சாத்தன் கதைகள்/6. விசாகை

விக்கிமூலம் இலிருந்து

6. விசாகை

அகத்தியரை வேண்டிக் காவிரியாற்றைக் கொண்டு வந்த காந்தன் எனும் சோனட்டுக் காவலன், வேந்தர் குலத்தை வேரறுப்பேன் என வஞ்சினம் உரைத்துவரும் பரசுராமனுக்கு அஞ்சி கன்னித் தெய்வத்தின் கட்டன் யேற்று ஆட்சிப் பொறுப்பைத், தன் காதற்கணிகையீன்ற மகன் ககந்தன்பால் ஒப்படைத்து மறைந்துவிட்டான். காவிரிப்பூம்பட்டினத்தைக் ககந்தன் காத்துவந்தான். அக்காலத்தில் அவ்வூரில், வேந்தரும் மருளும் வளங் :கொழிக்கும் வணிகர் குடியில் தருமதத்தன் எனும் இளைஞன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் மாமனுக்கு விசாகை எனும் பெயர்பூண்ட மகள் ஒருத்தி யிருந்தாள். விசாகை வனப்பில் மிகுந்தவள்; அன்பையும் அருளேயும் அள்ளி வீசும் அவள் கண்ணுெளி.

தருமதத்தனும், விசாகையும் ஒத்த பருவத்தினர்; ஒருவரையொருவர் மணக்கும் முறைமையும் உடையவர்; மேலும் உளம் ஒன்று உடல் இரண்டு என உரைக்குமாறு ஒன்று கூடி விளையாடும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர் அழகுத் திருவுருவம் அவ்வூரார் கண்களைக் கவர்த் தது. அதன் விளைவு, தருமதத்தனும் விசாகையும் கன்னிப் பருவத்தைக் கடந்தனர்; காதல் மணங்கொண்டு களவின் பத்தில் ஆழ்த்துவிட்டனர்' என ஊரில் அலர் எழுத்து பரவிற்று.

தன் மனத்துய்மைக்கு மாசுகற்பித்து ஊரார் உரைம் அதை விசாகைகேட்டாள். மானமே உயிர் என மதிக் கும் மாண்பு மிகுந்தவள் அம்மங்கை நல்லாள். அவுளால் 106

அவ்வலருரையைக் கேட்டு வாளாயிருக்க முடியவில்லை; ஒவியத்து எழுதுவொண்ணு வுருவத்தினளாய் அவள் அவ்வுரை கேட்டதுமே வீட்டைவிட்டு வெளிப்பட்டாள்; விரைந்து ஊரம்பலம் அடைந்தாள்; கந்திற்பாவை முன் சென்ருள். வருபொருள் உரைக்கும் பெரும் புகழ்மிக்க பாவாய்! என் ஒழுக்கத்தை உலகோர் பழிக்கின்றனர்; நான் அதைப்பொறேன்; எனக்கு நேர்ந்த அவ்விழிவைப். போக்குதல் உன் கடன். பழி போக்கிப் பேணும். வண்ணம், பாவாய்! நின்னைப் பணிகிறேன்; பரவுகிறேன்” என முறையிட்டு நின்ருள். -

விசாகையின் வேண்டுகோள் கந்திற்பாவையின் காதுகளிற் சென்று பாய்ந்தது. உடனே அப்பாவை வாய் திறந்து, விசாகையைப் பின்தொடர்ந்து வந்து, ஊரம்பலத்தின் முன் குழுமி நிற்கும் மாநகர்மக்கள் கேட்கு மாறு, 'மா நகர் உள் ளிர், இம்மங்கை மனமா சுடையாளல் லள்; மாருக, மழையையும் மண்ணுலகிற்குக் கொண்டு வரும் மாபெரும் கற்புடைய கன்னியாவள்’ எனத் தன் நான்ால், அவளை நாவாசப் புகழ்ந்தது. அதுகேட்டு அவள் பால் கொண்ட ஐயம் நீங்கி அவளைப் போற்றினர் அவ்: ஆரார். - -

பரவையால் பழி நீங்கப்பெற்ற விசாகை, பலர் சூழ்ந்து வர, தன் மனநோக்கி மாநகர் வீதியில் சென்று கொண் டிருந்தாள். அப்போது அவள்முன் வந்த மன்னனின் மூத்தமகன் அவளைக் கண்டான். அவள் ஒழுக்கம் கெட்டவள் என ஊரார் பண்டு உரைத்த சொல்லைக் கேட்பவன் அவன், ஊரம்பலம் ஏறி, தான் உள்மாசு அற்றவள் என்பதை ஊரறிய உணர்த்தி வருகிருள் श्रवृद्ध த அவன் அறியான் ம்ேலும் அவன் உள்ள்ம் 107

