குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/பிரம்பு வளையப் பயிற்சிகள்
11.4 பிரம்பு வளையப் பயிற்சிகள்
(Hoops Drills)
பிரம்புக் கம்பினால் செய்யப்பட்ட வளையம். இதன் விட்டம் 27 அங்குலம் இருக்கலாம். வசதிப்படி சிறிதாக பெரிதாக, அமைத்தும் கொள்ளலாம்.
ஆரம்ப நிலை என்பது : வளையத்தை இரு பக்கத்திலும் இரு கைகளால் பிடித்துக் கொண்டு, நெஞ்சுக்கு முன்பாக மிக அருகில் வைத்து, நிமிர்ந்து நேராக நிற்பது
1.1. வலது கை இடது தோளுக்கு அருகே வருவது போல் கொண்டு வந்து இடது கையை இடப்புறமாக வளையத்துடன் கொண்டுவா. இடது கையை சற்று தாழ்வாக வை.
2. வளையத்தை தலைக்கு மேலே உயர்த்தி, வலது கையை சற்று தாழ்த்தி வை.
3. முதல் எண்ணிக்கை போல. ஆனால் வலது புறமாக வளையத்தை வை.
4. ஆரம்ப நிலை.
2.1. தலைக்கு மேலே படுக்கை வசமாக இருப்பது போல் வளையத்தைப் பிடித்து, இடது காலை இடது புறமாக ஒரடி எடுத்து வை.2.இடது காலை சரித்து சாய்ந்து, வளையத்தை இடது பக்கமாகக் கொண்டு வா.
3.முதல் எண்ணிக்கை போல
4.ஆரம்ப நிலை
3. 1.தலைக்கு மேலே வளையத்தை வைத்து, முன்புறமாக வலது காலை வைத்து, சரிந்து நில்.
2.வலது புறமாக இடுப்பை வளைத்து சாய்ந்து, வளையத்தின் மேற்புறம் இடது கை இருப்பது போல, வளையத்தை செங்குத்தாக தலைக்கு மேலே பிடி.
3.முதல் நிலைக்கு வரவும்
4.ஆரம்ப நிலை
4. 1.தலைக்கு மேலே படுக்கை வசமாக வளையத்தை வை.
3.முதல் நிலைக்கு வரவும்
4.ஆரம்ப நிலை
5. 1.வலது காலை முன்னே வைத்து சாய்ந்து, முன்புறமாக வளையத்தைக் கொண்டு வா.
2.முன்புறத்திலிருந்து வளையத்தை மார்புக்கு அருகில் கொண்டு வா.
3.இடது குதிகாலால் திரும்பி இடது பக்கமாகச் சாய்ந்து, வளையத்தை முகத்திற்கு நேராக முன்பக்கத்தில் வை.
2.ஆரம்ப நிலை.
6. 1.முகத்திற்கு நேராக வளையத்தைப் பிடி.
2.கயிறு தாண்டி குதிப்பது போல துள்ளிக் குதித்து தலைக்கு மேலே வளையத்தை கொண்டு போய், திரும்பவும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வா.
7. 1. நேராகப் பார்த்துக் கொண்டு, வலது காலை வலது புறம் வளைத்து சாய்ந்து நில். வளையத்தை இடது புறமாகக் கொண்டு வந்து, இடது கையை நீட்டி வளையத்தைப் பிடி.2.ஆரம்ப நிலைக்கு வரவும்.
3.இப்போது இடது புறமாக முதல் நிலையில் செய்தது போல் செய்.
8. 1.இடது காலை முன்புறமாக வைத்து, முன்புறமாக சாய்ந்து நின்று, தலைக்கு மேலே வளையத்தைக் கொண்டு வா.
2.இடது புறமாக இப்போது வளைந்து நில் இடது புறமாக வளையம் வரவும்.
3.இடது புறமாக, குதித்து பின்புறம் திரும்பி நில். வளையம் தலைக்கு மேலே.
4.ஆரம்ப நிலைக்கு குதித்துத் திரும்ப வரவும்.
9. 1. இடது புறமாக வளையத்தைக் கொண்டு வா. வலது கை, இடது புறத்தோள் அருகில் இருப்பது போல், வளையத்தைப் பிடி.
2.வளையத்தைத் தலைக்கு மேலே கொண்டு போய், திரும்பவும் இடுப்புக்கு அருகில் கொண்டு வா.
3.வலது புறமாக வளையத்தைக் கொண்டு வா. இடது கை, வலதுபுறத்தோள் அருகில் இருப்பது போல, வளையத்தைப் பிடி.4.ஆரம்ப நிலைக்கு வரவும்.
10. 1. இடது காலை ஓரடி பின்புறமாகக் கொண்டு போய், குதிகால் தரையில் படாமல் பாதத்தால் நின்று, இடது புறமாக வளையத்தைக் கொண்டு போய், தலைக்கு மேலாகக் கொண்டு வந்து, வலது புறமாக வைத்து, மேல் நோக்கிப் பார்.
2.இடது காலை முன்புறத்திற்குக் கொண்டு வந்து, இடது காலை மடித்து, வலது காலை நிமிர்த்தி நேராக வைத்து, வலது புறத்திலிருந்து தலைக்கு மேலாக வளையத்தைக் கொண்டு வந்து இடப்புறமாக வைத்து நில்.
3.முதல் எண்ணிக்கை போல செய்.
4.ஆரம்ப நிலைக்கு வரவும்.