சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/24.குன்றக் குரவை
Appearance
வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து, நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்: வந்தால், மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே.
கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல் மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்- அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே ;
குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும், அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்- துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே.என்று
சிலப்பதிகாரம்
[தொகு]மூன்றாவது வஞ்சிக் காண்டம்
[தொகு]- உரைப்பாட்டுமடை
- 1.
- குருவியோப்பியுங் கிளிகடிந்துங் குன்றத்துச்சென்று வைகி
- அருவியாடியுஞ் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்
- மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
- முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
- மணமதுரையோ டரசுகேடுற வல்வினை வந்துருத்தகாலை /5/
- கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
- என்றலு மிறைஞ்சியஞ்சி யிணைவளைக்கை யெதிர்கூப்பி
- நின்ற வெல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
- குன்றவருங் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
- இவள்போலு நங்குலக்கோ ரிருந்தெய்வ மில்லையாதலின் /10/
- சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
- தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
- நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
- நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
- தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே /15/
- தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
- கொடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
- குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
- பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
- பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் /20/
- ஒருமுலை யிழந்த நங்கைக்குப்
- பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே.
- 2. கொளுச்சொல்
- ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண்
- அஞ்சனப் பூழி அரிதாரத் தின்னிடியல்
- சிந்துரச் சுண்ணஞ் செறியத்தூய்த் தேங்கமழ்ந்து
- இந்திர வில்லின் எழில்கொண்டு இழுமென்று
- வந்தீங்கு இழியு மலையருவி யாடுதுமே.
- 3.
- ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி
- அஞ்சலோம்பு என்று நலனுண்டு நல்காதான்
- மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே.
- சிறைப்புறம்
- 4.
- என்றொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைக்
- கற்றீன்றி வந்த புதுப்புனல்
- கற்றீன்றி வந்த புதுப்புனல் மற்றையார்
- உற்றாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
- 5.
- என்னொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
- பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
- முன்னாடி னோந்தோழி நெஞ்சன்றே
- 6.
- யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
- போதாடி வந்த புதுப்புனல்
- போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
- மீதாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
- பாட்டுமடை
- 7.
உரையினி மாதராயுண்கண் சிவப்பப்
- புரைதீர் புனல்குடைந்து ஆடினோம் ஆயின்
- உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
- குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி
- தெய்வம் பராஅயது
- 8.
- சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
- ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே
- பாரிரும் பௌவத்தினுள்புக்குப் பண்டொருநாள்
- சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே. (1)
- 9.
- அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும்
- இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
- பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
- மணிவிசும்பில் கோனேத்த மாறட்ட வெள்வேலே. (2)
- 10.
- சரவணப்பூம் பள்ளியறைத் தாயமார் அறுவர்
- திருமுலைப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே
- வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
- குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே. (3)
- பாட்டுமடை (அறத்தொடு நிலை)
- 11.
- இறைவளை நல்லா யிதுநகையா கின்றே
- கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
- அறியாள் மற்றுஅன்னை அலர்கடம்பன் என்றே
- வெறியாடால் தான்விரும்பி வேலன்வருக என்றாள் (1)
- 12.
- ஆய்வளை நல்லா யிதுநகை ஆகின்றே
- மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
- வருமாயின் வேலன் மடவன் அவனிற்
- குருகுபெயர்க் குன்றங் கொன்றான் மடவன் (2)
- 13.
- செறிவளைக்கை நல்லாய் இதுநகை ஆகின்றே
- வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்
- வேலன் மடவன் அவனினும் தான்மடவன்
- ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; (3)
- 14.
- நேரிழை நல்லாய் நகையாம் மலைநாடன்
- மார்புதரு வெந்நோய் தீர்க்கவரும் வேலன்
- தீர்க்கவரும் வேலன் தன்னினும் தான்மடவன்
- கார்க்கடப்பம் தார்எம் கடவுள் வருமாயின் (4)
- பாட்டுமடை
- 15.
- வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
- நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
- ஆலமர் செல்வன் புதல்வன்வரும் வந்தால்
- மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே (5)
- 16.
- கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
- மயிலியன் மடவரன் மலையர்தம் மகளார்
- செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
- அயன்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே (6)
- 17.
- மலைமகள் மகனைநின் மதிநுதன் மடவரல்
- குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
- நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
- பலரறி மணம்அவர் படுகுவர் எனவே. (7)
- 18.
- குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
- அறுமுக ஒருவநின் அடியிணை தொழுதேம்
- துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
- பெறுகநன் மணம் விடு பிழைமணம் எனவே (8)
- பாட்டுமடை
- 19.
- என்றுயாம் பாட மறைநின்று கேட்டருளி
- மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
- சென்றேன் அவன்தன் திருவடி கைதொழுது
- நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி.
- 20.
- கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
- மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்
- அறுமுக மில்லை அணிமயில் இல்லை
- குறமக ளில்லை செறிதோள் இல்லை
- கட்ன்பூண் தெய்வமாக நேரார்
- மடவர் மன்றவிச் சிறுகுடி யீரே.
- பாட்டுமடை
- 21.
- என்றீங்கு
- அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டு
- புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
- மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
- முலையினான் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
- தலைவனை வானோர் தாமராருங் கூடிப்
- பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
- நிலையொன்று பாடுதும் யாம்.
- 22.
- பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
- பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
- கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
- தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
- தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
- மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே.
- 23.
- பாடுற்றுப்
- பத்தினிப்பெண்டிர் பரவித் தொழுவாளோர்
- பைத்தரவு அல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
- பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
- உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே.
- 24.
- வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்த
- கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
- கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
- வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.
- 25.
- மறுதர வில்லாளை ஏத்தி நாம்பாடப்
- பெறுகதில் அம்ம இவ்வூரும் ஓர்பெற்றி
- பெற்றி உடையதே பெற்றி உடையதே
- பொற்றொடி மாதர் கணவன் மனங்காணப்
- பெற்றி உடையதுஇவ் வூர்.
- 26.
- என்றுயாம்
- கொண்டு நலை பாடி ஆடும் குரவையைக்
- கண்டுநம் காதலர் கைவந்தார் ஆனாது
- உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
- வில்லெழுதிய இமயத்தொடு
- கொல்லி ஆண்ட குடவர் கோவே.
- இருபத்துநாலாவது குன்றக்குரவை முற்றும்.
[[]] [[]]