பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
சோனாலி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:07, 20 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

193



காதலி:போட்டோ எடுப்பமிண்ணு பல நாளும் சொன்ன மச்சன், போட்டோ எடுக்காம-என்னப் பொய் சொல்லி ஏய்க்கலாமா? சினிமாவுக்குப் போவமிண்ணு பல நாளும் சொன்ன மச்சான் சினிமாவுக்கு போகலாமே பாதையும் தெரியுதாமே காதலன்:செத்துப் பிழைச்சு நம்மlசினிமாவுக்குப் போகையிலே நல்ல படம் இல்லையின்னு நாசகாரன்சொல்லுதானே காதலி:கருத்துள்ள படமாருக்கும் கஷ்டங்கள் நிறைஞ்சிருக்கும் கருங்காலி பேச்சு கேட்டு கலங்க வேண்டாம் போவோம் மச்சான் வட்டார வழக்கு: கருங்காலி-சேர்ந்திருப்பதைக் கெடுப்பவன். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி நெல்லை மாவட்டம்.

பிரிந்தவர்கூடினர்

கிராமத்தில் ஆண்டு முழுவதும் விவசாயத் தொழிலாளருக்கு வேலையிராது. எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டொருவர் வேலை தேடிப் பலவிடங்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் இளைஞர்கள் தம் காதலியரைப் பிரிந்திருக்க வேண்டும். மழை தண்ணீர் உண்டானால் ஊருக்குத் திரும்பி நிலத்தைப் பயிர் செய்வார்கள். வேலை தேடிச் சென்ற இளைஞன் ஊர் திரும்பினான். தன்னிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான் என்று அவளுக்கு அவன் மீது கோபம். புஞ்செய் நிலத்தில் அவன் வேலைக்கு வருவதை அவள் காண்கிறாள். அவள் முகத்தைத் திருப்பி கொள்கிறாள். உள்ளுர மகிழ்ச்சிதான். அவன் அவள் ஊடல் தீரப் பசுமையான நினைவுகளைக் கிளறி காதல் ஊற்றைச் சுரக்குமாறு செய்கிறான்.