கேள்வி நேரம்/1

விக்கிமூலம் இலிருந்து



இடம் : குன்றக்குடி

கேள்வி கேட்பவர் : ரா பொன்ராசன்

பங்கு பெறுவோர் :

ரா. கார்த்தியாயினி, மா. ராஜாத்தி
மோ. ராஜேஷ், க. பழனிவேல்.

3085-1

பொன்ராசன்: பிள்ளைத் தமிழ் என்றால் என்ன, தெரியுமா?

ராஜேஷ்: ஒ. தெரியுமே! எங்களைப் போன்ற பிள்ளைகளுக்காக எழுதப்படும் தமிழ்தானே?

பொன்: இல்லை, இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

பழனிவேலு : 'பிள்ளைத் தமிழ்' என்றால் கடவுளைப் பிள்ளையாக வைத்துப் பாடியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்பதுகூட அப்படிப்பட்டதுதானே?

பொன் : ஆமாம். கடவுளைப் பற்றி மட்டுமல்ல; தங்களுக்கு விருப்பமான அரசர்கள், தலைவர்களைப் பற்றிக்கூடக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 'கம்பன் பிள்ளைத் தமிழ்', 'காந்தி பிள்ளைத் தமிழ்' என்றெல்லாம் பல பிள்ளைத் தமிழ் நூல்கள் உண்டு. சரி, தமிழில் முதலாக வெளி வந்த நாவல் எது? அதை எழுதியவர் பெயர் என்ன?

ராஜேஷ் : பிரதாப முதலியார் எழுதிய வேத நாயகம் பிள்ளை சரித்திரம்.

கார்த்தியாயினி : ஐயையோ! ராஜேஷ் மாற்றிச் சொல்லிவிட்டானே! வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பதுதானே சரியான விடை?

பொன் : ஆமாம். கார்த்தியாயினி சரியாகச் சொல்லிவிட்டாள்...காந்தி திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் அமிர்தசரசிலுள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்களே, அதில் சுமார் எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? எத்தனை பேர் காயம் அடைந்திருப்பார்கள்?

பழனி : 400 பேர் இறந்திருப்பார்களா?

ராஜாத்தி: சமீபத்தில் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். 379 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 1200 பேர் காயமடைந்ததாகவும் அதில் எழுதியிருந்தது.

பொன்: சபாஷ் ராஜாத்தி, படித்ததை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாயே!... சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடக்கும் ஸ்டேடியத்தின் பெயர் தெரியுமா?

ராஜேஷ்: எனக்குத் .தெரியும். சிதம்பரம் ஸ்டேடியம்.

பொன்: கரெக்ட். சென்னைப் பல்கலைக் கழகத்திற்குப் பக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில்தான் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடைபெறுகின்றன. உலகிலேயே அதிகமான பன்றிகள் உள்ள தேசம் எது?

ராஜேஷ் : சீனாதான்.

பொன் : ராஜேஷ் மிகவும் சரியாகச் சொல்லி விட்டான். சீனா தேசத்தில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை 8 கோடி என்கிறார்கள்!...தமிழ் நாட்டிலே முதல் முதலாகக் கதர் பிரசாரம் செய்தவர் யார்?

கார்த்தியாயினி : ராஜாஜி

பொன் : இல்லை.

பழனி ஈ. வெ. ராமசாமிப் பெரியார்.

பொன் : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே..! இந்தியாவிலே பனை மரங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களைக் கூற முடியுமா?

ராஜாத்தி நமது தமிழ்நாட்டில்தான் நிறையப் பனை மரங்களைப் பார்க்கிறோமே?

பொன் , தமிழ்நாட்டில் மட்டும்தானா? இன்னும் இரண்டு மாநிலங்களிலும் நிறையப் பனை மரங்கள் இருக்கின்றனவே!  9

கார்த்தியாயினி : ஆந்திர மாநிலம்.... அப்புறம். அப்புறம்...

பொன் : மேற்கு வங்காளத்திலும் அதிகமான பனை மரங்களைக் காணலாம். சரி... இதோ இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?

பழனி: பெர்னார்ட்ஷா.

பொன் : இல்லை, நம் இந்தியாவின் தலைசிறந்த தேச பக்தர்களில் ஒருவர். ’சுயராஜ்ஜியம்’ என்ற சொல்லை முதல் முதலாகப் பயன்படுத்தியவர்... இன்னுமா தெரியவில்லை?

கார்த்தியாயினி : தாதாபாய் நெளரோஜி.

பொன்: சரியான விடை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு முதல் முதலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற இந்தியர் இவர்தான். 1906-ஆம்

ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது, "நாங்கள் ஆங்கிலேயரிடத்தில் பிச்சை கேட்கவில்லை; உரிமையைத்தான் கேட்கிறோம்” என்று முழங்கினார். பழைய டில்லியில் யமுனை ஆற்றங்கரையில் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. அதன் அருகிலே வேறு இரு தலைவர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அந்தத் தலைவர்கள் யார், யார்?

பழனி: நேரு மாமா, இன்னொருவர்...

ராஜாத்தி : லால் பகதூர் சாஸ்திரி.

பொன்: இருவரும் சேர்ந்து சரியான விடையளித்து விட்டீர்கள். குடல் காய்ச்சல்” என்றால் என்ன?

பழனி: என்ன! குடல் காய்ச்சலா!

பொன்: ஆம், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அப்படித்தான் சொல்கிறார்கள். குடலை அதிகமாகப் பாதிக்கும் காய்ச்சலாதலால்...

