உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/பசு

விக்கிமூலம் இலிருந்து

10. பசு

பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப்
       பால் தர, நீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
       பகருவையோ? பசுவே!
உச்சியுடல் நக்கி, ஈன்ற
       உடன், உனது கன்றை
உயிரெழுப்பும் மாயம் எதோ?
       உரைத்திடுவாய், பசுவே! 1

வாய்க்கினிய பால் தருவாய்;
       வயற்குரமும் தருவாய்;
வண்டிகட்டக் காளையும் நீ
       வளர்த்தளிப்பாய்,பசுவே!
தாயில்லாப் பிள்ளைகட்குத்
       தாய் ஆவாய்; நோயால்
தளர்பவர்க்கு மருத்துவச்சி
       தானாவாய்,பசுவே! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/பசு&oldid=1672049" இலிருந்து மீள்விக்கப்பட்டது