சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/1.மங்கல வாழ்த்துப் பாடல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிலப்பதிகாரம்[தொகு]

முதலாவது புகார்க்காண்டம்[தொகு]

முதற் காதை

1.மங்கல வாழ்த்துப் பாடல்[தொகு]

(சிந்தியல் வெண்பாக்கள்)

பாடல் பாடல் \ சொல் பிரிப்பு
திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்த லான்
:திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
:கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடைபோன்று இவ்
:அங்கண் உலகு அளித்தலான்.


ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதுங்
காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்
:ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
:காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
:மேரு வலம் திரிதலான்
                          

                    
                  
                                  

மாமழை போற்றுது மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேனின்று தான்சுரத்த லான் மேல்நின்று தான் சுரத்த லான்.


பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10 பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோ வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
டோங்கிப் பரந்தொழுக லான் ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

ஆங்கு ஆங்கு,
பொதியி லாயினு மிமய மாயினும் பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
யொடுக்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின் ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
யதனால் 20 அதனால்,

நாகநீ ணகரொடு நாகநா டதனொடு நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில் போகம் நீள் புகழ் மன்னும் புகார்நகர் அது தன்னில்
மாகவா னிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்ப மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ரீகைவான் கொடியன்னா ளீராறாண் டகவையா ஈகை வான் கொடி அன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்,
ளவளுந்தான் ::: அவளும்தான், 25

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் போதில்ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்
தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும் தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாண்மன்னோ காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ,
வாங்கு 30 ஆங்கு,

பெருநிலம் முழுதாளும் பெருமகன் றலைவைத்த பெரு நிலம் முழுதாளும் பெரு மகன் தலைவைத்த
வொருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பா வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
னிருநிதிக் கிழவன்மக னீரெட்டாண் டகவையா, இரு நிதி கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்
னவனுந்தான், 35 அவனும் தான்

மண்டேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்:::மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம்
பண்டேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக்:::பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்:::கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக் காதலால்
கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ:::கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ.
அவரை,40:::அவரை

இருபெருங் குரவரு மொருபெரு நாளால்:::இரு பெரும் குரவரும் ஒரு பெரு நாளால்
மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி:::மண அணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ:::யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்.:::மா நகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45:::அவ் வழி


முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணில வெண்குடை:::முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன,முறை எழுந்தன பணிலம்,வெண் குடை
அரசெழுந்ததொர் படியெழுந்தன வகலுண்மங்கல வணியெழுந்தது:::அரசு எழுந்ததொர் படி எழுந்தன,அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து:::மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்:::நீல விதானத்து நித்திலம் பூம் பந்தர் கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்:::வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச் 50


சாலி யொருமீன் றகையாளைக் கோவலன்:::சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்:::மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்க ணோன்பென்னை:::தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனிய:::விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
ருரையினர் பாட்டின ரொசிந்த நோக்கினர்:::உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் 55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதைய:::சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ரேந்திள முலையின ரிடித்த சுண்ணத்தர்:::ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை:::விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்:::முளை குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்:::போதொடு விரி கூந்தல் பொலன் நறு கொடி அன்னார் 60

காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல்:::காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்திச் சின்மலர் கொடுதூவி:::தீது அறுக என ஏத்திச் சில மலர் கொடு தூவி
யங்க ணுலகி னருந்ததி யன்னாளை:::அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி யேற்றினார் தங்கிய:::மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
விப்பா லிமயத் திருத்திய வாள்வேங்கை:::இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65

உப்பாலைப் பொற்கோட் டுழையதா வெப்பாலுஞ்:::உப்பாலைப் பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பிய:::செரு மிகு சினம் வேல் செம்பியன்
னொருதனி யாழி யுருட்டுவோ னெனவே.:::ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

மங்கலவாழ்த்துப் பாடல் முற்றியது

பதிகம்
புகார்க் காண்டம்
உரைபெறு கட்டுரை
2.மனையறம்படுத்த காதை