உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/நாய்

விக்கிமூலம் இலிருந்து

7. நாய்

வீட்டு வாசல் காப்பவன்,
      வேட்டை யாட வல்லவன்,
ஆட்டுக் கிடைப் பாண்டியன்,
      அன்பு மிக்க தோழன். 1

உண்ட சோற்றை எண்ணி
      உயிரும் விடத் துணிபவன்.
மண்டலத்தில் நாய்போல்
      வாய்த்த துணை உண்டோ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/நாய்&oldid=1672044" இலிருந்து மீள்விக்கப்பட்டது