சங்க இலக்கியத் தாவரங்கள்/026-150
Appearance
குருகிலை
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)
“குருகிலை மருதம் விரிபூங்கோங்கம்” என்றார். கபிலர் (குறிஞ்: 73). ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். சங்க நூல்களில் வேறுயாண்டும் இதனைப் பற்றிய செய்தி இல்லை. எனினும் குருகிலை, திணை மொழி ஐம்பது, கார் நாற்பது என்ற கீழ்க்கணக்கு நூல்களில்தான் பேசப்படுகிறது.
இவற்றால் இதனைப் பற்றி அறியக் கூடியவை :
- குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்
- இது முல்லை நிலத்தது .
- இது கார் காலத்தில் பூப்பது
- இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.