குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/ஒரே குழந்தை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10 ஒரே குழந்தை

ங்களுக்கு ஒரே குழந்தைதான? அப்படியானல் அதை வளர்ப்பதில் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உங்கள் அன்பை யெல்லாம் அதனிடம் காண்பிப்பீர்கள்-அதில் எனக்குச் சந்தேகமில்லை. உங்கள் கவனத்தை யெல்லாம் அதன் மேல் செலுத்துவீர்கள். அதிலும் எனக்குச் சந்தேகமில்லை. அவ்வன்பையும் கவனத்தையும் பற்றித்தான் நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அளவுக்கு மிஞ்சிய அன்பும் கவனமும் குழந்தைக்குக் கெடுதலாகவும் முடியலாம்.

ஒரே குழந்தை யென்றால் சாதாரணமாக அது பிடிவாத, முள்ளதாக இருக்கிறது. தொட்டதற் கெல்லாம் ஒரே கூச்சலும் அழுகையும் தொடங்குகிறது. காரணமென்ன? பெற்றோர்களுக்கு அது செல்லப்பிள்ளை. அவர்களுக்கு, அதுதான் ராஜா.

ஒற்றைக் குழந்தை தன்னங் தனியாக வளர்கிறது. அதற்குத் தன் வயதுள்ள குழந்தைகளோடு அதிகமான தொடர்பு இல்லை. அது வயது வந்தவர்களின் மத்தியிலே அவர்களுடைய காரியங்களைக் கவனித்துக் கொண்டு நிற்கிறது. இந்த வகையில் அதற்கு ஒரு பிரதிகூலம் உண்டு.

அது மற்றக் குழந்தைகளோடு கூடி விளையாடவேண்டும். தாராளமாக அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பது பெற்ரறோர்களின் தனிப்பட்ட கடமையாகும். பிறரோடு கூடியிருக்கப் பழகுவது குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்கவேண்டிய முக்கியப் படிப்பினையாகும்.

வயதில் ஒத்த குழந்தைகளின் சேர்க்கையில்லாததால், பல தீங்குகள் விளைய இடமேற்படுகிறது. கூர்ந்த அறிவுள்ள குழந்தைகள் தாமே ஒரு கற்பனே உலகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு அதில் தமது காலத்தைக் கழிக்கத் தொடங்கும். கற்பனை செய்வது எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்புதான். அதனால் தீங்கில்லை. ஆனால், அவை வெறுங் கற்பனைகள்தான் என்ற உணர்வு அவ்வப்போது ஏற்படவேண்டும். உண்மை இது, கற்பனே இது என்று பிரித்தறியக் குழந்தைக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி வேண்டும்.

கற்பனையிலே-அதிலும் ஒற்றைக் குழந்தையின் கற்பனை உலகத்திலே-அக் குழந்தைதான் நடு நாயகமாக விளங்கும் தலைவன்; அது வைத்ததே சட்டம், அதற்கு மாறு சொல்ல யாருமில்லை-இவ்வாறு கற்பனை செய்து கொண்டு வளர்ந்த குழந்தை பிறரோடு பழகநேரும்போதும், வாழ்க்கையில் சேர்ந்து வேலை செய்யும்போதும் தன்னிஷ்டப் படியே எல்லாம் நடக்க வேண்டுமென விரும்புகிறது. அது நடக்குமா? அந்தக் குழந்தைக்கு மற்றவர்களை அநுசரித்து கடக்கத் தெரிகிறதில்லை. அதனால் மனத்தாங்கல்களும் சச்சரவுகளும் விளைகின்றன. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் பல சமயங்களில் தடை ஏற்படுகிறது.

மற்றவர்களைச் சமமாகப் பாவித்து வாழ ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்ளவேண்டும். வீட்டிலே பல குழந்தைகள் இருந்தால் இப்படிப்பினே தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. ஒற்றைக் குழந்தைக்கு இந்த வாய்ப்பில்லை. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் சாதாரணமாக முதல் இரண்டு வருஷங்களுக்குப் பெற்றோர்களின் விசேஷக் கவனம் கிடைக்கிறது. ஆனால், ஒற்றைக் குழங்தைகளுக்குப் பல வருடங்களுக்கு அது கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் பெற்றோர்கள் செய்வார்கள். அதனால் அது எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கவே எண்ணம் கொள்கிறது; தானே அதைச் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை அதற்கு ஏற்படுவதில்லை.

ஆதலால், மற்றக் குழந்தைகளோடு பழகுவதற்கு அதற்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். குழந்தைப் பள்ளிகள் இதற்குச் சிறந்த சாதனங்கள். அங்கே பெற் ருேர்களின் அர்த்தமற்ற அன்பும் செல்லமும் கவனமும் இல்லை. பிற குழந்தைகளின் சேர்க்கை நிறைய உண்டு. அவர்களோடு பல மணி கேரம் இருப்பதால் கூடிக் காரியம் செய்யவும், விளையாடவும், பிறரை அதுசரித்து கடக்கவும் அக்குழந்தை கற்றுக் கொள்ளும். உலகமானது தனது வீட்டைப் போலவே தன் விருப்பப்படி இருக்காதென்ற உணர்ச்சியும் மெதுவாக உண்டாகும்.

எதிர் வீட்டிலே ஒரு பையன் இருக்கிறான். ஒரே பையன். அவனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அம்மாளைக் கூப்பிடத்தான் தெரியும்; அம்மாள் வரக் கொஞ்சம் தாமத மேற்பட்டாலும் உடனே அழத்தான் தெரியும். அவனுக்கு வேண்டிய தெல்லாவற்றையும் அவனுடைய தாயே செய்துவிடுகிறாள். அவன் ஒடக்கூடாது; ஒடினால் விழுந்து காயமாகிவிடுமே! ஒவ்வொரு வேளையும் அவனைச் சாப்பிடும்படி செய்வது ஒரு பெரிய பிரயத்தனம். சரியானபடி உணவருந்தாது உடம்பு இளைத்துவிடுகிறதே என்று தாய்க்குப் பெரிய கவலை. அதை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையிலே இப்படி யெல்லாம் யார் இவனிடம் அக்கறையும், அநுதாபமும் கொள்ளப் போகிறார்கள்? வாழ்க்கை யென்பது உறுதியோடும், தன்னம்பிக்கை யோடும் போராடுபவனுக்கே வெற்றி கொடுக்கும். இவன் பிறரையே எதற்கும் எதிர்பார்த்து நிற்பான். தனக்கு வேண்டிய தெல்லாம் செய்து கொடுக்கவில்லை என்று அவர்களை நொந்து கொள்ளுவான். அவர்களோடு சரியாகப் பழகமாட்டான். ஆதலால் வாழ்க்கை அவனுக்கு எப்படி இன்பமளிக்க முடியும்?

ஒரே குழந்தையுடைய பெற்றோர்கள் இதை நன்கு கவனிக்கவேண்டும். குழந்தை என்றும் தங்கள் பாதுகாப்பிலும் அன்பிலுமே இருக்கப் போவதில்லை. அது மற்றவர்கள் மத்தியில் வாழவேண்டும். அதற்கு அதைத் தயார் செய்யவேண்டுமானால் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறரிடையே குழந்தை தாராளமாகவும், சுய நம்பிக்கையோடும் பழகவேண்டும். எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அது தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அப்பொழுதுதான் அக்குழந்தை வாழ்க்கையில் வெற்றியடையும்.