கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பிடி ஆட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12. பிடி ஆட்டம்

அமைப்பு:

முன் ஆட்டத்தைப் போலவே, ஒரு பெரிய வட்டம் போட்டு, அதைச் சுற்றி அனைவரும் நிற்கவேண்டும். அந்த வட்டத்தின் மையத்தில், பந்துடன் ஒருவரை நிற்கச் செய்ய வேண்டும். வட்டத்தில் நிற்கும் ஒருவரிடமும் இன்னொரு பந்து இருக்கும்.

ஆடும் முறை:

நடுவில் நிற்பவர் தன்னிடமுள்ள பந்தை பந்து வைத்திருக்கும் எதிர்ப்புறமுள்ளவரிடம் எறிய வேண்டும், அதே சமயத்தில் வட்டத்தில் நிற்பவரும், நடுவில் உள்ளவரை நோக்கி எறிய வேண்டும்.

தான் எறிகிறபொழுதே எதிர் வருகின்ற பந்தைக் கீழே நழுவவிடாமல், பிடித்துக் கொள்கின்ற வரையில்தான் அந்த நடுவில் நிற்கும் ஆட்டக்காரர் வட்டத்தின் மையத்தில் நிற்கவேண்டும். பந்தைப் பிடிக்காமல் தவற விடுகிறவர். நடு இடத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

பிறகு, வேறொருவர் அதாவது இன்னொரு பந்தை வைத்திருப்பவர், நடு இடத்திற்கு வருவார். அவரும் ஒரு இடத்திலிருந்து, பந்தை எதிரே இருப்பவரிடம் எறிந்து, பிறகு ஒவ்வொருவராக மாற்றி மாற்றி எறிந்து பிடிக்க வேண்டும்.

இதுபோல், கடைசிவரை, கீழே விடாமல் பந்தைப் பிடித்துக் கொண்டிருப்பவரே, இறுதியில் வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு:

பந்தை எறியும் போது, ஒழுங்காக, ஆள் இருக்குமிடம் பார்த்தே எறியவேண்டும். தாறுமாறாக எறிபவரும், எதிரில் பிடிப்பவர் பந்தைக் கீழே விழவிட்டு விடவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் தன் விருப்பம் போல் வேண்டுமென்றே விளையாடுவோரையும் உடனே ஆட்டத்தைவிட்டு வெளியேற்றி விட வேண்டும்.