கேள்வி நேரம்/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இடம் : தேனி, மதுரை மாவட்டம்

கேள்வி கேட்பவர் : தேனி முருகேசன்

பங்கு கொள்வோர் :

எம். கார்த்திகேயன், டி. சசிகலா, எல். லிங்கராஜ்

தேனி முருகேசன்: என் அரசியல் வாரிசு' என்று மகாத்மா காந்தி ஒருவரைப் பற்றிச் சொன்னார். அந்த ஒருவர் யார்?

சசிகலா: நேரு மாமாதான்.

தேனி : பேஷ்! என் முதல் கேள்விக்கே சரியான விடை கிடைத்துவிட்டது சரி, இராமேஸ்வரத்திலுள்ள சுவாமி பெயர் இராமலிங்கம். இராமநாத சுவாமி என்றும் சொல்கிறார்கள். அம்மன் பெயர் தெரியுமா?

கார்த்திகேயன் : பர்வதவர்த்தினி.

தேனி: சரியாகச் சொன்னாய். கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) என்ற கதையை எழுதியவர் யார் ?

லிங்கராஜ்: எச். கிருஷ்ணமூர்த்தி.

கார்த்தி: ஐயையோ! அந்தக் கிருஷ்ணமூர்த்தி . கோகுலம் இதழில் உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகளைத் தமிழிலே சுருக்கித் தருபவ.

ரல்லவா? ஆனால், ஆங்கிலக் கதையை எழுதியவர். கோகுலத்தில்கூடப் படித்தேனே!..ம்...ம். ஸ்விப்ட் என்பவர்தான்.

தேனி: அவரது முழுப் பெயர் தெரியாதா?

கார்த்தி: இதோ சொல்கிறேன். சோமநாதன். இல்லை, இல்லை. ஜொனாதன் ஸ்விப்ட், சரிதானே அண்ணா?

தேனி: ரொம்ப கரெக்ட். Jonathan Swift என்பவர்தான் கலிவரின் பயணங்களை எழுதினவர்...இலங்கைக்கு சிறீலங்கா என்று புதிய பெயர் சூட்டியது எப்போது என்று கூற முடியுமா?

லிங்க : அது குடியரசு நாடானபோது.

தேனி: சரியான விடை. 1972-ஆம் ஆண்டில் அது குடியரசானது. அப்போது சிறீலங்கா என்று பெயர் சூட்டினார்கள்...நம்முடைய ராஜாஜி, பெரியார் இருவரும் 94 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்களைப் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தார் ஒர் ஆங்கில நாடக ஆசிரியர். அவர் பெயர் தெரியுமா?

சசி : ஷேக்ஸ்பியர்.

தேனி: இல்லை. அவர் 52-ஆம் வயதிலேயே காலமாகி விட்டார். கார்த்தி: பெர்னாட் ஷா,

தேனி: ஆம், 50-க்கு மேற்பட்ட ஆங்கில நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தான் 94 ஆண்டுகள் வாழ்ந்தவர். சரி, அவர் எந்த ஊரில் பிறந்தார்.

கார்த்தி : லண்டனில்.

தேனி: தவறு. லிங்க : அயர்லாந்தில்.

தேனி அவர் பிறந்தது அயர்லாந்து நாட்டில்தான். ஆனால், நான் கேட்டது எந்த ஊரில் என்றல்லவா?

எல்லோரும் : (மெளனம்)

தேனி: சரி, நானே சொல்லி விடுகிறேன். அவர் பிறந்தது அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில்... ஒரிசா மாநிலத்தின் இப்போதைய தலைநகரம் புவனேஸ்வரம். முன்பு எது தலைநகரமாக இருந்தது?

லிங்க : கட்...

தேனி : என்ன, பாதியிலே கட் பண்ணி விட்டாயே! முழுப் பெயர் நினைவுக்கு வரவில்லையோ?

லிங்க : இதோ வந்து விட்டது. கட்டாக்.

தேனி: சரியான விடை... இந்தியாவின் வாயில் (Gate way of India) என்று எந்த நகரத்தைச் சொல்கிறார்கள்?

கார்த்தி : டில்லி,

லிங்க : இல்லை. கல்கத்தா,

தேனி : இரண்டுமே தவறு

சசி ; பம்பாய்.

தேனி: பம்பாய் என்பது சரிதான். ஆனால், ஒவ்வொரு நகரமாகச் சொல்லிக்கொண்டே வருவது சரியில்லையே வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பம்பாய் மையமாக விளங்கு வதால், அதை இந்தியாவின் வாயில் என்று கூறினார்கள். பொருத்தம்தானே!... நேப்பாளத்தின் தேசியச் சின்னம் எது?

லிங்க : எருமை.

தேனி : இல்லை

கார்த்தி : மாடு

தேனி : இல்லை. சசி, உனக்குத் தெரியுமா...? சரி, நானே சொல்கிறேன். சிவபெருமானின் உருவம் பொறித்த முத்திரைதான் நேப்பாளத்தின் தேசியச் சின்னம்... திரு வி. க. இரண்டு கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருந்தார். இரண்டாவதாக இருந்தது சென்னை வெஸ்லி கல்லூரியில். முதலில் எந்தப் பள்ளியில் வேலை பார்த்தார், தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

தேனி : யாருக்குமே தெரியாதா? அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒர் ஆதித் திராவிடர் பள்ளியில்தான் முதல் முதலாக ஆசிரியர் வேலை பார்த்தார். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இது என்ன என்று தெரிகிறதா?

சசி : உடுக்கு.

தேனி: இல்லை. நன்றாகப் பாருங்கள்.

கார்த்தி : மணற் கடிகாரம்.

