கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நாம் இருவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

32. நாம் இருவர்

அமைப்பு:

ஆடுகள எல்லையாக, ஆடுகளம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில், ஆட வருபவர்கள் அனைவரையும், இருவர் இருவராகப் பிரித்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு, எந்த நேரத்திலும் இணைபிரியாமல் விளையாட வேண்டும்.

ஆடும் முறை:

எல்லா இரட்டையர்களும் ஆடுகளத்தில் ஆங்காங்கே பரவி நின்று கொண்டிருக்க, ஒரு இரட்டையர் மட்டும், ஒரு மூலையில் நின்று கொண்டிருந்து. மற்றவர்களை ஓடி விரட்டித் தொட்டுப் பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

எந்த இரட்டையர் அவர்களிடம் சிக்குகின்றாரோ, அவரே விரட்டுபவராக மாற, ஆட்டம் மீண்டும் தொடரும்.