சிலப்பதிகாரக் காட்சிகள்/மதுரைப் பிரயாணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. மதுரைப் பிரயாணம்

கண்ணகி கண்ட கனவு

மாதவியை விட்டுப் பிரிந்த கோவலன் எங்குச் சென்றான்? அவன் நேரே கண்ணகி இருந்த மாளிகையை நோக்கிச் சென்றான். அவன் சென்று கொண்டிருந்த பொழுது, கண்ணகி தன் பார்ப்பன தோழியான தேவந்தி என்பவளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்;[1] “தோழி, நானும் என் கணவனும் ஒரு பெரிய நகரத்திற் புகுந்தோம். அங்கு வீண்பழி ஒன்றை என் கணவர் மேல் சுமத்தி அவருக்குத் தீங்கு இழைக்கப்பட்டது. பின்னர், யான் அந்நகரக் காவலன் முன்சென்று வழக்குரைத்தேன். ஆதலால், அவ்வரசனுக்கும் அவ்வூருக்கும் தீங்கு நேரிட்டது. இக்கனவு தீக்கனவு ஆதலின் நினக்குயான் சொல்லாதிருந்தேன். இவ்வாறு தீவினையுற்ற என்னுடன் பொருந்திய கணவனுடனே யான்பெற்ற நல்ல திறத்தை நீ கேட்பாய் ஆயின், அது நினக்கு நகையைத் தரும்" என்றாள்.

'தெய்வம் தொழாள்'

அதுகேட்ட தேவந்தி, “அம்மா. நீ வருந்தாதே. காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இரண்டு. குளங்கள் இருக்கின்றன. அவை சோமகுண்டம் சூரிய குண்டம’ என்னும் பெயர்களைப் பெற்றவை. அக்குளங்களில் நீராடி மன மதன் கோயிலிற் சென்று வழிபடுக; அங்ங்ணம் நீராடி வழிபட்டவர் இமமையிலும் மறுமையிலும் கணவனுடன் இன்பமாக வாழ்வர்” என்றாள். கண்ணகி நகைதது, “அங்ங்ணம் துறைமூழ்கித் தெயவம தொழுதல் எங்கடகு இயலபன்று,” என்று சொல்லி இருந்தாள்.

கண்ணகி அன்பு

அவ்வமயம் கோவலன் அங்குத தோன்றினான். அவனைக் கண்ட தேவந்தி தன அறைக்குச் சென்று விட்டாள். கோவலன், தன் பிரிவினால் வாட்டம் அடைந்த கண்ணகியைக கண்டு மனம் வருநதி, “யான் தவறான ஒழுக்கததில ஈடுபடட த. னால முன்னோர் தேடிய பொருளை எலலாம் தொலைத்து வறுமையுற்றேன். இதநிலை எனக்கு. நாணதன்த்த் தருகின்றது” என்றான மாதவிக்குத் தரத் தன்னிடம் பொருள் இலலை ஆதலன் இங்ங்ணம் மனம் வருந்திக் கூறுகிறான்’ எனறு கணணகி கருதினாள். அதனால அவள் புன்னகை புரிந்து, இன்னும என் காற்சிலம்புகள் இருக்கன் றன. அவற்றைக் கொள்க: என்றாள்.

கோவலன் யோசனை

உடனே கோவலன, பெண்ணே, நாம் வேற்றுார்க்கு செல்லலாம். அங்குச் சென்று உன்கோவலன் - கண்ணகி மதுரைப் பிரயாணம்

சிலம்பை விற்றுவரும் பணத்தை முதலாகக் கொண்டு வாணிகம் செய்து. இழந்த பொருளை ஈடுசெய்யலாம். இன்று இரவின் கடையாமத்தில் நீ என்னுடன் வருக; நாம் பீடுமிக்க மாட மதுரைக்குச் செல்வோம்’ என்றான். கண்ணகி கற்புடை மடந்தை ஆதலின் கணவன் விருப்பப்படி மதுரை செல்ல உடன்பட்டாள்.

புகாரிலிருந்து உறையூர் வரை

கண்ணகியும் கோவலனும் மறுநாள் விடியற் காலையில் ஒருவர்க்கும் தெரியாமல் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி வழி நடந்தனர்; வணிக அரசன் மகளாகப்பிறந்து மற்றொரு வணிக அரசன் மகனுக்கு மனைவியாகி வழி நடந்து அறியாத உத்தமி கால் கடுக்க வழி நடந்தாள் அவளது வழிநடைத் துன்பத்தை மாற்றக் கோவலன் பல செய்திகளைக் கூறிக் கொண்டே வழி நடந்தான். இருவரும் பல இடங்களில் தங்கித் தங்கி நடந்தனர்; நடந்து சீரங்கத்தை அடைந்தனர்; அங்கிருந்த சோலையில் மாதவர் இருந்து சமய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர் அங்கு இருந்தவருள் கவுந்தி அடிகள் என்ற பெண் துறவி யார் கோவலனையும் கண்ணகியையும் அன்புடன் வரவேற்றனர்; அவர்கள் வரலாற்றைக் கேட்டு அறிந்து ஆறுதல் கூறினர். மறுநாள் அவரும் அவர்களோடு மதுரை செல்லப் புறப்பட்டனர்; புறப்பட்டு வழி நடந்து உறையூரில் தங்கினர்.

