கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நிழலாட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. நிழலாட்டம் !

அமைப்பு:

வெய்யில் நேரத்தில் விளையாடக்கூடிய விளையாட்டாகும். முன் ஆட்டம் போலவேதான் ஆடுகள அமைப்பும் பிறவும்.

எல்லோரும் ஆடுகள எல்லைக்குள்ளே நின்றுகொண்டிருக்க, விரட்டித் தொடுபவராக ஒருவர் மட்டும், ஆடுகள எல்லைக்கு வெளியே நிற்பார்.

ஆடும் முறை:

அனைவரும் ஆடுகளத்தினுள் நிற்கும் பொழுது, அவர்களின் நிழல் தரையில் விழுமே, அந்த நிழலை முழுதும் அல்லது அதில் ஒரு பகுதியையாவது விரட்டித் தொடுவோர் மிதித்தால், அந்த நிழலுக்குரியவர் தொடப்பட்டதாகக் கருதப்படுவார்.

தொடப்பட்டவர் நிழல் தொடும் ஆளாக மாறி விரட்ட, ஆட்டம் மீண்டும் தொடரும்.

குறிப்பு:

என் நிழலை மிதிக்கவே இல்லை என்று யாரும் வாதாடவோ வழக்குரைக்கவோ கூடாது. ஆட்டத்தை நடத்துகின்றவர் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.