சாவின் முத்தம்/தேம்பிய குறை

விக்கிமூலம் இலிருந்து

தேம்பிய குறை !


தின்னும்இதழ் பூரிக்க, நிலாமுற் றத்தில்
சீக்கிரமாய்ப் போயமர்ந்தேன் ‘குமுதம்’ வந்து,
“என்னஅத்தான் ஊர்ச்சேதி? அம்மர், அப்பா,
எல்லோரும் சுகந்தானா? போன நாளாய்
சின்னஒரு தூக்கம் உண்டா! இருட்டோரத்தில்
தூக்கிஎறிந் தேவிட்டுப் போய்விட் டீர்கள்!
கன்னத்தில் விளக்கேது! சிரிப்ப ணைத்துக்
காவலுக்குத் தென்றல்வந்து வேலை செய்தாள்!

அரும்பெடுத்தேன் தொடுப்பதற்கு! அதற்குள்
அத்தை
ஆருக்கு என்றதும்நான் கூம்பி விட்டேன்
பெரும்படையை முத்தமிடும் வாளை விட்டுப்
புருஷரெலாம் போயேந்தும் பெண்சி ரிப்பில்,

கரும்பைத்தான் சுவைக்கின்றார்! நான் உங்கட்
குக்
கருவேலம் பழந்தானே? முந்தா நாளே
வருவதாய்ச் சொன்னீர்கள். அன்பி ருந்தால்
மனதுக்கு இறகு முளைக் காதா!” என்றாள்.

‘குன்றுக்கும் சிரிப்புண்டு!’ என்றேன். “அத்தை,
கண்மூடி விட்டார்கள் அத்தான்” என்று
புன்னகையில் சொல்லிழுத்து, உதடு ஏறிப்
புதுப்பாடம் வாங்குகின்றாள்! அமுத வட்டம்
ஒன்று எழும்! அதில் விழிக்கும்ஈர முத்தம்!
‘உந்தும்மணி ஓடை,என்று இதழ்கள் சாய்க்கும்!
தின்றெடுத்தேன் வருவாயை அழகின் ஈடு
சீக்கிரத்தில் துள்ளிவந்து கணக்கில் சேரும்!

“வயிரத்தின் கிழிசலடி உதடு!” என்றேன்.
“வளர்கின்ற செந்தமிழை வாழ்த்த!” என்றாள்,
“பயிர்போன்ற மீள்விழியில் புறாக்கள்?” என்
றேன்.
“உயிர்ச்சேதி எடுத்துவரும் பாங்கி!” என்றாள்.
துயரத்தால்; சீழ்பிடிக்கும் மதத்தால்? குட்டைச்
செய்கைகளால் - தேய்ந்துவரும் எளியோர்
கூட்டம்
உயர்கின்றநாள் எந்நாள்? முத்துப் போலே
ஓர்சேதி காதலரே! என்றாள் கேட்டேன்!

“நடுஇரவுச் சிங்கத்தின் வலிமை, இந்த
நாட்டுக்கு மிகவுண்டு! நமது தோளின்

முடிவெல்லாம் கொக்கரிக்கும் வேகம்! வாளின்
முகமெங்கும் விஷக்கனலின் பாய்ச்சல்!
போரைக்
கொடுத்துவரும் அதிர்ச்சியிலே உலகே வந்து
குறுக்கிடினும் தூள்! தூள்!! தூள்!!! ரத்தத்
தூள்தான்!
துடிக்கின்ற நம்இளமை - வேங்கைக் கும்பல்
சுடுகாட்டை அமைத்துவிடும் பகைக்கு,என்று


எழுந்திட்டான் ஓர்வீரன்! ஆவே சத்தில்
இறங்கிற்றுப் பட்டாளம்! நெருப் பெடுத்துக்
கொழுந்துசெயும் விழிபறக்க, ரத்த வாட்கள்
கோடுவைத்துக் காட்டிற்றுப் பகையின் மேலே!
அழுந்திற்று ஆர்ப்பாட்டம்! மீட்சி ஏந்தி
ஆடிற்றுப் பேராண்மை!” என்றாள். நானும்:
விழுந்தடித்து வருகின்ற கதை சுவைத்து
விடைகேட்டேன் முழுநிலவை! தந்தாள்!
தின்றேன்!

==[தொகு]