சிலப்பதிகாரம்/நூற் கட்டுரை
Jump to navigation
Jump to search
சிலப்பதிகாரம்[தொகு]
நூற்கட்டுரை[தொகு]
குமரி வேங்கடங குணகுட கடலா
ம்ண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10)
அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.
- நூற் கட்டுரை முற்றும்
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முற்றும்[தொகு]
- பார்க்க
சிலப்பதிகாரம் [[]]