சந்திரமோகன்/அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
Appearance
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்:
சி. என். அண்ணாதுரை
தோற்றம் | — | 15-9-1909 |
தந்தை | — | நடராசன் |
தாய் | — | பங்காரு அம்மாள் |
பிறந்த ஊர் | — | சின்ன காஞ்சிபுரம் |
வாழ்க்கைத்துணை | — | இராணி அம்மையார் |
புனையெர் | — | சௌமியன், சமதர்மன், சம்மட்டி ஒற்றன், ஆணி, பரதன் |
1929 - 1934 | — | சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்பிடிப்பு |
11-2-1934 | — | முதல் சிறுகதை கொக்கரகோ ஆனந்த விகடனில் வெளிவந்தது |
1-2-1936 | — | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு |
1936 | — | சென்னை மாநகராட்சி தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல். |
11-4-1937 | — | நீதிக்கட்சி செயற்குழ உறுப்பினராதல் |
1937 | — | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி |
9-12-37 | — | முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில் |
26-9-38 | — | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல் |
13-1-39 | — | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை |
18-1-39 | — | தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல் |
10-2-39 | — | சென்னை கிறுத்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் |
6-1-40 | — | பம்பாயில் பெரியார் அம்பேத்கார் உரையாடல்: மொழிபெயர்ப்பு |
2-6-40 | — | காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு |
7-3-42 | — | திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம். |
14-3-43 | — | சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமயணச் சொற்போர் |
5-6-43 | — | 'சந்திரோயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். |
19-8-44 | — | சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு— அண்ணாதுரை தீர்மானம்— நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். |
15-12-45 | — | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடக அரங்கேற்றம் அண்ணா நடித்தல். |
மே 1946 | — | கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு |
29-7-46 | — | நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் |
25-4-47 | — | வேலைக்காரி நாடகம் |
1-6-47 | — | நீதிதேவன் மயக்கம் நாடகம். |
15-8-47 | — | ஆகஸ்டு பதினைந்து 'விழாநாளே' என விளக்கம் தருதல். |
28-9-47 | — | தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை — 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்'. |
14-1-48 | — | 'நல்ல தம்பி' திரையிடல். |
18-6-49 | — | தந்தை பெரியார் மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். |
10-8-49 | — | 'மலைமணி'—நாளிதழ் ஆசிரியர். |
17-9-49 | — | தி.மு.க தோற்றம் |
18-9-49 | — | திராவிட நாடு இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்.எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை |
12-1-50 | — | நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல் |
1950 | — | திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல் |
1951 | — | 'ஆரியமாயை' நூலுக்குத் தடை |
17-9-51 | — | திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்த |
16-12-1951 | — | தி.மு.க. முதல் மாநில மாநாடு. |
1-8-52 | — | சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் |
15-6-53 | — | 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம் |
13-7-53 | — | மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை |
2-2-56 | — | தேவிகுளம் பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம் |
29-4-57 | — | தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். |
9-6-57 | — | ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் |
2-3-58 | — | தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல். |
24-4-59 | — | அண்ணாவின் தம்பியார் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்ந்த |
1-8-60 | — | இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை |
1962 | — | சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை |
26-2-52 | — | சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஜம்பதின்மர் செல்ல,அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல். |
2-8-62 | — | விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம். |
17-11-63 | — | கட்டாய இந்தி-17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல் 16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல். |
1-3-67 | — | தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல். |
14-4-67 | — | 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல். |
10-1-68 | — | இராண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல் |
8-9-68 | — | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல் |
4-1-69 | — | கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு. |
2-2-69 | — | புகழ் உடம்பெய்தல். |