சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/004-010

விக்கிமூலம் இலிருந்து


41. மறைவாக உண்ணும் விருந்தளிப்பவன்

விருந்தினர்கள் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது வீட்டுக்காரன் உள்ளே சென்று முதன் முதலில் விருந்துணவை மறைவாகச் சுவைப்பதும் வழக்கம். ஒருமுறை விருந்தினர்களில் ஒருவன் வீட்டுக்காரன் உள்ளே சென்று மறைவாக விருந்துணவை உண்பதைக் கவனித்துவிட்டு, எல்லோரும் அறியும் வண்ணம் “இந்த விருந்துண்ணும் கூடம் மகத்தானது, ஆனால் எல்லாத் தூண்களும் குறுக்குச் சட்டங்களும் கட்டைகளும் கரையானால் தின்னப்படுகின்றன!” என்று உரக்கக் கூவினான்.“என்ன? என்ன” உணவை மறைவாக உள்ளே உண்டு கொண்டிருந்த வீட்டுக்காரன் வெளியே, ஒடிவந்தான். வந்தவன் “எங்கே கரையான்?” என்றான். “நல்லது அவற்றை நீங்கள் காணமுடியாது” என்றான் விருந்தினன். அவன் மேலும் “உண்பதெல்லாம் இங்கே உள்ளேதான் நடைபெறுகின்றன” எனத் தொடர்ந்தான். அந்த மனிதனின் மனத்தில் தைக்கும்படி விருந்தினன்.

42. திருடனிடமிருந்து தப்பிக்க

அறியாமைமிக்க மனிதன் ஒருவன் தன் வீட்டினுள் திருடன் ஒருவன் நுழைவதைக் கண்டான். விரைந்து சென்று “அனுமதி இல்லை” என்னும் வாசகம் எழுதிய பலகையை அறையின் முகப்பில் ஒட்டினான். ஆனால், பின்புறமுள்ள அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்படுவதைக் கண்டதும் “வெளியே செல்ல அனுமதி இல்லை” என்ற வாசகத்தை ஒட்டினான். பின்னர் உட்புற முள்ள அறையினுள் சென்று நடப்பதை மறைந்திருந்து கவனித்தான். அந்த அறிவிப்பு வாசகங்களை மீறித் திருடன் உள்ளே நுழைந்ததைக் கண்டதும், பயந்து கழிப்பறையினுள் சென்று மறைந்து கொண்டான். திருடனோ எதிர்பாராத வகையில் கழிவறை நோக்கிச் சொன்று கொண்டிருந்தான். இதனைக் கண்டு மேலும் கலக்கமுற்ற அந்த மனிதன் கழிவறைக் கதவினைக் கையினால் பலமாக அழுத்தி பிடித்துக் கொண்டு “கழிவறை உள்ளே ஏற்கனவே ஆள் இருக்கிறது” என்று கத்தினான்.

43. தவிர்க்க முடியாத எட்டாவது

மது அருந்த ஆசைகொண்டாள் ஒரு இல்லத்தரசி.ஆனால் அவள் கணவனோ அவள் ஆசையை நிறைவேற்ற மறுத்தான். அவன் சொன்னான் “குடும்பம் நடத்த ஏழு பொருள்கள்தான் இன்றியமையாதவை, அவை; விறகு, அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, பருப்பு, புளி, தேயிலை என்று தான் சொல்லப்படுகிறது. மது அந்தக் குறிப்பில் காணப்படவில்லையே” என்று தன் மறுப்புக்கு விளக்கம் தந்தான் கணவன்.

சினமுற்ற மனைவி “குடும்பம் நடத்தத் தொடங்கும் முன்பே, மதுவை முந்திய இரவே கொண்டுவரப்பட வேண்டும், அப்படியானால் மதுவை எட்டாவது தவிர்க்க முடியாத பொருளாக இணைத்துக் கொண்டால் என்ன? என்று எரிந்து விழுந்தாள் கணவனிடம்.

