கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வாயே துணை!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

96. வாயே துணை!

ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், குழுக்களை வரிசையாக நிறுத்த வேண்டும் (File).

வரிசையாக நிற்கும் குழுக்களுக்கு எதிர்ப்புறத்தில், அவர்கள் வாய்க்கு எட்டும் தூரத்தில் ரொட்டித் துண்டுகளை நூல் கயிற்றிலே கட்டித் தொங்க விட்டிருக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு ரொட்டி வீதம், குழுவில் ஆட இருக்கின்ற அத்தனை பேருக்கும் அத்தனை ரொட்டிகள் இருக்க வேண்டும்.

போட்டித் தொடங்கியதும், குழுவில் உள்ள முன்னாட்டக்காரர் ஓடி, ரொட்டிக்கு அருகில் வந்தவுடன், கைகள் இரண்டையும் பின்புறமாகக் கட்டிக் கொண்டு வாயினாலேயே முழு ரொட்டியையும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி தன்னிடத்திற்கு வந்து அடுத்தவரைத் தொட்டு அனுப்பிவிட்டுக் குழுவின் பின்னால் சென்று நின்று கொள்ள வேண்டும்.

அந்தக் குழுவுக்குரிய அத்தனை ரொட்டிகளையும் ஆளுக்கு ஒன்றாகச்சாப்பிட்டு முடித்து. முன்னால் ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது.

எக்காரணத்தை முன்னிட்டும் கைகள் பயன்படக் கூடாது. வாய்தான் துணையாகும்.