ஆசைக் கடலில் ஆழ்ந்து கருத்திழந்து கிடந்தது: அதல்ை விசாகையை, வனப்புமிக்க அவள் வடிவைக். கண்ணுற்றதும், காவலன் மகனுக்கு வெறி தலைக்கேறி, விட்டது. அவளை அணுகினன். 'மலர்மாலை சூட்டி மணங்கொள்வதும், ஒரு மனமுறையாம்; பண்டையோர்: பாராட்டிய பெருமையும் அம் முறைக்கே உண்டு; விசாகை! அம்முறையில் மணந்து கொள்ள விரும்பு கிற்ேன்” எனக் கூறியவாறே, அவள் கழுத்தில் சூட்ட, கறுத்துத் திரண்ட தன் குடுமியில் கிடந்த மலர் மாலை யைக் கழற்றக் கைகளைக் கொண்டு சென்ருன். அவ்வளவே. சென்ற கைகள் சென்றனவே. எவ்வளவு, முயன்றும், எத்தனை முறை முயன்றும், எடுக்க முடிய வில்லை; குடுமியோடு குடுமியாக ஒட்டிக்கொண்டன. செய்தி ஊர்முற்றும் சென்று பரவிற்று. காவலன் அதைக் கேட்டான். தன் மகனின் ஒழுக்கக்கேட்டை உணர்ந்: தான். மகன் படும் துயர் மன்னவன் மனத்தை உறுத்த. வில்லை. மங்கை யொருத்திக்கு மனத்துயர் அளித்து. தன் ஆட்சிக்கு மாசுண்டாக்கியமாபெரும் பழியே அவன் மனத்திரையில் படிந்தது, ஊர்க்காவலரை அனுப்பி, மகனைக் கொலேக் களத்திற்குக் கொண்டு வாளால் வெட்டி வீழ்த்தின்ை. -

மாநகர் மக்கள் கற்பித்துக்கூறிய மாசுரை கேட்டே மனங்கலங்கிய விசாகை, மன்னன் மகனின் செயல். கண்டு மேலும் கலங்கிள்ை; அவள் மனம் மணவாழ்க் கையை வெறுத்தது. தெய்வம் துணை வந்தில்தாயின், என்பால் இவ்வூரார்கொண்ட மாசு தீர்ந்திராது. ஆகவே, மணவாழ்க்கை வேண்டேன் என மனத்தில் உறுதி பூண் டாள். பெற்றுப் பேணி வளர்த்த தாயைப் பணித்தாள். 'தரயே மைத்துனன மணந்து மணவாழ்க்கையேற்று. F08

உனக்கு மனமகிழ்ச்சி அளிக்கும் பேறு எனக்கு இப்பிறவி யில் வாய்த்திலது. இப்பிறவியில் இவனை மணவேன்; மறுபிறப்பில் மணந்து மகிழ்வேன்” என உரைத்தாள். :உரைத்ததோடு நில்லாது, அன்றே கன்னித்தவம் மேற் கொண்டு விட்டாள்.

வெறுத்து அறம் நோற்கும் விசாகையின் முடிவு, தருமதத்தனுக்குத் தாங்கமாட்டா மனத்துயர் அளித்தது. தன் காதற்கோட்டை தகர்ந்துவிட்டது கண்டு கலங்கிக் கண்ணிருகுத்தான். க ச த லி ைய க் காணமாட்டாது காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ அவன் விரும்பவில்லை. அவ்வூர் வாழ்க்கையையே வெறுத்துவிட்டான் அவன். பிறந்து வளர்ந்து விளையாடிப் பேரின்பம் நுகர்ந்த மாநகரை மறந்து மதுரை செல்லத் துணிந்தான். புகார் நகரைவிட்டு நீங்குமுன், ஊரம்பலம் அடைந்து, தன் காதலிக்கு நேர்ந்த களங்கத்தைக் களைந்த கந்திற் பாவையை வணங்கி வாழ்த்தி விடைகொண்டான். பின்னர்ப் பெற்றதாயோடும், தந்தையோடும் புகார் நகரை வலம் வந்து வாயில் கடந்து வெளிப்பட்டான்.

