குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/நீண்ட கம்புப் பயிற்சிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11.5. நீண்ட கம்புப் பயிற்சிகள் (Pole Drills)

இரண்டு அங்குலம் விட்டமுள்ள, 12 முதல் 14 அடி நீளம் உள்ள மூங்கில் கம்புகள், இந்தப் பயிற்சிக்குத் தேவை.

பயிற்சியாளர்கள் நிற்க வேண்டிய முறை


1. 8 பேர்கள் இருக்க வேண்டும் ஒரு வரிசைக்கு.

2. குள்ளமானவர்கள் முன்புறமும், அவரைத் தொடர்ந்து உயரமாக என்பது போல், உயர வரிசைப்படி நிறுத்தி வைக்க வேண்டும்.

3. வரிசையில் நிற்பவருக்கு 1 அடி அல்லது 1 1/2 அடிக்கு பக்கத்தில் தரையில், நீண்ட கம்புகளைக் கிடத்தியிருக்க வேண்டும்.

4. ஒன்று என்று சொன் னவுடன் , ஒரு வரிசையில் உள்ள முதலில் நிற்பவரும், கடைசியில் நிற்பவரும், கிழே குனிந்து, கம்பினை எடுத்துக் கைகளில் (பக்கவாட்டில்) பிடித்திருக்க வேண்டும்.

5. இரண்டு என்று கூறியவுடன், ഖിഞ്ധിക്കു உள்ள அனைவரும், கம்பினை ஒரு கையால் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

6. வலது புறமாகக் கம்பிருந்தால் வலது கை இடப்புறமாக இருந்தால் இடது கை.

16 எண்ணிக்கைக்கு இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். (16 Counts Series)

1. 1. பக்கவாட்டில் பிடித்துக் கொண்டிருந்த கம்புகளை (இரண்டு கம்புகள்), பக்கவாட்டிலிருந்து கொண்டு போய், தோள் அளவுக்கு உயர்த்தி, அப்படியே முழங்கை மடிய, தோள்புறத்தில் வைக்கவும்.

2. அங்கிருந்து பக்கவாட்டில் தோளுயரத்திற்கு விரித்து விடவும்.

3. முதல் எண்ணிக்கை போல் செய்யவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.


2. 1.தொடையருகே பிடித்திருந்த கம்புகளை, தோள் அளவுக்கு உயர்த்தி கைமடித்து, தோள் புறத்தில் வைக்கவும்.

2. அங்கிருந்து தலைக்கு மேலாக உயர்த்திப் பிடிக்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலை.


3. 1.பக்கவாட்டிற்கு கம்புகளைக் கொண்டு செல்லவும் (Horizontal)

2. கம்புகளை முன்புறத்திற்குக் கொண்டு வரவும். (இப்போது தோள் புறத்தில் கம்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.)

3. முதல் நிலைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலை.


4.1 முன்புறமாக கம்புகளைக் கொண்டு வந்து, தலைப்புறத்திற்கு மேலாக உயர்த்து.

2. கம்புகளை முன்புறத்திற்குக் கொண்டு வந்து தோள்களில் இருத்து.

3. கம்புகளை மீண்டும் தலைக்கு மேலாக உயர்த்து.

4. கம்புகளைப் பக்கவாட்டிற்குக் கொண்டு வரவும்.


5.1. கைகளைப் பக்கவாட்டிற்கு நீட்டி விரிக்கவும்.

2. இடது காலை ஓரடி எடுத்து வைத்து, காலில் சாய்ந்து, இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி, வலது கையை தொடைக்குப் பக்கத்திலே இருத்தி வை

3. முதல் நிலைக்கு வரவும்.

4.ஆரம்ப நிலை.

6.(5 போல) இதே போல், வலது புறமாக செய்யவும்.


7. 1.இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் விரித்து நீட்டவும்.

2.அங்கிருந்து இடது கையை உட்புறமாகக் கையை மடித்து, கம்புடன் அக்குள் (Armpit) பக்கம் வைக்கவும். வலது கை பக்கவாட்டிலே தான் இருக்க வேண்டும்.

3.முதல் எண்ணிக்கை போல் வரவும்.

4.ஆரம்ப நிலை.


8.இதே போல், வலது புறமும் செய்யவும்.

9.இன்னும் பல பயிற்சிகளை உருவாக்கி, பயிற்சி கொடுக்கவும். ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும்

குழந்தைகள் நலவாழ்விற்கும். நல்ல தோற்றத்திற்கும் உதவுவன உடற்பயிற்சிகளும், விளையாட்டுக்களும் ஆகும்.

தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக சேர்ந்து செய்கிற பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும், குழந்தைகள் சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆகவே, இவை இரண்டும், செழிப்பு மிக்க அனுபவக் கல்வியறிவை வழங்கி உதவுகின்றன.

உடற்பயிற்சிகளும் விளையாட்டுக்களும் உடலைத் திறமாக்கி, மனதை பண்படுத்தி, மூளையை வளம் நிறைந்ததாக மாற்றி விடுவதால், பொதுக் கல்வி அறிவில் பெருமை பெறுகிற அளவு முன்னேற்றத்தையும் அளித்து விடுகின்றன.

மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளையே குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் வழங்குவதால், அவர்கள். வாழ்நாட்கள், வற்றாத இன்பச் சுனையாகவே மாறி விடுகின்றன.

இத்தகையப் பேருண்மைகளை புரிந்து கொண்டு, ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், பயிற்சியாளர்களும், குழந்தைகளுக்கு அன்பாக, பண்பாக, ஆர்வம் ஊட்டுகின்ற தன்மையின் விளையாட்டுக்களைப் போதிக்க வேண்டும்.

குழந்தைகளை விளையாட்டில் பங்கு பெறச் செய்ய உற்சாகம் ஊட்ட வேண்டும். உறுதுணையாக இருந்து உதவவேண்டும்.

இன்றைய குழந்தைகளே நாளைய மனிதர்கள், நாளைய தலைவர்கள் ஆவார்கள்.

வலிமை மிக்க சமுதாயத்தை உருவாக்கும் விளையாட்டுக்களே, குழந்தைகளுக்குக் கொண்டாடும் துணையாக விளங்க உதவுங்கள், உழையுங்கள், உன்னதப் பிரதேசமாக பாரதத்தை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

இந்த நல்ல லட்சியத்திற்கு எனது நூல் உதவும் என்று நம்பி, உங்களிடம் வழங்குகிறேன்.

*******

'விளையாட்டுத்துறை தந்தை' என்றும் பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்பட்ட டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத்துறை, தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுமையும் செலவிட்டார்.

விளையாட்டு, உடற்கல்வி, கவிதை, சிறுகதைகள், நாவல், சுய முன்னேற்ற நூல்கள் என 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டார்.

விளையாட்டுத் துறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளையாட்டுகளில் விருப்பத்துடன் பங்ககேற்கவும் உதவும் வகையில் விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழைத் தொடங்கி 25 ஆண்டுகள் நடத்திய பெருமைக்குரியவர்.

விளையாட்டு இசைப்பாடல்கள், உடற்பயிற்சிக்கான இசை ஒலிநாடா, ஓட்டப்பந்தயம் என்னும் திரைப்படத்தின் வாயிலாக விளையாட்டுக்களின் மேன்மையை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக விளையாட்டுத் துறையில் ஆய்வறிஞர் (பிஎச்.டி) பட்டம் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

இவரது மூன்று நூல்கள் தேசிய விருதும், ஒரு நூல் தமிழ்நாடு அரசின் பரிசிைனையும் பெற்றுள்ளது.