44. தீயினால் சுட்டப் புண்

மதிமிஞ்சிக்குடித்தபின், மயங்கி விழுந்து தூங்கினான் கிழவன் ஒருவன். குளிர் காலமாதலால் குளிர்காய அடுப்பொன்றைத் தன் படுக்கையின் கீழே வைத்திருந்தான். போதையில் தன் கால்கள் இரண்டினையும் அனலுக்கருகில் வைத்தவாறு துங்கினான். அன்றிரவு அனல்பட்டுக் கால்

ஒன்று கருகியது. காலையில் கருகிய காலைத் தன் குடும்பத்தவரிடம் காட்டி “நான் தான் போதையில் தூங்கினேன்; எனவே கால் கருகுவதைக் என்னால் உணர முடியவில்லை. ஆனால் உங்களுக்கெல்லாம் என்ன நடந்தது, இளைஞர்களாகிய நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை. கால் கருகி வீசுவதை நீங்களும் உணரவில்லையா? என்று கேட்டார்

முதியவர்.


45. தீய எண்ணங்கள்

படகொன்றில் பயணம் செய்தார் துறவி ஒருவர். அருகில் உடன் அமர்ந்து பயணம் செய்த பாவையை இச்சை-

யோடு பார்த்தார் துறவி. தன்னைக் காமவெறியோடு வைத்தகண் வாங்காமல் காண்பதைக் கண்ட அப் பாவை சினம் அடைந்தாள். தவற்றைத் தொடர்ந்தால் அடிப்பேன் என்று அச்சுறுத்தினாள்.

அஞ்சிய அடியார் அடக்கத்தோடு கண்களை மூடிய வண்ணம் அமர்ந்திருந்தார். படகு கரைசேர்ந்ததும் அப்பாவை அடியாரை அடித்தாள். தண்டனையின் காரணம் அறியாது திருதிருவென்று விழித்தத் துறவி “இப்போது நான் தவறேதும் செய்யவில்லையே; பின் ஏன் என்னை அடிக்கிறீர்கள்?” என்று வினவினார். “மூடிய விழிகளுக்குள்ளே நீங்கள் என்னைக் கண்டீர்கள் அது திறந்த கண்களால் காண்பதினும் கொடிய பாவம்” என்றாள் அப்பாவை.

46. நலமான இறப்பு

மருத்துவம் பயின்ற மாணவன் ஒருவன் மருந்துகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் இதர விளைவுகள் பற்றியும் கற்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. நோயாளியின் நாடித் துடிப்பினைக் கணிந்தவுடனேயே மருந்தினைக் குறித்துக் கொடுத்து அருந்தும்படித் தன் நோயாளிகளிடம் சொல்லிவந்தான். அதன் விளைவாக பற்பல நோயாளிகள் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் சாக்காட்டிற்கு மருத்துவரே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். அப்போது மருத்துவர் “நோயில் வாடி மடிவதைக் காட்டிலும், நலமாய் சாவதே சிறந்தது என்று எண்ணி, அவர்கள்மீது கொண்ட இரக்கத்தால் அவர்களை நலமாய் இறக்கச் செய்தேன்” என்றார்.

47. இருக்க ஓர் இருக்கை வேண்டும்

இரண்டு உடன்பிறந்தவர்கள். மூத்தவர் செல்வர். இளையவர் எளியவர். “நீ எப்படி செல்வன் ஆனாய்” இளையவன் கேட்டான். “பன்றிகளையும் ஆடுகளையும் கடவுளுக்குப் படைத்தேன். பணக்காரன் ஆனேன்” என்றான் மூத்தவன்.

இளையவன் மனைவியிடம் வந்து, பணக்காரனாகும் முறையினைச் சொன்னான். அவளும் “அதனாலென்ன நம்மிடமும் நான்கு கால்கள் உள்ள நாற்காலிகள் இரண்டுள்ளன. பன்றிக்கும் ஆட்டிற்கும் பதிலாக இவ் இரண்டையும் இறைவனுக்குப் படைக்கலாம். இவற்றுக்கும் எட்டுக்-

கால்கள் உள்ளன” என்று சொல்லிப் பலிப் பொருளைக் காட்டினாள்.

