஆக்க வழிப்பட்டதாக-பெரும் பயன் தரத்தக்கதாக வளருமானால் அது பாராட்டுக்குரியதாகும்.

மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே பொருளை உணர்த்துவதற்குத்தான்்! பொருள்வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொல்லாட்சியின் நிறைவு இலட்சியம். மேலும், உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப் படையாகக் காட்டி உறவுமுறையை வளர்த்துக்கொள்ளலே சொல்லாட்சி. மனிதர்களுக்குள் வள்ர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்கும் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாதோர், சொற்களை, தகுதியில்லாத முறையில் கையாளுவதே யாம். - o - - -

இயற்கையமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சியால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாக, போவதைப் பார்த்து, திருவள்ளுவர் வருந்துகிறார். சொல்லாட்சியும் உழைப் பின் விளைவே. இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும் பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும் பயனில்லாமலே அழிவதைப் பார்த்து, கழிவிரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்கும் புல்லியமாந்தரை இளங்கோவடிகள் வறுமொழியாளர்' என்று ஏசுகின்றார். திருவள்ளுவர் பயனற்ற சொற்களைக் கேட்டு மகிழ்வோரையும் கண்டிக்கின்றார். -

பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல் -

என்று கூறுகிறார். நெல்லோடுதான்் பதரும் சேர்ந்திருக் கிறது. அதனாலேயே, அதுவும் நெல்லாகி விடுமா என்ன? பயன்படுத்துவோர் விழித்தெழும் வரையில் பதரும் நெல்லோடு சேர்ந்திருக்கும். பின்னர் பதர் துற்றப்பெறும். நெல்லினின்றும் பிரிக்கப் பெற்று, கழிக்கப் பெறும்

அதுபோலவே, பயனற்ற சொற்களைப் பேசிக் கொண்டு தம்மை உயர்ந்தார் போல - நீதிமான்களைப் பேர்ல கருதிக்கொண்டும்-காட்டிக் கொண்டும் சிலர் வாழ் கின்றார்கள். ஏன்? பலர் வாழ்கின்றார்கள் என்பது அறிந்ததே. ஆனாலும் காலம் வருகின்ற போழ்து, பயனில் சொல் பாராட்டித் திரிந்தவர்களை நாடு ஒதுக்கும்; ஒறுக்கும். . - - -

ஒரு மனிதனுடைய உள்ளுணர்ச்சி எத்தகையது என்பதை அவனுடைய சொற்கள் காட்டும். நிலத்தின் இயல்பை, தண்ணிர் காட்டுவது இயற்கை. அது போலவே, உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றின் இயல்பு களைச் சொற்களே காட்டும். "பயனற்ற சொற்களை வழங்குகின்றவன். அறிவுடையவனாகவோ, இனிய பண்புடையவனாகவோ இருக்க முடியாது. நீதி நெறி வழிப்பட்டவனாகவும் இருக்க முடியாது' என்று திருவள்ளுவர் கருதுகிறார்.

பயனில பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பதை சொல்லும் - என்று திருக்குறளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும்போழ்து, அமுதினும் இனிதாக இருக்கிறது கருத்துச் சுவை. சொல்லும் சொற்களோ பயனற்றவை. அதையும் சுருங்கச் சொல்லுகிறார்களா எனில், உண்ட உணவு செரித்து அடுத்த வேளை பசி தோன்றவேண்டுமே! அதுவரையில் பேச வேண்டும்; பேசித் தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியோடு தெருவோரத் தில் - திண்ணைகளில் உட்கார்ந்து வம்பு அளப்பவர் களுக்கு, காலத்தின் அருமை தெரியாது! * --

ஆதலால், பயனற்ற சொற்களாக இருந்தும்கூட, விரித்துரைத்து மகிழும் இயல்பு இவரிடத்தில் இருக் கிறது. இந்த அளவிலேயே திருவள்ளுவர் முடிவு கட்டச் சொல்கின்றார். என்ன முடிவு? பயனற்ற சொற்களைப் பேசித் திரிவோரை அறிவில்லாதவர் என்று கருதி, எட்டடி தூரத்தே நிறுத்து; அல்லது நெருங்காதே. நெருங்கினா லும் காது கொடுத்து விடாதே! நீதியற்றவன் என்று கருதி நீண்ட தூரத்தில் காணும் போழ்தே உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று திருவள்ளுவர் வலியுறுத்து கின்றார். ". . . . - -

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இக்கருத்து நடைமுறைக்கு வரவில்லை. எல்லார்க்கும் வாய் இருக் கிறது. எல்லாரும் பேசலாம் என்று பேசுகின்றார்கள். போய்க்கும் புனைந்த வடிவம் கொடுத்து மெய்யாக்கு கின்றார்கள். பொழுது போகாதவர்கள், உழைத்து வாழும் அவசியம் இல்லாதவர்கள். தற்பெருமையில் களிக்கும் செல்வந்தர்கள், போக்கிரிகள் இன்றும் பயனில சொற்களைச் சொல்லிக் கொண்டும் கேட்டுக்கொண்டும். இருக்கின்றார்கள். - -

இந்தச் சூழ்நிலையில் எங்ங்னம் மனிதகுலம் ஆற்றல் நிறைந்த முயற்சிகளில் ஈடுபட முடியும்? எப்படி, அவர் களிடையே நம்பிக்கையுணர்வு வளர முடியும்? சிந்தனை செய்து பாருங்கள். :பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள். அது போலவே, அவற்றைக் கேட்காதீர்கள்'. இம்முயற் சியால் காலத்தின் அருமை வெளிப்படும். கருத்தில் தெளிவு ஏற்படும். நம்பிக்கை வளரும். நாடு செழிக்கும்.

மீண்டும் ஒரு தடவை அக் குறட்பாவைப் படித்து, நினைத்து அன்றாட வாழ்க்கைக்கு உரியதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோமாக. - *

நயனிலன் என்பது சொல்லும் பாரித்து உரைக்கும் உரை.