கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வண்டி சக்கரப் போட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

81. வண்டி சக்கரப் போட்டி

நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாக முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அந்த நான்கு குழுக்களையும் எதிரெதிராக நிற்பது போல், ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கச் செய்ய வேண்டும்.

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக நிற்பவரிடம் ஒரு பந்து இருக்கும். போட்டித் தொடங்க விசில் ஒலி எழும்பும்.

விசில் ஒலி கிளம்பியதும், பந்து வைத்திருக்கும் முதலாட்டக்காரர் தன் பின்னால் உள்ளவரிடம் பந்தைத் தலைக்கு மேலே வழங்கி, இவ்வாறு பந்து கை மாறி மாறி, குழுவில் கடைசியாக நிற்பவரிடம் போய் சேரும்.

பந்தைப் பெற்ற கடைசி ஆள், பந்துடன் மூன்று. குழுவிலிருக்கும் கடைசி ஆட்டக்காரர்களின் பக்கமாகச் சுற்றி ஓடி வந்து, தன் குழுவிலுள்ள முதலாளுக்கு முன்னாள் நின்று, பந்தை முன் போலவே, தலைக்கு மேலேயே பின்புறமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு பந்து கைமாறி, எல்லா ஆட்டக்காரருக்கும் சுற்றி ஓடி வருகின்ற வாய்ப்புக் கிடைத்த பிறகு, முதலாவது நின்ற ஆட்டக்காரருக்கும் ஓடிவருகின்ற வாய்ப்புக் கிடைத்த பிறகு, முதலாவது நின்ற ஆட்டக்காரரும் ஓடி முடித்ததும், அந்தக் குழு அப்படியே உட்கார்ந்துவிட வேண்டும்.

குறிப்பு: வேகமாக பந்து ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கைமாறும்பொழுது, ஒவ்வொருவரும் பந்தைத் தான் வாங்கிய பிறகே பின்புற ஆட்டக்காரருக்கு வழங்க வேண்டும். -

யார் பந்தைத் தவற விடுகின்றாரோ, அவரே பந்தை எடுத்து வந்து மீண்டும், ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

முதலில் ஓடி முடித்து, உட்கார்ந்த குழுவே வென்றதாகக் கருதப்படும்.