மனைவி சொல்லே மந்திரம் என நினைத்த கணவனும் அவ்வாறே செய்தான். ஆனால் தெய்வமோ பலியைக் கண்டு கோபம் கொண்டது. சில நாள்களுக்குப் பின் மனைவி கணவனிடம் “உண்பதற்குக் கொடுக்க ஒன்றும் இல்லையென்றாலும், வந்த விருந்தினர்கள் அமர இரண்டு இருக்கைகளாவது இருந்தன. இப்போது அவையும் இல்லை” என்று சலித்துக் கொண்டாள்.

48. நலிந்த நல்வரவு

தங்கள் மதுக் கலயங்கள் காலியான பின்னும் நீண்ட நேரம் மதுக்கடையிலேயே அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் இருவரை நோக்கிக் கடைக்காரர் “கொண்டல் கருத்துவிட்டது; கனமழை வரப்போகிறது; வீட்டிற்கு விரைந்து செல்லுங்கள்” என்றார். அவ் இருவரில் ஒருவன் சொன்னான் “இதோ பார், மழை வருகிறது நாம் எங்கும் போகவேண்டாம்; மழை பெய்து முடியும் வரை நாம் இங்கேயே இருப்போம்!” என்று. மழை வருவதாகவும் இல்லை. அவர்கள் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை. வெறுப்புற்றக் கடைக்காரர் மீண்டும் அவர்கள் அருகில் வந்து “முகில் கலைந்து விட்டது. இனி மழை வராது. நீங்கள் செல்லலாம்” என்றார். இதனைக் கேட்டதும் அவ் இருவரில் ஒருவன் மற்றவனிடம், “இப்போதே போக வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறாய்? கவலைப்படும்படி புயல் ஒன்றும் வீசவில்லை. அமைதியாக இரு” என்றான். கடைக்காரர் செய்வதறியாது விழித்தார்.

49. ஒரு கோடிக்கதிபதியின் கவலைகள்

கோடிக்கதிபதி ஒருவன் தன் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். ஏராளமான நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்துத் தெரிவிக்க அவன் இல்லம் வந்திருந்தனர். அளவற்ற அன்பளிப்புகள் வந்து குவிந்தன. எங்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. எனினும் அந்த அதிபதியின் முகத்தில் வாட்டம் தோன்றியது. ‘ஏன்?’ என்று கவலைப்பட கேட்டார் வந்திருந்தவர்களில் ஒருவர். “கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவேளை நான் என் இரு நூறாவது பிறந்த-

நாளை கொண்டாடும் போது வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்களின் எண்ணும் பல நூறு மடங்கு இதனினும் அதிகமாக இருக்குமே. அவர்களையெல்லாம் நான் எப்படி வரவேற்றுச் சமாளிப்பேன் என்பது பற்றித்தான் கவலை கொள்கிறேன்” என்றான் அந்த கோடிக்கதிபதி.
50. அக்கறையற்ற தையல்காரன்

ஆடை ஒன்றிற்கு துணியினைக் கத்தரிக்க, தையல்காரன் அழைக்கப்பட்டான். வந்தவன் வேலையில் கவனம் செலுத்தாது, அக்கறையற்றுக் காணப்பட்டான். வாடிக்கையாளர் கேட்டபோது, “உங்களுக்குப் பொருந்தும் வண்ணம் துணியைக் கத்தரித்தால் எனக்கு எதுவும் மிஞ்சாது; ஒரு முழம் துணியை நான் எடுத்துக் கொண்டால், ஆடை அளவு உங்களுக்கு மிகவும் சிறியதாக இருக்கும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் தையற்காரன்.

51. மதுவிலக்கு

தனியார் விருந்தொன்றில் கலந்துகொண்டார் துறவி ஒருவர். துறவி புனிதமானவர் என எண்ணிய விருந்தளிப்பவன் “தங்களுக்கு மது பரிமாறப்பட வேண்டுமா?” என்று துறவியிடம் கேட்டான். “நான் கொஞ்சம் குடிப்பவன்தான். ஆனால் சைவ உணவை முற்றிலும் ஒதுக்குபவன்” என்றார் துறவி.