மூவரும் மதுரை அடைந்தனர். மதுரை மாநகரத்து மங்கையருள், மனம் விரும்பும் ஒருத்தியை மணங்கொள் வான் மகன் என எண்ணி, அதற்காம் காலத்தை எதிர் நோக்கியிருந்தனர், தருமதத்தன் தாயும் தந்தையும். ஆளுல் அவன் உள்ளம், அவன் காதலியின் நினைவில் நிலைபெற்றிருந்தது. அவள் விரித்த பூங்குழலின் வனப் வில் வேட்கையுற்றுப்போன அவ்வுள்ளத்தை வேறு ஒருத்திபால் ஒப்படைத்தல் அவளுல் இயலாதாயிற்று; இப்பிறவியில் விசாகையை அல்லது வேறு மகளிரை இனத்தாலும் திண்டேன்.என உறுதி பூண்டான். காதல் 109

மறந்தான்; கடமையில் ஆழ்ந்துவிட்டான். தன்குல வொழுக்கையொட்டி வாணிகவாழ்க்கையை மேற்கொண் டான். கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல், தன் பொருளையும் பிறர் பொருளையும் ஒப்ப மதித்து வாணிகம் புரிந்தான்; அவன் வாழ்வில் வளம் கொழித்தது. மதுரைப் பேரரசின் மன்னர் மன்னனும் மதிக்கும் மாநிதிக்குரியளுைன். தருமதத்தனின் வாணிக அறம் பிறழா வாழ்வும், வற்ருப் பெருநிதியும் கண்டு. அரசன் அவன்பால் அன்புகொண்டான். அரசவைக்கு அழைத்து எட்டி எனும் பட்டமும், அதற்குரிய எட்டிப் பூவும் அளித்துப் பெருமை செய்தான்.

வாணிகவாழ்வில், அதன் வளர்ச்சியில் கருத்துடைய ளுய்த், தருமதத்தன் வாழ்நாளைக் கழித்து வந்தான். அவன் வாளுட்காலத்தில் அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டன. ஒருநாள் அவன் மனை புகுந்த அந்தணன் ஒருவன், தருமதத்தன் மனை வாழ்க்கைதரும் மாட்சி யிழந்தவளுதல் அறிந்தான். வான் நிதி படைத்து, வரையாது வழங்கி அறம் பல ஆற்றும் தருமதத்தனுக்கு மனக்குரிய மங்கலம் இன்மை அறிந்து மனங் கலங்கி, *மா நிதிக் கிழவா! வாழ்க்கைத்துணை இன்றி, நீ ஆற்றும் பேரறம் எண்ணிலாதன ஆயினும் அவை தமக்குரிய பயனை உனக்குத் தாரா, பத்தினி இல்லோர் பல அறம் புரியினும், புத்தேள் உலகம் புகார்; ஆகவே கழிந்ததை . மறந்து, காவிரிபபூம்பட்டினத்திற்கு இப்போதே விரைந்து சென்று, விசாகையை வரைந்து வான்புகழ் பெறுவாயாக' எனக் கூறி, மனே வாழ்க்கையின் மாண்பினை அவன் உளம்கொளச் செய்தான்.

அந்தணன் கூறிய அறிவுரை, தருமதத்தனின் அகத் திருகள் அகற்றியது. அவன் அன்றே மதுரை நீங்கி, #10