ராஜாத்தி: தெரியும், தெரியும். டைபாய்டு காய்ச்சல்தான்.

பொன் : ரொம்ப சரி, உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?

பழனி : ஜப்பானில்

பொன் : இல்லை.

ராஜேஷ் : அமெரிக்காவில்

பொன் . அதுசரி, அமெரிக்காவில் எந்த நகரத்தில்...?

ராஜேஷ் : நியூயார்க் நகரத்தில்.

பொன்: சரியாகச் சொன்னாய், நியூயார்க்கில் கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல்’ என்ற ரயில்வே ஸ்டேஷனில் 47 பிளாட்டாரங்கள், 67 ரயில்வே தடங்கள் இருக்கின்றன. பரப்பளவு 48 ஏக்கர்!... திருக்கொடுங்குன்றம்’ என்ற ஊர்ப் பெயரை உங்களில் யாராவது கேள்விப்பட்டதுண்டா?

பழனி: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரான் மலைக்கு அப்படி ஒரு பெயர் உண்டாம்.

பொன்: அடே, சரியாகச் சொல்லிவிட்டாயே! அங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். மிளகாயை நம் நாட்டில் பரப்பியவர்கள் யார்?

ராஜேஷ் : ஆங்கிலேயர்.

ராஜாத்தி : இல்லை. போர்த்துகீசியர்கள் தான்

பொன்: சரியான பதில். மிளகாய் வருவதற்கு முன்பு, நம் நாட்டில் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்... டில்லியில் நடந்த

ஒன்பதாவது ஏஷியாட்டில் இந்தியா பெற்ற மொத்தப் பதக்கங்கள் எத்தனை?

பழனி : தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் இரண்டையும் சேர்த்துச் சொல்ல வேனுமா?

பொன் : வெண்கலப் பதக்கத்தை விட்டு விடலாமா? தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையும் சேர்த்துச் சொல்லுங்கள்

பழனி : தங்கப் பதக்கங்கள் 13 வெள்ளி 19, வெண்கலம் 25. ஆக மொத்தம் 57.

பொன்: அடே! இல்வளவு சரியாகச் சொல்கிறாயே! சரி. ஆடிப்பெருக்கு என்கிறார்களே, அதுபற்றித் தெரியுமா?

ராஜாத்தி : ஆடிமாதம் முதல் முதலாக ஆறுகளில் நீர் பெருகி வருமே, அதைத்தான் ஆடிப் பெருக்கு என்கிறார்கள் . பொன் : ஆமாம். ஆடி 18-ம் தேதி அதை விழாவாகக் கொண்டாடுவதால், பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்... மகா பாரதத்தை முதன் முதலில் யார் எந்த மொழியில் எழுதினார்?

கார்த்தியாயினி: . வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதினார்.

பொன்: சரியான விடை அதைத் தழுவித் தமிழில் யார் யார் எழுதினார்கள்?

கார்த்தியாயினி: வில்லிபுத்துராழ்வார்.

ராஜேஷ்: . பெருந்தேவனாரும் எழுதியிருக்கிறார்.

பொன்: இன்னொருவரும் எழுதியிருக்கிறார். அவர் பெயர் கல்லாப்பிள்ளை...சில அழைப்பு களின் அடியில் R. S. V. P. என்று போட்டிருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?

அதற்கு என்ன பொருள்?

எல்லாரும் : மெளனம்.

பொன் : தெரியவில்லையா? நானே சொல்கிறேன். 'முடிந்தால் தயவு செய்து பதிலளிக்கவும்' என்றுதான் அர்த்தம், ஆனால், இது Repondez S’il Vous Plait என்ற பிரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம்தான்! ... சமீபத்தில் நான் ஒரு கதை படித்தேன். ”அமாவாசை

இரவிலே ஒரு சிறுவன் விளக்கில்லாமல் சைக்கிளில் செல்கிறான். எதிரே ஒருவர் ஒற்றை மாட்டு வண்டியை மிக மெதுவாக ஒட்டி வருகிறார். வேறு ஆட்களோ, கார், வண்டிகளோ அந்தச் சாலையில் இல்லை. இருட்டிலே எதிரே வண்டி வருவது தெரியாமல் அவன் சைக்கிளை ஒட்டிச் செல்கிறான். நல்ல வேளையாக, வண்டிக்குச் சிறிது துரத்தில் செல்லும்போதே, மாட்டின் கண்களில் பளபள என்ற ஒளி தெரிகிறது. அதைக் கண்டு, அவன் சைக்கிளை ஒர் ஒரமாக ஒட்டித் தப்பித்துக் கொள்கிறான் 'இப்படி அவர் எழுதியிருப்பதில் ஒரு தவறு. இருக்கிறது. கண்டுபிடிக்க முடியுமா?

பழனி: இருட்டிலே மாட்டின் கண்களிலே எப்படி ஒளி தெரியும்? அதன் முகத்திலே ஒளி பட்டால்தானே, கண் பளபளப்பாகத் தெரியும்? அங்குதான் வெளிச்சம் படுவதற்கு வழியே இல்லைய

பொன்: அடேடே! மிகவும் நன்றாகச் சொன்னாய். இரவிலே மாட்டின் கண்களில் தானாக ஒளி தெரியாது. ஏதேனும் வெளிச்சம் பட்டால், பளபளப்பான அதன் கண்களில் ஒளி பிரதிபலிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/1&oldid=494065" இலிருந்து மீள்விக்கப்பட்டது