குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/தேர் கொடுத்தவர்
தேர் கொடுத்தவர்
முத்து, பவளம், மணி இழைத்த
தேரைப் பாரடி-அதில்
மிடுக்கு டனே செல்லும் அந்த
மனிதர் யாரடி?
எத்தி சையும் புகழ் மணக்கும்
பாரி தானடி-அவர்
இல்லை யென்றே சொல்லி டாத
வள்ள லாமடி.
சாலை ஓரம் அந்தத் தேரும்
நிற்ப தேனடி?-அங்கே
சட்டென் றவரும் கீழிறங்கிப்
பார்ப்ப தென்னடி?
மாலைக் காற்றில் ஆடி அசையும்
முல்லைக் கொடியடி- அதை
வழியில் கண்டே வேகமாக
இறங்கி னாரடி.
உற்றே அந்தக் கொடியை அவரும்
பார்ப்ப தேனடி?-அவர்
உள்ளம் நொந்து முகமும் வாடி
நிற்ப தேனடி?
பற்றிப் படரக் கொம்பில் லாமல்
முல்லைக் கொடியுமே-காற்றில்
சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி
கண்டு தானடி.
தேரைக் கொடியின் அருகில் கொண்டு
செல்வ தேனடி?-அங்கே
சென்று கொடியைக் கையில் அவரும்
எடுப்ப தேனடி ?
தேரின் மீது கொடியைப் படர
விடுகி றாரடி-அதன்
சிரமம் தீர்த்து மகிழ்ச்சி யோடு
நடக்கி றாரடி.
முல்லை படரத் தேரைக் கொடுத்த
வள்ளல் பாரிபோல்-அடியே,
மிகவும் கல்ல மனிதர் ஒருவர்
உண்டோ ? சொல்லடி.
இல்லை, இல்லை, இல்லை என்றே
சொல்கி றேனடி-நாம்
எங்கு தேடிப் பார்த்திட் டாலும்
கிடைத்தி டாரடி!