தன் மனங்கவர்ந்த விசாகை இருந்து வாழும் புகார் அடைந்தான். அன்று சென்ற அத்தான் பிறந்த பேரூர்க்கு மீண்டான் என்பதை விசாகை அறிந்தாள். கன்னி மாடத்தை விட்டு வெளிவந்து அவனை வரவேற் அருள். தவவாழ்க்கையால் அவள் உள்ளம் தூய்மை -யடைந்துளது. அறனல்லன அறியாநெறி முறையால் அவன் உள்ளமும் தூய்மை வாய்ந்து திகழ்கிறது. இந் திலையில், ஒருவரையொருவர் காண்பதைக்கண்டு உரை :பாடுவதை உலகோர் பழியார் என உணர்ந்தாள் விசாகை அதனுல் பலரும் காணத், தருமதத்தனைச் சென்று கண்டாள். அடையாளம் தெரியாதவாறு ஆண்டால் முதிர்ந்த அவன் உருவைக் கண்ணுற்ருள். பின்னர் அவன் உட்கருத்தை அவன் உரைக்க உணர்ந்தாள். உடனே, 'அன்ப! அன்று, ஒருவரையொருவர் கண்டு, காதல் கொண்டு கருத்திழந்து போனதற்குக் காரணமா யிருந்த நம் கவின், இன்று நம்மைவிட்டு அகன்று. விட்டது. ஒருவரை யொருவர் கண்டு கொள்ளவாறு, நம் உருவம் மாறுபட்டுவிட்டது. அறுபது ஆண்டுகளைக் கழித்துவிட்டாய் நீ; நறுமணம் வீச, ஐவகை வனப்பும். விளங்க வாரி விடப்பெற்ற என் கூந்தல் நரைத்து விட்டது. இளமை எங்கோ சென்று மறைந்தது. இன்ப வுணர்வுகளுக்கு உள்ளத்தில் இடம் இல்லை. ஆகவே, அன்ப நின்வாழ்க்கைத் துணையாகி உன் வேட்கையை நிறைவேற்றல் இப் பிறப்பில் இயலாது. வரும் பிறவியில் நின் அடித்தொழில் கேட்கும் அன்புடையளாவேன். அன்ப இளமை நில்லாது; யாக்கை நிகல்யாது; வற்ருப் பெருநிதி என வாயாரப் போற்றப் பெறும் வான் நிதியும் நில்லாது; புத்தேள் உலக இன்பத்தைப் புதல்வர்களும் தரவல்லரல்லர். அதை அறம் ஒன்றே அளிக்கவல்லது. அதுவொன்றே நிலைபேறுடையது. வரும் பிறவிக்கு 111

வழித்துணையாவதும் அதுவே. ஆகவே, அன்றறிவாம் என்னுது அறம் செய்யும் ஆக்கவழியில் செல்லுக நின் உள்ளம்' என உரைத்தாள்.

மனம் தெளிய, விசாகை உரைத்த மாற்றங்களைக் கேட்ட ன் தருமதத்தன். அவன் மனத்தைப் பற்றி வருத்திய மனவேட்கை அகன் றது. அறத்தாற்றில் சென்றது அவன் உள்ளம்; உடன் கொணந்த வான் பொருளே விசாகையால் ஒப்படைத்தான். இருவரும் கூடி, எண்ணிலாப் பேரறங்கள் பல புரிந்து பாரோர் போற்றப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.

மாணமே பெரிதென மதித்து, மணத்தை வெறுத்து, இளமைப் பருவத்து இன்பவுணர்வை அடக்கித் தன்னக் காத்துக் கொண்டதோடு, ஆண்டு அறுபதினுக்கு மேற் பட்டும், ஆசைகளை அடக்கமாட்டாது தன்னை அடைந்த தன் பழங் காதலனைப் பற்றி வருத்தும் பாசவலைகளை அறுத்து, அவனேயும் காத்து, தனக்கும், தன் கணவனல்ல குயினும் தன்னை மணக்கும் உரிமையும் உள்ளமும் உடையவயை தருமதத்தனுக்கும் நேர விருந்த பழியுரை களைப் போக்கிப்புகழை நிலைநாட்டி, "தற்காத்துத் தற் கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்வி லாள் பெண்' என்ற வள்ளுவர் வகுத்த அறத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய விசாகை வாழ்க! அவள் புகழ் பாரெங்கும் பரவுக! பயிற்சி

அடியில் கொடுத்துள்ள தலப்புக்களில் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் கதைகள், கட்டுரைகள்

எழுதுக.

8.

势。

HO.

11.

12.

$8.

ஆதிரை நல்லாளின் கற்புச் சிறப்பு

சாதுவனும் நாகர் தலைவனும் ஆதிரை இட்ட அமுதும் அமுத சுரபியும் ஆபுத்திரனும் அந்தணரும்

ஆபுத்திரனும் அமுதசுரபியும்:

புண்ணியராசனும் மணிபல்லவமும்

இரவிவன்மன் மகள் இலக்குமியும் மாதவி மகள் - மணிமேகலையும்

காயசண்டிகையின் யானைத்தீப் பெரும் பசி சுதமதியும் ഥങ്ങിശേഷു

உவவனஞ் சென்ற மணிமேகலை ഥങ്ങിഥേക്കു உதயகுமரனும் மணிமேகலா தெய்வத்தின் கதை விசாகையின் கன்னி நோன் 나

"https://ta.wikisource.org/w/index.php?title=சாத்தன்_கதைகள்/6._விசாகை&oldid=1350982" இலிருந்து மீள்விக்கப்பட்டது