மூன்று வழிகள்

மறுநாள் அவர்கள் உறையூறைவிட்டு மதுரை நோக்கி நடக்கலாயினர்; நடுப்பகலில் ஒரு சோலையில் தங்கி இளைப்பாறினர். அப்பொழுது அங்கு. மறையவன் ஒருவன் பாண்டியனை வாழ்த்திக் கொண்டு வந்தான். அவன் சேர நாட்டவன்; மாங்காடு என்ற ஊரினன்: வேங்கடத்தில் திருமாலைத் தரிசித்துவிட்டுச் சீரங்கம் வந்தான்; அங்கு பெருமாளைச் சேவித்துக் கொண்டு வந்தான். அவன், “இங்குள்ள பாலைநிலத்தைக் கொம்பாளுர் வழியே கடந்து சென்றால், மூன்று வழிகள் செல்வதைக் காண்பீர்கள். வலப்பக்க வழி பாண்டியனது சிறுமலைத் தொடர் வழியாக மதுரைக்குச் செல்லும்; இடப்பக்க வழியில் காடுகள் பலவாகும்; அவற்றைக் கடந்து அழகர் மலைப் பக்கமாகச் சென்றால் மதுரையை அடையலாம்; நடுவழியில் செல்லல் நல்லது; ஆயின் அங்கு ஒரு தெயவம மாறுவேடம் இட்டு வந்து மயக்கும்; எசசரிக்கையாகச் செல்லுங்கள்” என்று கூறி அகன றான்.

தேவதையின் விளையாட்டு

பின்னர் மூவரும் நடுவழியிற் சென்றனர்; கோவலன் தண்ணிர் கொண்டு வரத் தனியே சென்றான், அப்பொழுது அங்கு, மறையவன உரைத்த தெய்வம் வசந்தமாலை வடிவத்தில் தோன்றியது; தோன்றி மாதவியைப் பற்றி கோவலனிடம் பேசியது. கோவலன் உடனே இது தேவதை’ எனபதை எண்ணி, மந்திரம் செபித்தான். அஃது அவ்வளவில் மறைந்தது. பின்னர்க் கோவலன் மற்ற இருவருடன் வழிநடந்து பாலை நிலத் தேவதையாகிய துர்க்கையின் கோயிலை அடைந்தனன்.

கண்ணகியைப் புகழ்தல்

அப்பொழுது துர்க்கை அம்மனுக்கு மறவர் பலியிட்டு வழிபட்டனர். அங்குத் தெய்வம் ஏறிய ஒருத்தி, கண்ணகியைச் சுட்டி, “இவள் கொங்கச் செல்வி; குடமலையாட்டி; தென் தமிழ்ப்பாவை: செய்தவக் கொழுந்து; உலகிற்கு ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணி’ எனக் கூறினாள். கண்ணகி அப்புகழுரைக்கு நாணிக் கணவன் பின் சென்று நின்றாள்.

கெளசிகன் துாது

பின்னர் மூவரும் அக்கோவிலை விட்டு புறப் பட்டு வழி நடந்தனர்; வழியில் மறையவர் வாழ்பதியில் தங்கினர். கோவலன் இருவருக்கும் தண்ணிர் கொண்டு வரப் போனான். அங்குக் கெளசிகன் என்ற பார்ப்பனன் எதிர்ப்பட்டு, “நின் பிரிவால நின் பெற்றோரும் சுற்றத்தவரும் பெருந்துயர் உறுகின்றனர்; நின் பிரிவினால் மாதவி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கின்றாள்; நினக்கு இக்கடிதம் எழுதிக் கொடுத்தாள்” என்று கூறிக் கடிதம் தந்தான். கோவலன் அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தான்: அக்கடிதம் காதலி காதல னுக்கு எழுதுவது போலவும் மகன் பெற்றோர்க்கு எழுதுவது போலவும் பொதுப்பட அமைந் திருநதது. அதனால் கோவலன் அதனைத்தான் எழுதியதாகக் கூறித் தன் பெற்றோரிடம் தருமாறு வேண்டி அகன்றான்.

புறஞ்சேரியில் தங்குதல்

பிறகு கோவலன் முதலிய மூவரும் வழிநடந்து பீடுமிக்க மாட மதுரையை நெருங்கினர்; நெருங்கி சமண முனிவர்கள் தனித்தனி இருக்கைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த நகர்ப்புறத்தே, ஒரு சோலையில் தங்கினர்.

  1. கணவனுடன் சுவர்க்கம் புகுவதாகக் கனவிற் கண்டமை.