தேனி: அடே, கார்த்திக் சரியாகச் சொல்லி விட்டானே! முற்காலத்தில் நிழற் கடிகாரம், நீர்க் கடிகாரம், மெழுகுவர்த்திக் கடிகாரம் என்று பல வகைக் கடிகாரங்கள் இருந்தன. அவற்றிலே ஒன்றுதான் இது. இந்தக் கண்ணாடிப் பாத்திரம் உடுக்கைப் போல் இருக்கிறது மேலே ஒரு கூம்பு, கீழே ஒரு கூம்பு, இரண்டையும் இணைக்கும் இடம் மிகவும் குறுகலாக இருக்கிறது. மேல் கூம்பிலே உலர்ந்த மணலைக் கொட்டி வைப்

பார்கள். அது ஒரே சீராகக் கீழே உள்ள கூம்பில் விழும். விழுகின்ற மணலின் அளவைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டார்கள்... இப்போது காண்டா மிருகத்தைப் பற்றி ஒரு கேள்வி, அது இவ்வளவு பருமனாக இருக்கிறதே, அது எந்த மிருகத்தை விரும்பிச் சாப்பிடும்?

சசி: ஐயோ, அது மாமிசத்தையே தொடாதே! புல், பூண்டு, தழைகளைத்தான் தின்னும்.

தேனி : சசிகலா சரியாகச் சொன்னாள். சென்னையில் கன்னிமாரா நூல் நிலையம்' என்று ஒரு பெரிய நூல் நிலையம் இருக்கிறதே, இதற்கு இப்பெயர் எப்படி வந்தது?

கார்த்தி : வெள்ளைக்காரர்கள் கன்னி மேரி நூல் நிலையம்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அதுதான் கன்னிமாரா' என்று. மாறிவிட்டது.

தேனி: விடை தவறு. ஆனால் நல்ல கற்பனை. சசி, லிங்கராஜ், உங்களுக்குத் தெரியுமா?

இருவரும் : தெரியாது.

தேனி : கன்னிமாரா என்ற ஆங்கிலேயர் சென்னையில் கவர்னராயிருந்தார். அவர் பெயரால் 1896ல் தொடங்கப்பட்டதுதான் கன்னிமாரா நூல் நிலையம்'...இப்போது சில அரசியல் தலைவர்கள் நெடுந்தூரம் பாத

யாத்திரை போகிறார்கள். இமய முதல் குமரி வரை நடந்தே சென்று, தம் குருநாதரின் உபதேசங்களைப் பரப்பினார் ஒருவர். அவர் யார்?

லிங்க : சுவாமி விவேகானந்தர்.

தேனி: சரியான விடை, சுவாமி விவேகானந்தர், தம் குருவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களை அப்படித்தான் பரப்பினார்... ரஷ்யர்கள் ஸ்புட்னிக்-2 என்ற செயற்கைக் கிரகத்தில் ஒரு நாயை வைத்து அனுப்பினார் களே, அதன் பெயர் தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

தேனி: என்ன, ஒருவருக்குமே தெரியாதா! அதன் பெயர் லைக்கா. அது பத்திரமாகப் பூமிக்குத் திரும்பி வந்ததால், பிறகு ஒரு மனிதரையே விண்வெளியில் அனுப்பினார் கள். அந்த மனிதர் பெயராவது தெரியுமா?

கார்த்தி : ககாரின்

தேனி: ரொம்ப சரி, யூரி ககாரின் என்ற ரஷ்யர்தான் விண்வெளிக் கலத்தில் முதல் முதலாகச் சென்று பத்திரமாகத் திரும்பி வந்தவர். வாஸ்கோட காமாவைப் பற்றி, வரலாறு படிக்கும்போது நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் எங்கே இறந்தார் என்று தெரியுமா?

லிங்க : கொச்சி நகரில்.

தேனி: அடடே, அதையும் வரலாற்று நூலிலே படித்து நினைவில் வைத்திருக்கிறாய் போலிருக்கிறது! ரொம்ப நல்லது...நம் தேசத் தலைவர்களில் ஒருவர் வழக்கறிஞராக இருந்தார். அவருடைய தந்தையும் வழக் கறிஞராயிருந்தார். இருவரும் ஒரு சமயம் எதிர் எதிராக நின்று வழக்காடினார்கள். அதில் மகன் வெற்றி பெற்றார். அந்தத் தலைவர் பெயர் என்ன? அவர் தங்தை பெயர் என்ன?

சசி: ஜவாஹர்லால் நேருவும் அவரது தந்தை மோதிலால் நேருவும்.

தேனி: இல்லை.

கார்த்தி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் தந்தை பெயர் தெரிய வில்லை.

தேனி : மகன் பெயரைச் சரியாகச் சொல்லி விட்டாய். தந்தையார் பெயர் உலகநாத பிள்ளை சதுரங்க ஆட்டத்திற்கான பலகையில் மொத்தம் எத்தனை கட்டங்கள் இருக்கின்றன?

கார்த்தி: 32.

தேனி: தவறு.

லிங்க : 64.

தேனி: கரெக்ட். இந்த ஆட்டத்தை இருவர் ஆடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தனித்தனியாக எத்தனை காய்கள் இருக்கும்?

கார்த்தி : 16

தேனி : ரொம்ப கரெக்ட். அரசர்.1, அரசி அல்லது அமைச்சர்-1, யானை 2, தேர்.2, குதிரை-2, காலாட்கள் 8 ஆக 16 காய்கள்... நாம் நம் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ல் கொண்டாடுகிறோம். இதேபோல் இன்னொரு நாடும் அதே தேதியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. அந்த நாடு எது?

லிங்க : தென் கொரியா,

தேனி: சரியான விடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/7&oldid=494077" இருந்து மீள்விக்கப்பட்டது